

ஜப்பானில் மனிதர்களை குளிர்விக்க தனிப்பட்ட குளிர்சாதனப் பூத் உருவாக்கப்பட்டுள்ளது. Hiemon Box எனப்படும் இந்த சிறிய குளிர்சாதன அறையில் ஒருவர் மட்டும் சென்று 15 டிகிரி சென்டிகிரேட் சூழலில் சில நிமிடங்களில் உடல் சூட்டை தணிக்கலாம். தலை, கழுத்து, தோள், முதுகு பகுதிகளில் நேரடியாக குளிர் காற்று வீசும் இந்த நவீன சாதனம், ஏர்கண்டீஷனரைவிட குறைந்த மின்சாரத்தில் இயங்குகிறது.
நாம் எல்லோரும் காய்கறிகள்,தோசை மாவு, பால், தயிர் இவற்றை வைக்க குளிர்சாதனப் பெட்டியைப் பயன்படுத்துகிறோம். ஆனால் மனிதனுக்கு உடல் சூடு அதிகமானால் அவரை குளிர்ச்சிபடுத்த குளிர்சாதனப் பெட்டியைக் கண்டுபிடித்துள்ளது ஜப்பான். சமீபகாலமாக காலநிலை மாறுபாட்டினால் உலகம் முழுவதும் வெப்பமயமாகிவருவதை அறிகிறோம். புதிய தொழில் நுட்பம் மூலமாக வெப்பத்தால் தவிக்கும் மனிதனைக் குளிர் வைக்க குளிர்சாதனப் பெட்டி கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
இந்த குளிர்சாதனப்பெட்டி மக்களை அதிக வெப்பத்தில் இருந்து காத்து குளிர வைக்கும். நாம் வீட்டில் வெப்பத்தைத் தடுக்கவும் வீடு குளிர்ச்சியாக இருக்கவும் ஏர் கண்டீஷனரைப் பயன் படுத்துகிறோம்.
ஆனால் ஜப்பானில் மனித குளிர்சாதனப்பெட்டி தயாரித்துள்ளது தொழில் நுட்பத்தில் ஒரு புதிய முயற்சியாகும் . இந்த நவீன குளிர்சாதனப் பெட்டியால் ஒருசில நிமிடங்களில் உங்களை குளிர்ச்சியாக வைக்க முடியும்.
ஜப்பானிய குளிர்சாதனப் பெட்டி உற்பத்தியாளர்களும் மற்றும் வெண்டிங் (Vending machine) உற்பத்தியாளர்களும் இணைந்து அதிகப்படியான வெப்பத்தால் பாதிக்கப்படும் மனிதர்களுக்கு உடனடி குளிர்ச்சியைத் தருவதற்காக Hieman Box என்ற சாதனத்தை தயாரித்துள்ளனர்.
இந்த குளிர்சாதனப் பெட்டி எப்படி வேலை செய்கிறது?
ரிப்போர்ட்டின்படி Do Hiemon Box என்பது ஒரு சிறிய குளிர்சாதன பூத் ஆகும். இதில் ஒருவர் மட்டும் உள்ளே சென்று தங்களை குளிர்ச்சியாக்கிக்கிட்டு வெளியே வரலாம். இந்த குளிர்சாதன பூத் உள்ளே ஒரு நாற்காலி உள்ளது.
உள்ளே 15டிகிரி சென்டிக்ரேட் அளவு குளிர்ச்சியான சூழல் நிலவும்படி இது அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் இப்பெட்டியில் உள்ள நாற்காலியில் உட்கார்ந்ததும் உங்கள் தலை, கழுத்து, தோள் மற்றும் பின்புறம் பகுதிகளில் காற்று வரும்படி அமைக்கப்பட்டிருக்கிறது.
அதிகப்படியான வெப்பத்தில் இருந்து உங்களுக்கு உடனடி குளிர்ச்சி ஏற்படும் இந்த தயாரிப்பு கம்பெனியின் கூற்றின்படி ஐந்து நிமிடங்களிலேயே நீங்கள் குளிர்ச்சி அடையலாம் என்று தெரிகிறது. அதிக வெப்பநிலையில் வேலை செய்பவர்களுக்கு உடலில் சக்தி குறைவு ஏற்படும். அப்போது இந்த குளிர்சாதன பூத்தில் பத்தே நிமிடத்தில் உங்கள் வெப்பத்தைத் தணித்து வெளியில் வரலாம்.
கட்டட வேலையில் வெயிலில் அதிக நேரம் வேலை பார்ப்பவர்களுக்கு, மண், தொழிற்சாலைகள் மற்றும் factoryகளில் வேலை பார்ப்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு சிலருக்கு அதிக வெப்பத்தால் தலைவலி ஏற்படும். இந்த குளிர்சாதன பூத்தை பயன்படுத்துவதன் மூலம், உங்கள் மருத்துவச் செலவு குறையும்.
இந்த பூத் உங்களை குளிர்விப்பதோடு சக்தியையும் தருகிறது. நீங்கள் உபயோகப்படுத்தும் ஏர்கண்டீஷனரின் பாதி அளவு மின்சாரம்தான் இதற்குத் தேவையாக உள்ளது. சில நிமிடங்கள் கழித்து தானாகவே அது ஆஃப் ஆகிவிடும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.
ஏப்ரல் மாதத்திலிருந்து இந்த பூத் விற்பனைக்கு வந்துள்ளது. ஜப்பானில் மேபாஷிநகர ஹாலில் இதை இலவசமாக பயன்படுத்துவதற்காக வைத்திருக்கிறார்கள்.
அது சரி இதன் விலை என்ன தெரியுமா? 1.5 மில்லியன் ஜப்பானிய யென்களாகும். அதாவது இந்திய மதிப்பில் ஒன்பது லட்சம் ரூபாய். இனி நாம் பயன்படுத்தும் பொருட்களை மட்டும் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதோடு தற்சமயம் நம்மையே குளிர்சாதனப் பூத்துக்குள் வைத்துக் குளிர்ச்சி படுத்தலாம்!
அதிக வெப்பமான சூழலில் வேலை செய்பவர்கள் தங்கள் உற்பத்தித்திறனையும் உடல் நலத்தையும் ஒரே நேரத்தில் பாதுகாப்பதற்கான சிறந்த தீர்வை இந்த விவரங்களின் மூலம் கண்டடைவார்கள்.