துருப்பிடிக்கும் இரும்பிலிருந்து மின்சாரம்! ஆற்றல் துறையில் புரட்சி செய்யும் புதிய அயன்-ஏர் பேட்டரி!

லித்தியம் பேட்டரிகளுக்கு மாற்றாக வந்துள்ள மலிவான மற்றும் பாதுகாப்பான சுற்றுச்சூழல் நட்பு தொழில்நுட்பம்.
அயன்-ஏர் பேட்டரி - Grid Energy Storage
அயன்-ஏர் பேட்டரி - Grid Energy StorageAI Image
Updated on

இரும்பின் துருப்பிடிக்கும் இயல்பை பயன்படுத்தும் அயன்-ஏர் பேட்டரி, மலிவு இரும்பு, நீர், ஆக்சிஜன் மூலமாக மின்சாரம் உருவாக்கி, 50–100 மணி நேரம் வரை புதுப்பிக்கத்தக்க ஆற்றலை சேமிக்க முடியும். தீ அபாயம், நச்சு வேதிப்பொருட்கள் இல்லாததால் குடியிருப்பு பகுதிகளிலும் பாதுகாப்பாகப் பயன்படுத்தலாம். கிரிட் அளவிலான நீண்டகால ஆற்றல் சேமிப்புக்கு இது சிக்கனமான மாற்று.

யன்-ஏர் (Iron-Air) பேட்டரி தொழில்நுட்பம் என்பது இரும்பின் இயற்கையான துருப்பிடிக்கும் தன்மையை அடிப்படையாகக் கொண்டு மின்சாரத்தை உருவாக்கும் ஒரு புரட்சிகரமான பேட்டரி தொழில்நுட்பமாகும்.

எப்படி வேலை செய்கிறது? 

இந்தத் தொழில்நுட்பம் ஒரு எளிய வேதியியல் சூழற்சியைப் பயன்படுத்துகிறது.

மின்சாரத்தை வெளியிடும் போது (discharging):

பேட்டரி காற்றில் உள்ள ஆக்சிஜனை உறிஞ்சி, உள்ளே இருக்கும் இரும்பைத் துருவா க(iron oxide) மாற்றுகிறது. இந்த வேதியியல் வினையின் பொழுது எலக்ட்ரான்கள் வெளியாகி மின்சாரம் உருவாகிறது. 

சார்ஜ் செய்யும் பொழுது: 

வெளிப்புற மின்சாரம் உள்ளே செலுத்தப்படும் பொழுது, இந்தத் துருவானது மீண்டும் இரும்பாக மாறி ஆக்சிஜனை வெளியேற்றுகிறது.

இதன் சிறப்பம்சங்கள்: 

லித்தியம், கோபால்ட் போன்ற அரிய மற்றும் விலை உயர்ந்த தனிமங்களுக்குப் பதிலாக பூமியில் எளிதாகக் கிடைக்கும் இரும்பு, நீர் மற்றும் ஆக்சிஜன் மட்டுமே இதற்கு தேவைப்படுகிறது.

இரும்பு மிகவும் மலிவான மற்றும் எளிதில் கிடைக்கக் கூடிய உலோகம் என்பதால், பேட்டரி உற்பத்தி செலவு மிகவும் குறைவு.

சூரிய மற்றும் காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பல நாட்கள் (50 முதல் 100 மணி நேரம் வரை) சேமித்து வைக்க இது மிகவும் ஏற்றது. 

லித்தியம் அயன் பேட்டரிகளைப் போல தீப்பற்றும் அபாயம் இதில் இல்லை என்பதால் அடர்ந்த குடியிருப்பு பகுதிகளிலும் பாதுகாப்பாகப் பயன்படுத்தலாம். மேலும் இதில் நச்சுத்தன்மை வாய்ந்த வேதிப்பொருட்கள் இல்லாததால் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. 

இதையும் படியுங்கள்:
ஆப்பிள் ஐபோன் 18 ரகசியங்கள் லீக் ஆனது... யாரும் எதிர்பார்க்காத பகீர் பின்னணி!
அயன்-ஏர் பேட்டரி - Grid Energy Storage

சர்வதேச அளவில் அமெரிக்காவைச் சேர்ந்த Form Energy நிறுவனம் வணிக ரீதியான 100 மணிநேர கிரிட் அளவிலான அயன்-ஏர் பேட்டரி அமைப்புகளை உருவாக்கி மின் விநியோகக் கட்டமைப்பில் இணைத்து வருகிறது.

