

இன்றைய உலகில் ஆங்கிலம் ஒரு முக்கியமான மொழியாக மாறியுள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம், சமூக ஊடகங்கள் என அனைத்திலும் ஆங்கிலம் தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. இந்த ஆங்கிலம் தான் பல்வேறு இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் ஒரு தடையாக இருக்கிறது.ஆங்கிலத்தை புரிந்து கொள்வதிலும்,பேசுவதிலும் இருக்கும் முறையற்ற குழப்பத்தை தான் நாம் தடையாக நினைக்கிறோம்.
“Grammar தெரியல”, “Spoken English வரல” என்ற எண்ணங்களே பின்னுக்குத் தள்ளுகிறது. இந்த சூழலில், ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) கருவிகள் ஆங்கிலம் கற்றுக்கொள்ள ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கிறது. ChatGPT ஒரு ஆசிரியரைப் போல மட்டுமல்ல, ஒரு நண்பனைப் போலவும் நமக்கு உதவுகிறது.
நாம் தவறாக எழுதினாலும், பேசினாலும் அது நம்மை கேலி செய்வதில்லை; பதிலாக சரியான முறையில் திருத்தி சொல்லிக் கொடுக்கின்றன. இப்போது இந்த பதிவில் Chat-GPT- யை பயன்படுத்தி எப்படி ஆங்கிலம் கற்றுக் கொள்வது என்பதை பற்றி பார்ப்போம்.
Chat-GPT- மூலம் ஆங்கிலம் கற்றுக்கொள்ளும் வழிமுறைகள்.!
முதலில் பிளே ஸ்டோரில் Chat-GPT-யை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பிறகு செயலிக்குள் சென்று லாகின் செய்யவும். லாகின் செய்வதற்கான ஆப்ஷன் மேலே வலது புறத்தில் login என்று கருப்பு நிறத்தில் இருக்கும்.
டைப் செய்யும் முகப்பு திரையில் இருக்கும் மைக் பட்டனிருக்கு அருகில் உள்ள சிறிய வட்ட வடிவில் கருப்பு நிறத்தில் உள்ளே ஒலிக்கற்றைகள் போன்ற சிம்பிள் இருக்கும் பகுதியை தொடவும்.
தொட்டவுடன் நீங்கள் பேச ஆரம்பிக்கலாம். தமிழ்,ஆங்கிலம் என்று நீங்கள் எந்த மொழியிலும் பேசலாம் அதற்கேற்றார் போல் உங்களுக்கு விளக்கத்தை கொடுக்கும்.
ஆங்கிலம் கற்றுக் கொள்ள முடிவெடுத்தபின் நீங்கள் முதலில் ஆங்கிலத்தில் பேசி பழக வேண்டும். அது தவறாக இருந்தாலும் பரவாயில்லை. பிறகு அதுவே நீங்கள் எந்த இடத்தில் கிராமர் மிஸ்டேக் செய்துள்ளீர்கள் என்று சொல்லிவிடும்.
எனக்கு ஆங்கிலம் சுத்தமாக தெரியாது எனக்கு படிப்படியாக கற்றுக் கொடுக்கிறியா..! என்று இதுபோன்று கேட்டு படிப்படியாக ஆங்கிலத்தை கற்றுக் கொள்ள பழகுங்கள்.
முக்கியமாக உங்களுக்கு தெரிந்த ஆங்கிலத்தை முதலில் பேச வேண்டும். அப்போதுதான் நாம் எந்த அளவில் இருக்கிறோம் என்பது நமக்கே தெரியும்.
இந்த செயலியில் Chat-GPT-Go என்ற சப்ஸ்கிரைப் செய்யும் வசதியும் இருக்கிறது. இது ஒரு வருடத்திற்கு இலவசமாக வழங்கப்படுகிறது. ஒரு வருடம் முடிந்த பிறகு நீங்கள் பதிவு செய்த வங்கி கணக்கில் இருந்து தானாகவே ஒவ்வொரு மாதமும் 399 ரூபாய் எடுத்துக் கொள்ளப்படும்.
இந்த ஒரு வருட காலத்திற்குள் நீங்கள் சப்ஸ்க்ரிப்ஷன் ஆப்ஷனை தடை செய்து விட்டால் பிறகு உங்களால் இந்த இலவசத்தை மறுபடியும் பயன்படுத்த முடியாது. இதனால் மாத மாதம் 399 ரூபாய் பணமும் எடுத்துக்கொள்ளப்படாது. இதனால் இந்த சப்ஸ்கிரிப்ஷன் ஆப்ஷனை பயன்படுத்தியும் நீங்கள் ஆங்கில மொழியை மேம்படுத்திக் கொள்ளலாம்.
நம்மால் முடியும் என்று நினைத்தால் எதுவும் சாத்தியமே..!