‛கூகுளை’ குறை கூறுவது நியாயமா?

Google
Google

- தா.சரவணா

நம் அனைவரின் வீடுகளிலும் லேப்டாப் இருக்கிறது. ஆனால், அதை எப்படி உபயோகப்படுத்துவது? குறிப்பாக குழந்தைகள் கைகளில் லேப்டாப் செல்லும்போது, அது பாதுகாப்பான உபகரணமாக இருக்கிறதா? என்பது மிகப் பெரிய கேள்வி ஆகும். ஏனெனில், அறிவியல் வளர்ச்சி என்பது யார் உபயோகப்படுத்துகிறார்கள் என்பதைப் பார்க்காது. மாறாக அதற்கு யார் கட்டளையிட்டாலும், அது உடனே செய்துமுடிக்கும். அதில்தான் நமது குழந்தைகளுக்கு அபாயம் காத்துள்ளது.

பள்ளிகளில் சகவாசம் சரியில்லாத குழந்தைகள், அங்கு தங்களுடைய தீய நண்பர்களுடன் பேசியவற்றை, வீட்டில் வந்து லேப்டாப், செல்போன் போன்றவற்றில் பார்க்க விருப்பப்படுவார்கள். மறுநாள் பள்ளிக்குச் சென்று, நாம் பேசியதை நான் வீட்டில் வீடியோவாக பார்த்துவிட்டேன் என பெருமையாகவும் கூறிக்கொள்வார்கள். இங்குதான் தவறுகள் நடக்கத் தொடங்குகின்றன. இது தவிர்த்து, சிலர் மிகவும் அமைதியாகக் காணப்படுவார்கள். இவர்களைத்தான் மிகவும் ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும்.

குழந்தைகளின் அறிவை பெருக்கிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் நாம் அவர்களுக்கு வழங்கும் வசதிகள், சரியாக பயன்படுத்தாத பட்சத்தில் நம் தலையில் மண் வாரிப் போடுவதற்குச் சமம் ஆகும்.

தகவல்களை நாம் கூகுளில் தேடும்போது யதேச்சையாகவோ அல்லது தவறான எழுத்து பிரயோகக் காரணமாகவோ, ஆபாசமான தகவல்கள், வீடியோக்கள் மற்றும் படங்கள் நம் கண் முன்னே வந்து மிகுந்த தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி விடுகின்றது. இதை சரி செய்ய முடியும். கூகுள் தேடலில் ஆபாச தகவல் வராமல் லாக் செய்ய முடியும். அது எப்படி என்பதைதான் இப்பதிவு விளக்குகிறது.

இதையும் படியுங்கள்:
பூமி சுழல்வதை நிறுத்தினால் அல்லது எதிர் திசையில் சுற்ற ஆரம்பித்தால் என்ன நடக்கும்?
Google

முதலில் கூகுள் தளம் சென்று உங்கள் User name, password கொடுத்து Login செய்யுங்கள். பிறகு settings தேர்வு செய்து search settings click செய்யுங்கள். அல்லது http://www.google.com/preferences ஓபன் பண்ணுங்கள். அதில், Safe Search Filtering சென்று உங்களுக்குத் தேவையானவாறு நிறுவுங்கள். அடுத்து Safe Search Filtering கீழே உள்ள Lock Safe Search கிளிக் செய்துகொள்ளுங்கள். Locking Process நடைபெறும். பிறகு Safe Search Locked என்று திரையில் தோன்றும். சரியாக Lock ஆகாவிட்டால் மீண்டும் ஒரு முறை சென்று Lock Safe Search கொடுங்கள்.

அவ்வளவுதான் இனி ஆபாசம் சம்மந்தமான எந்தத் தகவலும் உங்கள் குழந்தைகளுக்கு Google வழங்காது. இதன் பிறகு google search பக்கத்தில் நீங்கள் Lock செய்த அடையாளமாக வண்ண பந்துகள் தோன்றும். நீங்கள் இதனை Unlock செய்ய மீண்டும் Search Setting சென்று Unlock என்று மாற்றிவிடுங்கள். Google எவ்வளவு பாதுகாப்பானது பாருங்கள். நாம்தான் இதைத் தெரிந்து கொள்ளாமல், கூகுளை குறை கூறுகிறோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com