
நாட்டில் முதன் முறையாக ஹைட்ரஜன் ரயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை ஐ சி எப் பேக்டரி மூலம் இந்த ரயில் உருவாக்கப்பட்டுள்ளது. 118 கோடி செலவில் இந்த ஹைட்ரஜன் ரயில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை சோதனை செய்வதற்காக வேறொரு இன்ஜின் மூலம் இந்த ரயில் ஹரியானா மாநிலத்துக்கு சோதனை ஓட்டத்திற்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த ரயில் நீராவியை மட்டுமே வெளியிடும் அதனால் சுற்றுப்புற சூழ்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை. மின்சாரத்தில் இயங்கும் ரயிலை விட இது மிகவும் பாதுகாப்பானது.
முதலில் முக்கிய நகரங்களில் இருந்து குறுகிய தூரத்துக்கு மட்டுமே விடப்படும். அதாவது 50 கிலோ மீட்டர் முதல் 80 கிலோமீட்டர் வரை உள்ள இடங்களுக்கு மட்டும் இந்த ரயில் விடப்படும். இதில் பத்து பெட்டிகள் இருக்கும் ஒவ்வொரு பெட்டியிலும் 84 நபர்கள் பயணம் செய்யலாம். எஞ்சின் 1200 குதிரை திறன் கொண்டது .
அதிகபட்சமாக 110 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சோதனைக்காக கொண்டு செல்லப்பட்ட இந்த ரயில் ஹரியானா மாநிலம் சோனி பட்டு முதல் ஜிந்து வரை செல்லும் இந்த இடத்தில் மின் தடம் கிடையாது வயல் வெளியிலும் காட்டுபகுதியும் நிறைந்த பகுதி ஆகும்.
சோதனைக்கு பாதுகாப்பான இடமாக இந்த இடம் இருந்ததால் இதனை தேர்வு செய்து சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. பாதுகாப்புக்கு உகந்தது என்று தெரிந்த பின்னர் இந்த ஹைட்ரஜன் ரயில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.