
நெகிழ்வுத்தன்மைக் கொண்ட ஒளிரும் OLED விளக்குகள் INURU நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய புதிய கண்டுபிடிப்புகள் ஒவ்வொரு நாளும் உருவாகிக் கொண்டே வருகின்றன. எல்இடி விளக்குகளுக்கு மாற்றாக நெகிழ்வுத் தன்மை கொண்ட OLED மின்விளக்குகள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பெர்லினை மையமாகக் கொண்டு இயங்கும் மிகப்பெரிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ஒன்றான INURU நிறுவனம் புதிய கண்டுபிடிப்பு ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்கு ஒஎல்இடி என்று பெயரிடப்பட்டுள்ளது. இவை எல்இடி விளக்குகளை போன்று ஒளிரும் தன்மை கொண்டவை. மேலும் இவை நெகிழ்வுத் தன்மை கொண்டவை. இடத்திற்கு தகுந்தார் போல் வளைந்து கொண்டும், சுருண்டு கொண்டும் வெளிச்சம் அளிக்க கூடியது.
இவை எல்இடி விளக்குகள் பயன்படுத்தும் ஆற்றலை விட குறைவான ஆற்றலையே பயன்படுத்தும். ஒரு முறை பேட்டரியை சார்ஜ் செய்தால் 8 மணி நேரம் வரை ஒளிரும் தன்மை கொண்டவை. இவற்றை தொடுவதன் மூலமாகவும், அசைவுகள் மூலமாகவும் இயக்க முடியும். இது மட்டுமல்லாது இந்த OLED விளக்குகளை பாட்டில்கள், பெட்டிகள், ஆடைகள், விளம்பரப் பலகைகள் என்று பல இடங்களில் பயன்படுத்த முடியும். குறிப்பிட்ட ஒரு வாக்கியத்தை கூடுதல் முக்கியத்துவம் படுத்தும் வகையில் OLED விளக்கை பயன்படுத்தி ஒளிரூட்ட முடியும்.
பெரும் நிறுவனங்கள் வருங்காலத்தில் தங்கள் நிறுவனங்களினுடைய பொருட்களில் OLED விளக்குகளை பயன்படுத்த கூடும் என்று சொல்லப்படுகிறது. மேலும் இது குறைந்த விலை உடையதாகவும், மறுசுழற்சி செய்ய ஏதுவானது என்று இதை தயாரித்துள்ள INURU நிறுவனம் தெரிவித்துள்ளது.