iPad Mini: 2024 இறுதிக்குள் அறிமுகமாகும் ஆப்பிள் சாதனம்! 

iPad Mini
iPad Mini

2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய iPad Mini வெளியிடப்படும் என ப்ளூம்பெர்கின் பிரபல தொழில்நுட்ப ஆய்வாளரான மார்க் குர்மன் தெரிவித்துள்ளார். 

சமீபத்தில் நடந்த Let Loose ஈவென்டில் ஆப்பிள் நிறுவனம் தங்களது லேட்டஸ்ட் iPad Pro மற்றும் iPad Air ஆகிய இரண்டு சாதனங்களை வெளியிட்டது. ஆனால் அந்த ஈவென்டில் ஐபேட் மினி குறித்த எந்த அப்டேட்டும் வெளியிடப்படவில்லை. இதற்கு முன்னதாக 6th ஜெனரேஷன் ஐபேடு மினி கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல 2024 ஆம் இறுதியில் ஐபேடு மினி வெளிவரும் என மார்க் குர்மன் எனப்படும் ப்ளூம்பெர்க் ஆய்வாளர் கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் கூறியதாவது, “இந்த ஆண்டின் இறுதிக்குள் ஐபேடு மினி வெளிவரும். இந்த மிகச்சிறந்த டேப்லெட்டின் வேகம் மற்றும் செயல்திறன் சிறப்பாக இருக்கும் வகையில், நல்ல பவர்ஃபுல் சிப் செட்டுடன் வரும். ஆனால் அதில் வேறு ஏதாவது புதுமை இருக்குமா என்பது தெரியவில்லை. கடந்த 2021 முதல் ஐபேட் மினியில் எந்த புதிய அப்டேட்டும் இடம் பெறவில்லை என்பதால், இந்த ஆண்டு நிச்சயம் அதை நாம் எதிர்பார்க்கலாம். 

A15 பயோனிக் சிக் மூலமாக இயக்கப்படும் 2021ல் வெளியான ஐபேட் மினியின் ஸ்டோரேஜ் 256GB ஆகும். இந்த வேரியண்டின் விலை அப்போது 64,900 என வெளியானது. இப்போது வரவுள்ள 7th ஜெனரேஷன் ஐபேட் மினியில், A16 சிப்செட் கொண்டிருக்கலாம். மேலும் இதில் பெரிய டிஸ்ப்ளேவும் இடம் பெறலாம்” என அவர் கூறியது ஐபேட் பிரியர்களுக்கு குதூகலத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த வாரம் வெளியான ஐபேட் ஏர் 10.9 இன்ச் மற்றும் 13 இன்ச் டிஸ்ப்ளே வகைகளில், லிக்விட் ரெட்டினா ஸ்கிரீன் உடன் வருகிறது. மேலும் இது அதிக திறன்மிக்க Octa Core M2 சிப்சட்டைக் கொண்டுள்ளது. இத்துடன் வெளியான iPad Pro, 11 இன்ச் மற்றும் 13 இன்ச் டிஸ்ப்ளேக்கில் கிடைக்கிறது. இந்த மாடல் 2TB ஸ்டோரேஜுடன் M4 சிப்புடன் வருகிறது. 

இதையும் படியுங்கள்:
இரவில் அதிகமாக பரோட்டா சாப்பிடும் நபரா நீங்கள்? அச்சச்சோ! ஜாக்கிரதை!
iPad Mini

iPad Pro-வின் விலை 99,900 ரூபாயில் தொடங்குகிறது. அதேபோல iPad Air-ன் ஆரம்ப விலை ரூபாய் 59,900 ஆகும். இதைத்தொடர்ந்து வெளிவர உள்ள ஐபேட் மினியின் விலை பற்றிய விவரங்கள் வெளிவரவில்லை. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com