

அட்டை(Leech) ஒரு ரத்த உறிஞ்சி. காடுகளில் வசிப்பவர்கள் மிகவும் அஞ்சுவது இந்த அட்டைகளிடம் தான். தற்போது அட்டைகளை வைத்து ஆராய்ச்சி செய்து பல விஷயங்களை கண்டறிந்துள்ளார்கள். ஒரு பிராணியின் ரத்தத்தை உறிஞ்சுகையில், அட்டை பல என்ஸைம்கள் அதன் வாயிலிருந்து வெளிப்படுத்துகிறது. அதில் ஒன்றான 'ஹிருதின்' ரத்தம் கட்டுதலை தடுக்க கூடிய சக்தி உடையதாக கண்டு பிடித்திருக்கிறார்கள்.
இரத்தத்தில் க்ளாட்டுகள் ஏற்படாமல் இருக்கவும் ஏற்கனவே இருக்கும் க்ளாடுகளை உடைக்கவும் செய்கிறது இந்த ஹிருதின் என்ற என்சைம்.
மேலும் அட்டையின் வாயில் சுரக்கும் இன்னொரு ரசாயன திரவம் கடிபட்ட இடம் மறத்து போக செய்கிறது. இந்த திரவத்தை லோக்கல் அனஸ்தேசியாவாக பயன்படுத்தவும் செய்கிறார்கள்.
அட்டையின் எச்சிலில் சுரக்கும் வசோடிலேட்டர்ஸ் என்ற பொருள் ரத்தக்குழாய்களை விரிவடைய செய்து ரத்த ஓட்டத்திற்கு ஊக்கமளிப்பதாகவும் கண்டுள்ளனர்.
இந்த என்ஸைமுகளால் தான் அட்டைகளால்(Leech) ரத்தத்தை தடை இல்லாமல் உறிஞ்ச முடிகிறது. இந்த கண்டுபிடிப்புகளுக்கு பிறகு அட்டைகளின் வாயில் சுரக்கும் திரவம் மருத்துவத்தில் அறுவை சிகிச்சைக்கு பிறகு ரத்தம் கட்டுதல் என்ற மிக பெரிய பிரச்னையை தவிர்க்க மிகவும் நம்பகரமான மருந்தாக உதவ ஆரம்பித்து விட்டது. அட்டை வாயிலிருந்து சுரக்கும் என்ஸைமுகளை பயங்கரமான முதுகு வலியில் அவதிபடுபவர்களுக்கு செலுத்தி உடனடி வலி குறைப்பை செய்கிறார்கள்.
சோரியாசிஸ் எக்சிமா போன்ற சரும நோயை அட்டையின் உமிழ் நீரில் உள்ள என்ஸைமுகளை பயன்படுத்தி குணப்படுத்த தொடங்கி விட்டனர்.
இதையெல்லாம் தவிர வெரிகோஸ் என்ற ரத்தநாளங்கள் தொளதொளபாக போய்விடும் வியாதியை குணப்படுத்த அட்டைகளின் உமிழ் பெரிதாக பயன்படுகிறது.
மூளையில் உண்டாகும் உயிர் கொல்லி ரத்த கட்டிகளை கரைக்க அட்டை வாய் என்ஸைம்கள் அடங்கிய மருந்துகளை மருத்துவ உலகம் பயன் படுத்துகிறது.
இது மட்டுமில்லாது ஒற்றை தலை வலி, நீரிழிவு, வயிற்றில் உண்டாகும் பலவித அல்சர்கள் ஆகியவற்றை குணப்படுத்த அட்டை வாய் என்ஸைம்கள் உபயோகிக்க ஆராய்ச்சிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)