தீபாவளி ஆஃபர்ல லேப்டாப் வாங்க போறீங்களா? இந்த தப்ப மட்டும் பண்ணாதீங்க!

Laptop Buying tips
Laptop Buying tips
Published on

தீபாவளி ஆஃபர்ல லேப்டாப் வாங்க போறீங்களா? இந்த தப்ப மட்டும் பண்ணாதீங்க!

பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ், அமேசானின் கிரேட் இந்தியன் பெஸ்டிவல்னு பெரிய சேல் எல்லாம் முடிஞ்சு போச்சு. அதுல லேப்டாப் வாங்க மிஸ் பண்ணவங்களுக்கு, இதோ தீபாவளி சேல் ஒரு கடைசி வாய்ப்பா வந்திருக்கு. ஆனா, ஆஃபர்ல கிடைக்குதுன்னு கண்ட லேப்டாப்பையும் வாங்கிட முடியுமா? 

இந்த சேல்ல எந்த லேப்டாப் வாங்கலாம், அதைவிட முக்கியமா எந்த லேப்டாப்பை எவ்வளவு விலை குறைவா கொடுத்தாலும் வாங்கவே கூடாதுன்னு வாங்க விரிவாகப் பார்க்கலாம்.

லேப்டாப் வாங்குறதுக்கு முன்னாடி, நீங்க யாருங்கிறத முடிவு பண்ணிக்கோங்க.

1. மாணவர்கள்: ஆன்லைன் கிளாஸ், அசைன்மென்ட்னு யூஸ் பண்றவங்களுக்கு, எடை குறைவான, நல்ல பேட்டரி பேக்கப் இருக்கிற லேப்டாப் தேவை. இப்போ ₹30,000 பட்ஜெட்லயே 16GB ரேம் கொண்ட நல்ல லேப்டாப்கள் கிடைக்குது.

2. வேலைக்குச் செல்பவர்கள்: ஆபீஸ் வேலை, பிரசன்டேஷன், கோடிங்னு பண்றவங்களுக்கு நல்ல பெர்ஃபார்மன்ஸ் கொடுக்கிற H-சீரிஸ் ப்ராசஸர் கொண்ட லேப்டாப் அவசியம்.

3. கேமர்ஸ்: இவங்களுக்கு முக்கியம் பெர்ஃபார்மன்ஸ் மட்டும்தான். நல்ல சிபியு, பவர்ஃபுல்லான கிராபிக்ஸ் கார்டு, அதிக ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளேன்னு எல்லாமே டாப் கிளாஸா இருக்கணும்.

4. கிரியேட்டர்கள்: வீடியோ எடிட்டிங் போன்ற வேலைகளுக்கு, கேமிங் லேப்டாப்தான் பெஸ்ட் சாய்ஸ். ஏன்னா, அதுலதான் நல்ல கிராபிக்ஸ் கார்டு இருக்கும்.

இதையும் படியுங்கள்:
இயற்கையான முறையில் கொசுக்களை விரட்ட சில சிம்பிள் வழிகள்!
Laptop Buying tips

பட்ஜெட்டும் கவனிக்க வேண்டியவையும்!

  • ₹30,000 பட்ஜெட்: இந்த விலையில Acer Aspire Lite மாதிரி 16GB ரேம் கொண்ட லேப்டாப்கள் கிடைக்குது. இது ஒரு சூப்பரான டீல். Samsung Galaxy Book 4 லேப்டாப்போட டிஸ்ப்ளே இந்த பட்ஜெட்லேயே ரொம்ப அருமையா இருக்கு.

  • ₹40,000 பட்ஜெட்: தயங்காம Lenovo IdeaPad Slim 3 லேப்டாப்பை வாங்கலாம். இதுல Intel i5 12th Gen H-சீரிஸ் ப்ராசஸர் இருக்கு, பெர்ஃபார்மன்ஸ்ல இது ஒரு பீஸ்ட்.

  • ₹50,000 பட்ஜெட்: இந்த விலையில கேமிங் லேப்டாப் வாங்கலாம். Acer Aspire 7 Gaming ஒரு நல்ல சாய்ஸ். இதுல RTX 3050 கிராபிக்ஸ் கார்டு இருக்கு.

  • ₹60,000 பட்ஜெட்: Lenovo LOQ கேமிங் லேப்டாப் இந்த விலையில ஒரு மான்ஸ்டர். இதுல 24GB ரேம் இருக்கு. Asus ExpertBook லேப்டாப்ல 32GB ரேம் தராங்க. இதெல்லாம் வேற லெவல் டீல்ஸ்.

இதையும் படியுங்கள்:
மன ஆரோக்கியத்தைக் காக்கும் சில வழிமுறைகள்!
Laptop Buying tips

இந்த லேப்டாப்பெல்லாம் வேண்டவே வேண்டாம்!

ஆஃபர்ல கிடைக்குதுன்னு சில லேப்டாப்களை வாங்கி ஏமாந்துடாதீங்க. இந்த லிஸ்ட்டை மனசுல வச்சுக்கோங்க.

  • ₹30,000 பட்ஜெட்ல: Intel i3 சீரிஸ்ல வர்ற 1305U, 1215U ப்ராசஸர் லேப்டாப்கள் ஓவர் பிரைஸ். அதை வாங்காதீங்க.

  • ₹40,000 பட்ஜெட்ல: 1235U, 1315U ப்ராசஸர் கொண்ட 8GB ரேம் லேப்டாப்கள் வேண்டாம். 16GB ரேம் இந்த விலையில ஈஸியா கிடைக்கும்.

  • ₹50,000 பட்ஜெட்ல: RTX 2050 கிராபிக்ஸ் கார்டு இருக்கிற லேப்டாப்பைத் தொடவே தொடாதீங்க. Snapdragon ப்ராசஸர் லேப்டாப்களையும் இப்போதைக்கு தவிர்ப்பது நல்லது.

  • ₹60,000 பட்ஜெட்ல: RTX 3050 கிராபிக்ஸ் கார்டுல 4GB வேரியன்ட்டை வாங்காதீங்க. இதே விலைக்கு 6GB வேரியன்ட் கிடைக்கும். அதை வாங்குறதுதான் புத்திசாலித்தனம்.

தீபாவளி சேல்ங்கிறது பணத்தைச் சேமிக்க ஒரு நல்ல வாய்ப்பு. ஆனா, சரியான லேப்டாப்பைத் தேர்ந்தெடுக்கலைனா, உங்க காசு வீணாகிடும். அதனால, உங்க தேவை என்னன்னு புரிஞ்சுக்கிட்டு, சரியான ப்ராசஸர், ரேம், கிராபிக்ஸ் கார்டு இருக்கிற லேப்டாப்பா பார்த்து வாங்குங்க. இந்த கைடு உங்களுக்குப் பயனுள்ளதா இருக்கும்னு நம்புறேன். ஹாப்பி ஷாப்பிங்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com