நம்மை உயரத்திற்கு அழைத்துச் செல்லும் மின்தூக்கிகளின் (Lift) பரிணாம வளர்ச்சி!

Lift
Lift
Published on

லிப்ட் (Lift) என்பது நபர்களையோ, பொருட்களையோ உயரத்திற்கு எடுத்துசெல்லும் மெக்கானிக்கல் சாதனம். இது பல தளங்கள் கொண்ட கட்டிடங்களில் மிகவும் அவசியமானதாக இருக்கிறது.

லிப்டின் தோற்றம் மற்றும் வரலாறு:

1. பண்டைய காலம்:

கிரேக்க கலைஞர் ஆர்கிமிடீஸ் (Archimedes) கி.மு. 3ஆம் நூற்றாண்டில் தான் முதல் எளிய லிப்ட் வடிவத்தை உருவாக்கியதாக கூறப்படுகிறது. இது கயிறு மற்றும் சக்கரங்களைக் கொண்டு மனித சக்தியை அடிப்படையாகக் கொண்டு இயங்கியது.

2. மத்திய யுகம்1800களின் ஆரம்பம்:

தளங்களுக்கு இடையே பாரங்களை உயர்த்த கையால் இயக்கும் புல்லிங் மெக்கானிஸங்கள் (manual hoists) பயன்பட்டன. பெரும்பாலும் கோயில்கள், அரண்மனைகள், சிறப்பு கட்டிடங்களில் பயன்படுத்தப்பட்டது.

3. தொழில்நுட்ப வளர்ச்சி 19ஆம் நூற்றாண்டு:

1852 – Elisha Otis என்பவர் 'பாதுகாப்பு பிரேக்' கொண்ட லிப்டை கண்டுபிடித்தார். இது ஒரே ஒரு கயிறு அறுந்தாலும் லிப்ட் விழாமல் பாதுகாக்க உதவியது.

1857 – நியூயார்க்கில் முதல் பயணிகள் லிப்ட் நிறுவப்பட்டது. சுருள்கள், மோட்டார்கள் ஆகியவை வடிவமைக்கப்பட்டு, நீளமான கட்டிடங்களுக்கேற்ப பயன்படுத்த துவங்கப்பட்டது.

4. 20ஆம் நூற்றாண்டு முதல் :

இன்றைய நிலை: மின்சாரம் மற்றும் மேம்பட்ட கட்டுப்பாட்டு அமைப்புகள் வந்ததுடன் லிப்ட் பயணம் மிகவும் பாதுகாப்பானதும், வேகமானதும் ஆனது. ஹைட்ராலிக், எலக்ட்ரிக் மற்றும் மைக்ரோசிஸ்டம் வழியில் இயங்கும் வகைகள் உருவாகின.

லிப்ட் எப்படி வேலை செய்கிறது?

1.முக்கிய பாகங்கள்:

கேபின் (Cabin): நபர்கள் அமர்வதற்கான பகுதியாகும்.

கப்பல் (Shaft): கேபின் செல்வதற்கான செங்குத்தான குழி.

மோட்டார்: கேபினை மேலே/கீழே நகர்த்தும் சாதனம்.

கயிறு மற்றும் கம்பி: கேபினை தூக்க உதவும்.

கன்ட்ரோல் சிஸ்டம்: எந்த தளத்தில் நின்று எப்போது இயங்க வேண்டும் என்பதைக் கட்டுப்படுத்துகிறது.

பாதுகாப்பு பிரேக்: விபத்து ஏற்பட்டால் லிப்ட் விழாமல் தடுக்கிறது.

கௌண்டர்வேட் (Counterweight): எடை சமன்செய்யும் பொருள் (பவர் சேமிக்கும் வகையில்).

2. இயங்கும் முறை:

பயனர் ஒரு தளத்தை தேர்வு செய்வார்கள். கட்டுப்பாட்டு அமைப்பு மோட்டாருக்கு சிக்னல் அனுப்புகிறது. மோட்டார், கயிறு அல்லது ஹைட்ராலிக் தூக்கியில் சக்தி செலுத்துகிறது. கேபின் மேலே அல்லது கீழே நகர்கிறது. சரியான தளத்தில் வந்து நின்று கதவு திறக்கிறது.

இதையும் படியுங்கள்:
'சொத்து வரி ரத்தாகும்! குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேருங்கள்!'
Lift

லிப்ட் வகைகள்:

1. இயக்க முறை அடிப்படையில்

Electric Traction Lift: உலோக கம்பிகள், புல்லிகள் மூலம் இழுத்து மேலே கீழே செல்லும். உயரமான கட்டடங்களில் பயன்படுத்தப்படும். வேகமாக இயங்கும்.

Hydraulic Lift: திரவ அழுத்தத்தின் மூலம் மேல் கீழ் செல்லும். குறைந்த உயரம் கொண்ட கட்டடங்களில் பயன்படும். மெதுவாக இயங்கும், ஆனால் மிக நிதானமாகவும், மென்மையாகவும் இருக்கும்.

Pneumatic Lift: காற்றழுத்தத்தின் அடிப்படையில் இயங்கும். வீடுகளுக்குள் அமைக்கப்படும் மாடி லிப்ட்.

2. பயன்பாடு அடிப்படையில்

Passenger Lift: பொதுவாக மனிதர்களை ஏற்றி இறக்க பயன்படும். அலுவலகம், குடியிருப்பு, மையங்கள் போன்றவற்றில் இயங்கும்.

இதையும் படியுங்கள்:
Sumatran Tiger சுந்தா தீவு புலி: உலகின் மிகச் சிறிய புலி இனம்
Lift

Goods Lift: பொருட்கள் மற்றும் சுமைகளை எடுத்துச் செல்லும். கார்கோ ஏரியா, கம்பெனிகள், கையக சப்ளை இடங்கள்.

Hospital Lift: ஸ்ட்ரெச்சர் போன்றவற்றை எளிதாக எடுத்துச் செல்லும். பரந்த வெளி மற்றும் மென்மையான இயக்கம்.

Service Lift: உணவகம், ஹோட்டல்களில் உணவு, பானங்களை எடுத்து செல்ல. சிறிய அளவில் இருக்கும்.

Car Lift: கார்கள் மேல்/கீழ் செல்ல. பார்கிங் பகுதியில் பயன்படும்.

லிப்ட் என்பது நமது தினசரி வாழ்கையில் காலத்தோடு வளர்ந்த நவீன வசதியாகும். கட்டடங்களின் உயரம் அதிகரிக்கும் போதிலும், மக்கள் மற்றும் பொருட்களின் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில், பல்வேறு தொழில்நுட்பங்களால் இயக்கப்படும் வகை ஆகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com