அந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் சிலர் வானத்தை ரசித்து பார்த்தார்கள் அதிலும் வெகு சிலர் வானத்தில் இருக்கும் மினு மினுக்கும் நட்சத்திரங்கள் என்னவாக இருக்கும் என்று ஆராயத் தொடங்கினர். இப்படி தொடங்கப்பட்ட இந்த ஆராய்ச்சி இன்றைய விஞ்ஞான வளர்ச்சியால் விண்வெளிக்கே சென்று ஒரு கருவியை அனுப்பி ஆராயும் அளவிற்கு முன்னேறிவிட்டது.
இப்படிப்பட்ட ஆராய்ச்சிகள் 1985ல் தொடங்கி இன்றைய நாள்வரை வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. அதில் குறிப்பிடும் படி இன்றைய விஞ்ஞானிகளால் போற்றப்படுவது. 'நாசா, கனடா விண்வெளி நிறுவனம் மற்றும் ஐரோப்பியன் விண்வெளி நிறுவனங்கள்' சேர்ந்து 2021 ஆம் ஆண்டு பூமியில் இருந்து அனுப்பிய 'ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கி ( James webb space telescope).'
இந்த தொலைநோக்கி விண்வெளிக்கு அனுப்பப்பட்ட நோக்கமே இந்த பிரபஞ்சம் உருவாக காரணமான பெருவெடிப்பு (BIG BANG) நிகழந்த பின் உருவான விண்மீன் மண்டலங்கள் (Galaxie ) மற்றும் நட்சத்திரங்கள் (stars) எப்படி உருவாகின என்பதை பற்றி ஆராயவே. இந்த பெருவெடிப்பு நடந்தே பல நூறு கோடி வருடங்கள் ஆகியிருக்கும் "அப்போ எப்படி இந்த தொலைநோக்கியால் ஆராய முடியும் என்று நீங்கள் கேட்கலாம்."
விண்வெளியில் எந்த ஒரு 'விண்மீன் மண்டலமோ' அல்லது 'நட்சத்திரமோ' ஒரு வெளிச்சத்தை வெளியிடும் அந்த வெளிச்சம் பல ஒளி ஆண்டுகள் (Light years) தாண்டி விண்வெளியில் அகச்சிவப்பு கதிர்களாக (Infrared rays) கடத்திவரப்படும் 'ஒரு ஒளி ஆண்டு என்பது 94,610 கோடி கிலோமீட்டருக்கு சமம்.' அதை ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கி படம் பிடிக்கும். அந்த படத்தை பல கோடி வருடம் முன்பு கிரகங்கள் எப்படி இருந்தது என்பதை தத்ரூபமாய் மேம்படுத்தி நம் பூமிக்கு அனுப்பிவிடும். இந்த வேலையை கடந்த இரண்டரை வருடமாக நம் பிரபஞ்சத்தை பல்வேறு கோணங்களில் படம் பிடித்து கொண்டிருக்கிறது. இந்த முடிவுகளை வைத்து விஞ்ஞானிகள் கூறுவது "பூமியில் ஒரு துகள் மண்ணை நம் விரல்கள் மூலம் எடுத்து வானத்தை நோக்கி வைத்து பார்ப்பது போல தான் விண்வெளியில் இந்த தொலைநோக்கியால் படம்பிடிக்க முடியும் மொத்த விட்டமே (Diameter)."
"அந்த ஒரு துகள் விட்டதிலே பல ஆயிரம் விண்மீன் மண்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன" என்கிறார்கள். நம் சூரியன் போன்ற நட்சத்திரம் இருக்கும் இந்த பால்வழி மண்டலத்திலே (Milky way Galaxy) தோராயமாக 100 பில்லியன் நட்சத்திரங்கள் இருக்கின்றன. "அப்போ நினைத்து பாருங்கள் எவ்ளோ பெரியதாக நம் பிரபஞ்சம் இருக்கும் என்று."
இந்த ஆராய்ச்சியின் நோக்கமே நாம் இருக்கும் பிரபஞ்சம் பற்றியும் நம்மை போலவே ஏதேனும் உயிர்கள் வாழும் சாத்தியக் கூறுகள் உள்ள சூழ்நிலை இருக்கிறதா என்பதை முழுவதுமாக தெரிந்து கொள்ள தான். இப்படி மனிதகுலத்தின் அடுத்த அத்தியாத்தின் முயற்சியாக கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் 8,087 ஆயிரம் கோடிகள் செலவு செய்திருக்கிறார்கள். இந்த தொலைநோக்கியின் முதல் படம் ஜூலை 2022 இல் நாசாவால் வெளியிடப்பட்டது, . இப்படி இந்த பிரமாண்டத்தை உருவாக்கிய நமக்கு அது இன்னொரு பிரமாண்டத்தை நம் கைகளில் கொடுத்துக் கொண்டிருக்கிறது.