பட்டாம்பூச்சி ஆராய்ச்சி மூலம் சர்வதேச விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்திய சிறுவன்!

பட்டாம்பூச்சி ஆராய்ச்சி - Butterfly Memory
பட்டாம்பூச்சி ஆராய்ச்சி - Butterfly Memory
அகிலா சிவராமன்

வணக்கம், நான் சென்னையில் பிறந்து வளரந்தேன். 1995 ஆம் ஆண்டு திருமணத்திறகுப் பிறகு நான் ஜம்ஷேட்பூரில் settle ஆகி விட்டேன். நான் கடவுள்களின் பெயரில் நிறைய பாடல்கள் எழுதி இருக்கிறேன். நான்கைந்து வருடங்களுக்கு முன்னால் தான் எனக்கு எழுதும் ஆர்வம் வந்தது. நான் முதன் முதலாக எழுதிய கதை, புயலின் மறுபக்கம் கல்கியின் மங்கையர் மலரில் 04.01.2025 அன்று வெளி வந்தது. கல்கி குழுமத்திற்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு முதன்முதலாக எழுத சந்தர்ப்பம் கொடுத்த கல்கி குழுவினருக்கும், எனக்கு ஆதரவு தரும் வாசகர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும உங்களின் மனதை கவரும் வகையில் எழுத முயற்சி செய்வேன்.

Updated on

ப்பானின் கோபே நகரைச் சேர்ந்த ஜோ நாகாய் என்ற சிறுவன், இரண்டாம் வகுப்பிலேயே பட்டாம்பூச்சி புழுக்களை வளர்த்து, அவற்றின் நடத்தை, நினைவாற்றல் குறித்து ஆராய்ச்சி செய்து சர்வதேச விஞ்ஞானிகளை வியக்க வைத்தான். லாவெண்டர் மணம் மூலம் புழு நிலையிலேயே கற்றுக்கொண்ட நினைவுகளை பட்டாம்பூச்சிகள் தக்க வைத்திருப்பதையும், அதைத் தங்கள் சந்ததியினருக்கும் கடத்துவதாகவும் அவன் கண்டறிந்தது.

பொதுவாக எல்லா குழந்தைகளும் ஓய்வு நேரத்தில் டிவி, மொபைல் பார்ப்பார்கள். இல்லை என்றால் வீடியோ கேம் விளையாடுவார்கள். இன்னும் சில குழந்தைகள் ரோட்டிலே எதாவது ஒரு விளையாட்டை விளையாடுவார்கள். ஆனால் இந்த ஜப்பான் சிறுவன் என்ன செய்திருக்கிறான் என்று பார்க்கலாமா...?

ஜப்பானின் கோபே நகரைச் சேர்ந்த ஜோ நாகாய் என்கிற சிறுவன், தான் இரண்டாம் வகுப்பு படிக்கும்போதே பட்டாம்பூச்சிகளின் புழுக்களை தன் கையாலேயே வளர்க்கத் தொடங்கினான்.

அந்த புழுக்கள் வளர்ந்து பட்டாம் பூச்சியாக மாறியபோது அவற்றை அவன் தன் கைகளிலிருந்து பறக்கவிட்டான். அப்போதுதான், நாகாய் ஒரு விசித்திரமான நடத்தையை அவைகளிடமிருந்து கவனித்தான்.

அந்த பட்டாம்பூச்சிகளை தன்னிடமிருந்து விடுவிக்கப் பட்ட பிறகும் அதிகபட்ச நேரம் அவைகள் அங்கேயே தங்கியிருந்தன மேலும் அவைகள் அவனிடமே திரும்பிப் பறந்து வந்தன.

அது அவனை யோசிக்க வைத்தது. அவன் வளர்த்த அந்த கம்பளிப்புழுக்கள் உருமாற்றம் அடைந்த பிறகும், அவைகள் இன்னும் அவனை நினைவில் வைத்திருக்கின்றனவா? என்று அவன் எண்ண ஆரம்பித்தான்.

இதைக் கண்டறிய, நாகாய், பூச்சிகளின், குறிப்பாக அந்துப்பூச்சிகளின் நடத்தை மற்றும் நினைவாற்றலை நீண்ட காலமாக ஆய்வு செய்து வரும், புகழ்பெற்ற ஜார்ஜ்டவுன் பூச்சியியல் நிபுணரான டாக்டர் மார்த்தா வெய்ஸை அணுகினான்.

அவன் அவருக்கு ஒரு கடிதத்தில், அந்துப்பூச்சிகளின் நினைவாற்றல் குறித்த அவரின் மிக முக்கியம் வாய்ந்த ஆய்வை பற்றி கேட்டதோடு மட்டுமில்லாமல், அதன் மூலமாக தனது பட்டாம்பூச்சிகளுக்கும் அது பொருந்துமா என்றும் கேட்டிருந்தான்.

இதையும் படியுங்கள்:
கண்ணுக்குத் தெரியாத காற்றில் கலந்திருக்கும் அறிவியல்: உலகை மாற்றிய அலைவாங்கிகளின் கதை!
பட்டாம்பூச்சி ஆராய்ச்சி - Butterfly Memory

அந்த கடிதத்தை படித்து பிறகு, வெய்ஸ் அவர்களுக்கு, “பத்து ஆண்டுகளுக்கு முன்பு, தானும் தன்னுடைய பட்டதாரி மாணவரான டக் பிளாக்கிஸ்டனும் ஒரு பாதுகாப்பான ஆய்வகச் சூழலில் உருவாக்கியிருந்த அதே சோதனையை, ஒரு தொடக்கப் பள்ளி மாணவரால் மீண்டும் செய்து பார்க்க முடியுமா” என்ற சந்தேகம் எழும்பியது.

