நமது சுற்றுசூழல், காலநிலை மற்றும் அன்றாட வாழ்க்கையை வடிவமைப்பதில் நமது கிரகத்தின் சுழற்சி முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் பூமியின் சுழல் திடீரென தலைகீழாக மாறி, அது எதிர் திசையில் சுழன்றால் என்ன செய்வது? அப்படி நடந்தால் அதன் மூலம் ஏற்படும் விளைவுகள் என்னவாக இருக்கும்? தெரிந்து கொள்வோம்.
பகல்-இரவு சுழற்சி இடையூறு:
தற்போது, பூமி அதன் அச்சில் சுழன்று கொண்டிருக்கிறது. இதனால் பகல்-இரவு சுழற்சி இயல்பாக நடக்கிறது. திடீரென பூமியின் சுழற்சி நின்று எதிர் திசையில் சுற்ற ஆரம்பித்தால், கிரகத்தின் ஒரு பக்கம் நிலையான சூரிய ஒளியில் இருக்கும், மறுபுறம் நிரந்தர இருளை அனுபவிக்கும். பாதி பகலில் மூழ்கி, மற்ற பாதி இருளில் மூழ்கியிருக்கும் போல் ஒரு உலகத்தை கற்பனை செய்து பாருங்கள். இந்த தீவிர மாறுபாடு சுற்றுச்சூழல் அமைப்புகளை முற்றிலும் சீர்குலைத்து, தாவர வளர்ச்சியை பாதிக்கும் மற்றும் விலங்குகளின் நடத்தையில் மாற்றத்தை நிகழ்த்திவிடும்.
வெப்பநிலை உச்சநிலைகள்:
சுழற்சியில் நிகழும் திடீர் மாற்றம் தீவிர வெப்பநிலை ஏற்ற இறக்கங்களுக்கு வழிவகுக்கும். சூரிய ஒளி வீசிக்கொண்டிருக்கும் திசையில் கடுமையான வெப்பமான சூழ்நிலை நிகழும், அதே நேரத்தில் இருண்ட பகுதி முழுவதும் உறைபனியில் மூழ்கும். ஒரு நிலையான பகல்-இரவு சுழற்சி இல்லாதது வெப்பநிலை மாற்றத்தை தடுக்கும். இது மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் சவாலான வாழ்க்கையை உருவாக்கிவிடும்.
வானிலை குழப்பம்:
பூமியின் சுழற்சியின் தாக்கமானது, வானிலை முறைகள், கடல் நீரோட்டங்கள் மற்றும் வளிமண்டல சுழற்சியில் எதிரொலிக்கிறது. அது தலைகீழாக மாறினால், தரை பகுதியில் நிலவும் காற்று, கடல் நீரோட்டங்கள் மற்றும் புயல் அமைப்புகளின் திசை மற்றும் அளவுகளில் மாற்றம் நிகழும்.
சூறாவளி, பருவமழை மற்றும் பிற வானிலை நிகழ்வுகள் எதிர்பாராத விதமாக நடந்து, விவசாயம், போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு என அனைத்திலும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
கடல் அலைகளின் மாறுபாடு மற்றும் நிலநடுக்கங்கள்:
சுழற்சியின் திடீர் மாற்றம் ஈர்ப்பு விசைகளை (gravitational forces) மாற்றிவிடும். தற்போது யூகிக்கக்கூடிய அலைகளின் உயரம் போல் இருக்காது, கடலோரப் பகுதிகள் பெரிய கடல் அலைகளால் மூழ்கக்கூடும், நகரங்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கடித்து, பரவலான அழிவை ஏற்படுத்தலாம். மற்றும் பயங்கரமான நில அதிர்வுகளும் நிகழும்.
நிலையற்ற பகுதிகள்:
செயற்கையாக தரையில் பொருத்தப்பட்ட அனைத்து பொருட்களும் 3,200 km/hr (தோராயமாக 2,000 mph) வேகத்தில் கிழக்கு நோக்கி ஏவப்படும். கார்கள், கட்டிடங்கள் மற்றும் மனிதர்கள் கூட காற்றில் வேகமாக தூக்கியெறிய படுவதை கற்பனை செய்து பாருங்கள்.
காந்தப்புலம்(Magenetic Field) மற்றும் கதிர்வீச்சு வெளிப்பாடு(Radiation Exposure):
பூமியின் காந்தப்புலமானது தீங்கு விளைவிக்கும் சூரியக் கதிர்வீச்சிலிருந்து நம்மைக் காக்கிறது. திடீரென நம் பூமி சுழற்சியில் மாற்றம் ஏற்பட்டால், அது நம் பூமியின் காந்தப்புலத்தை பலவீனப்படுத்தலாம். அவ்வாறு நிகழும் பட்சத்தில், அதன் மூலம் வரும் அதிகரித்த கதிர்வீச்சு வெளிப்பாடு மனிதர்கள் உட்பட மற்ற உயிரினங்களை பாதித்து , மிகப்பெரிய சுகாதார அபாயங்களுக்கு வழிவகுக்கும்.
சுருக்கமாக, பூமி திடீரென அதன் சுழற்சியை மாற்றினால், நம் மனித நாகரிகம் முதல் நம்மை சுற்றி இருக்கும் அனைத்து விஷயங்களும் மாறிவிடும். நமது கிரகம் அதன் நிலையான சுழற்சியைத் மாற்றாமல் தொடர்ந்து கொண்டே இருந்தால், மேல குறிப்பிட்ட அனைத்து சூழ்நிலைகளும் நம் வாழ்வில் கற்பனையாகவே தொடரும்!