இந்தியாவில் சென்னையைச் சேர்ந்த Meine Electric என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம், இந்தியாவின் முதல் அயன்- ஏர் பேட்டரி தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இவர்களின் Fast Charge Long Discharge (FCLD)  தொழில்நுட்பம் மூலம் வெறும் 6 மணி நேரத்தில் சார்ஜ் செய்து, 18 மணி நேரம் வரை தொடர்ந்து மின்சாரம் வழங்க முடியும் என்று சோதனைகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த தொழில்நுட்பம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சேமிப்பிற்காக (grid scale storage) சர்வதேச அளவில் Form Energy மற்றும் சென்னையைச் சேர்ந்த Meine Electric போன்ற நிறுவனங்களால் தீவிரமாக மேம்படுத்தப்பட்டு வருகிறது.

அயன்-ஏர் பேட்டரி - Grid Energy Storage
அயன்-ஏர் பேட்டரி - Grid Energy StorageAI Image

அயன் ஏர் பேட்டரியை எங்கு பயன்படுத்தலாம்?

காற்றாலை மற்றும் சூரிய சக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை சேமித்து, தேவைப்படும் போது (குறிப்பாக சூரிய ஒளி / காற்று இல்லாத நேரங்களில்) விநியோகிக்கப் பயன்படுகிறது.

24 மணி நேரமும் தடையற்ற மின்சாரத்தை வழங்க இது லித்தியம்- அயன் பேட்டரிகளுடன் இணைந்து செயல்படுகிறது.

நம்பகமான மற்றும் நீண்ட கால மின்சாரம் தேவைப்படும் தொலைதூர மற்றும் மின் கட்டமைப்பு இல்லாத பகுதிகளில் பயன்படுத்த ஏற்றது.

லித்தியம்-அயன் போலல்லாமல், இரும்பு-காற்று பேட்டரிகள் அதிக எடையும் குறைந்த ஆற்றல் அடர்த்தியும் கொண்டவை. எனவே இவை கார்கள் போன்ற சிறிய சாதனங்களுக்குப் பதிலாக, பெரிய மின் நிலையங்கள் மற்றும் வணிகத் தேவைகளுக்கே மிகவும் பொருத்தமானவை.

இதையும் படியுங்கள்:
உங்கள் வியர்வை பேசும் இரகசிய மொழி: நோய்களைக் காட்டும் உயிரியல் தகவல் பெட்டகம்!
அயன்-ஏர் பேட்டரி - Grid Energy Storage

இவை மின்சார வாகனங்களுக்கு (EVs) பயன்படுவதைவிட, மின்சார கிரிட்களில் (Power Grids) நிலையான ஆற்றல் சேமிப்பிற்கே அதிகம் உகந்தது. ஏனெனில் லித்தியம் பேட்டரிகளுடன் ஒப்பிடும்பொழுது இவற்றின் அளவு சற்று பெரியதாகவும், ஆற்றல் அடர்த்தி (Energy Density) குறைவாகவும் இருக்கும். லித்தியம் அயன் பேட்டரிகளைப் போல அதிக ஆற்றல் அடர்த்தியை இது கொண்டிருக்கவில்லை என்றாலும், மின்சார கட்டமைப்பு (Grid-scale) போன்ற பெரிய அளவிலான ஆற்றல் சேமிப்பிற்கு இது மிகவும் சிறந்த மற்றும் சிக்கனமான தீர்வாகக் கருதப்படுகிறது.

இந்தத் தொழில்நுட்பத்தைப் புரிந்துகொள்வதன் மூலம், எதிர்கால மின்சாரக் கட்டணக் குறைப்பு மற்றும் தடையற்ற பசுமை ஆற்றல் விநியோகம் எவ்வாறு சாத்தியமாகப் போகிறது என்ற தெளிவான தொலைநோக்குப் பார்வையை நீங்கள் பெறலாம்.

logo
Kalki Online
kalkionline.com