அவர், தன்னுடைய பதில் கடிதத்தில், முதலில், நீ, "பட்டாம்பூச்சிகளுக்கு வண்ணங்களைக் கற்றுக் கொடுப்பது" என்கிற எளிமையான ஒரு பரிசோதனையை நடத்த வேண்டும் என்று பரிந்துரைத்தார்.

அதற்கு, அந்த சிறுவனும், “என் வண்ணத்துப்பூச்சிகளால், அவைகள் புழுவாக இருந்தபோது கற்றுக் கொண்டதை நினைவில் வைத்திருக்க முடியும் என்பதை நான் நிரூபிக்க விரும்புகிறேன்,” என்று தன்னுடைய அடுத்த கடிதத்தில் எழுதினான். மேலும், “நான் இந்த ஆய்வை கை விட விரும்பவில்லை. எனக்கு உண்மையிலேயே உங்கள் உதவி தேவை” என்றும் குறிப்பிட்டிருந்தான்.

பட்டாம்பூச்சி ஆராய்ச்சி - Butterfly Memory
பட்டாம்பூச்சி ஆராய்ச்சி - Butterfly MemoryAI Image

அவனுடைய இந்த உறுதிப்பாட்டால், கண்டங்களைக் கடந்து பல ஆண்டு கால கடிதப் பரிமாற்றத்திற்கு வித்திட்டது. வெய்ஸின் உதவியுடன், நாகாய் தன்னுடைய வீட்டில் உள்ள தற்காலிக ஆய்வகத்தில் ஒரு பரிசோதனையை ஏற்பாடு செய்தார். வெய்ஸின் 2008 ஆம் ஆண்டு ஆய்வை மீண்டும் உருவாக்கும் முயற்சியில், நாகாய் கம்பளிப்புழுக்களைக் கொண்ட ஒரு கட்டுப்பாட்டுக் குழுவையும் ஒரு சோதனைக் குழுவையும் அமைத்தான்.

வெய்ஸ் முதலில் பயன்படுத்திய எத்தில் அசிடேட் என்ற வேதிப் பொருளுக்குப் பதிலாக, மென்மையான மணம் கொண்ட லாவெண்டர் எண்ணெயைப் பயன்படுத்தி, நாகாய் ஒரு சிறிய தசை சிகிச்சைக் கருவி மூலம் மிகச் சிறிய அதிர்வுகளோடு கம்பளிப் புழுக்களுக்கு அந்த வாசனையை அறிமுகப்படுத்தினான்.

கம்பளிப்புழுக்கள் பட்டாம்பூச்சிகளாக உருமாறியபோது, சோதனைக்குட்பட்ட குழுவில் 80% லாவெண்டர் வாசனையைத் அவைகள் தவிர்த்தன.

அவன், இறுதியாக தன்னுடைய கண்டுபிடிப்புகளை 33 பக்க ஆவணம் ஒன்றில் வெய்ஸ் அவர்களுக்கு அனுப்பி வைத்தான.

அதை படித்த வெய்ஸ், ‘அடடா, இவன், உண்மையிலேயே ஒரு பெரிய விஞ்ஞானி, மேலும் இவன் பல புதிய விஷயங்களையும் கண்டறிந்திருந்து கொண்டிருக்கிறான்’ என்று ஆச்சரியமடைந்தார்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளுடன் இயற்கையை ரசிக்க இதோ சில 'அட்வென்ச்சர்' இடங்கள்!
பட்டாம்பூச்சி ஆராய்ச்சி - Butterfly Memory

2022-ஆம் ஆண்டில், அதாவது நாகாய் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அதே வருடத்தில், அவன் தன்னுடைய இந்த ஆராய்ச்சியை ஷின்ஷு பல்கலைக்கழகம், சுகுபா பல்கலைக்கழகம் மற்றும் சாகா பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த விஞ்ஞானிகளுக்கும் சமர்ப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாகாய், இத்தோடு நிறுத்திக்கொள்ளாமல், அந்த சோதனையை மீண்டும் செய்து ஒரு குறிப்பிடத்தக்க விஷயத்தையும் கண்டுபிடித்தான். அதாவது, பட்டாம்பூச்சிகள் தங்களின் முந்தைய வடிவங்களின் நினைவுகளைச் சுமந்து செல்வதோடு மட்டுமில்லாமல், அந்த நினைவுகளைத் தங்கள் இளம் உயிரிகளுக்கும் கடத்துவதாக அவன் கூறினான்.

விரைவில், நாகாயும் வெய்சும் இன்னும் தீவிரமாக ஆராய்ச்சி செய்து, தங்களுடைய கண்டுபிடிப்புகளை 'லெபிடோப்டெரிஸ்ட்ஸ் சொசைட்டியின் இதழில்' முறைப்படி சமர்ப்பிப்பார்கள் எனவும் நம்பப்படுகிறது.

இந்தச் செய்தியை வாசிப்பதன் மூலம், உங்கள் குழந்தைகளின் இயல்பான ஆர்வத்தையும் கேள்விகளையும் எவ்வாறு பெரிய அளவிலான சாதனைகளாகவும் சர்வதேச அளவிலான கண்டுபிடிப்புகளாகவும் மாற்ற முடியும் என்ற தெளிவான பார்வையும் உத்வேகமும் உங்களுக்குக் கிடைக்கும்.

logo
Kalki Online
kalkionline.com