
ஜப்பானிய நிறுவனமான கவாஸ்கி மோட்டார் சைக்கிள்கள், இயந்திரங்கள், கனரக உபகரணங்கள், விமானம் மற்றும் கப்பல் உள்ளிட்ட பல்வேறு வகையான தயாரிப்புகளை உற்பத்தி செய்கிறது. குறிப்பாக, மோட்டார் சைக்கிள் தயாரிப்பில் கவாஸ்கி மிகவும் பிரபலமானது. கவாஸ்கி மோட்டார் சைக்கிள்களில், நிஞ்ஜா (Ninja) மற்றும் இசட் (Z) தொடர்கள் மிகவும் பிரபலமானவை. நிஞ்ஜா தொடர் விளையாட்டு பந்தயங்களுக்காகவும், இசட் நெடுஞ்சாலைப் பயன்பாட்டிற்காகவும் வடிவமைக்கப்பட்டது.
தற்போது கவாஸ்கி மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனம், கவாஸ்கி இசட் 900 என்ற மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இது ஒரு நட் பைக் மாடல் ஆகும். அதிக வேகத்தை விரும்பும் துறு துறு GenZ இளைஞர்களுக்கு இசட்900 மோட்டார் சைக்கிள் ஏற்றது. அதன் ஆக்ரோஷமான ஸ்டைலிங், சக்திவாய்ந்த செயல்திறன் மற்றும் மென்மையான கையாளுதலுக்கு பெயர் பெற்ற இசட்900 மோட்டார் சைக்கிள் இளம் ஆர்வலர்களை ஈர்க்கும் வகையில் உள்ளது. மேலும் இசட்900 கவர்ச்சியான வடிவமைப்பு, மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் மற்றும் தொழில்நுட்ப புதுப்பிப்புகளுடன் வந்துள்ளது.
இது உயர் செயல்திறன் கொண்ட ஸ்ட்ரீட்ஃபைட்டரைத் தேடும் ஆர்வலர்களுக்கு இன்னும் கவர்ச்சிகரமான தேர்வாக அமைகிறது. இன்லைன் நான்கு சிலிண்டர் மோட்டாரால் நிரம்பிய இந்த பைக், நகரத்திற்கும் நெடுஞ்சாலை பயணங்களுக்கும் ஏற்றது.
இதில் 948 சி.சி. 4 சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 124 எச்.பி. பவரையும், 97.4 என்.எம். டார்க்கையும் வெளிப்படுத்தும். கவாஸ்கி இசட்900 மெட்டாலிக் கார்பன் கிரே / மெட்டாலிக் பேண்டம் சில்வர் / கேண்டி பெர்சிமன் சிவப்பு போன்ற பல வண்ணங்களில் கிடைக்கிறது.
மேம்படுத்தப்பட்ட இந்த பைக்கில் புதிதாக 5 அங்குல டி.எப்.டி. டிஸ்பிளே, நிஞ்சா 1100 எஸ்.எக்ஸ்-ல் உள்ளது போன்ற ரிவர்ஸ் கியர், மோனோ ஷாக் அப்சர்வர், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ரைடு பை வயர் தொழில்நுட்பம், பவர் மோட், ரைடிங் மோட்கள், டிராக்ஷன் கண்ட்ரோல், எல்இடி லைட்டிங், அகலமான சேஸ், டூயல் சானல் ஏ.பி.எஸ் உட்பட இளைஞர்களை கவரும் வகையில் பல அம்சங்கள் இந்த கவாஸாகி இசட் 900 பைக்கில் இடம் பெற்றுள்ளன.
கவாஸாகி இசட்900ன் உண்மையான மைலேஜ் லிட்டருக்கு 18 கிமீட்டரும், ARAIன் படி, இசட்900ன் சராசரி மைலேஜ் லிட்டருக்கு 21 கிமீ தருவதாக கூறப்படுகிறது. 17 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொள்ளளவு கொண்ட இந்த பைக் முழு டேங்கில் 357 கிமீ வரை செல்ல முடியும். ஆனால் இந்த பைக்கை பராமரிக்க கொஞ்சம் அதிகம் செலவாகும் என்பதை மறுக்க முடியாது.
கவாஸாகி Z900 பைக்கின் ஆரம்ப ஷோரூம் விலை சுமார் ரூ.9.38 லட்சத்தில் தொடங்கி ரூ.9.52 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) விலையில் உள்ளது.