LightSpray தொழில்நுட்பம்: 6 நிமிடத்தில் தயாரிக்கப்படும் ஷூக்கள்!

LightSpray technology
LightSpray technology: shoes made in 6 minutes!
Published on

ஓட்டப்பந்தய வீரர்கள் தங்களின் செயல் திறனை மேம்படுத்த எப்போதும் புதிய வழியைத் தேடுகிறார்கள். இலகுவான, பாதத்திற்கு ஆதரவைத் தரும் ஷூக்கள், வேகத்தை அதிகரிக்க உதவும் தொழில்நுட்பங்கள் போன்றவை அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய உதவும். அந்த வகையில் On என்கிற ஒரு புதுமையான சுவிஸ் ஸ்போர்ட்ஸ்வேர் பிராண்ட், LightSpray தொழில்நுட்பம் என்ற புது ஷூ தயாரிப்பு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 

LightSpray தொழில்நுட்பம் என்றால் என்ன? 

இந்தத் தொழில்நுட்பத்தில் ஒரு ரோபோடிக் கையைப் பயன்படுத்தி, அதன் மேற்பரப்பில் ஷூ மெட்டீரியலை ஸ்ப்ரே செய்வது மூலம் ஷூக்கள் உருவாக்கப்படுகின்றன. இது ஷூக்களை இலகுவாகவும், வசதியாகவும், நீடித்ததாகவும் மாற்றுகிறது. கிட்டத்தட்ட 6 நிமிடத்தில் இந்த புதிய தொழில்நுட்பம் மூலமாக ஒரு ஷூ முழுமையாக தயாரிக்கப்படுகிறது. 

LightSpray ஷூக்கள் பாரம்பரிய ஷூக்களை விட 30 சதவீதம் வரை இலகுவானவை. இது ஓட்டப்பந்தய வீரர்களுக்கு அதிவேகம் மற்றும் சுறுசுறுப்பை வழங்குகிறது. இதன் தனித்துவமான வடிவமைப்பு ஓட்டப்பந்தய வீரர்களின் கால்களுக்கு சிறந்த ஆதரவை வழங்குகிறது. இதில் பயன்படுத்தப்படும் பொருட்கள் உயர்தரம் வாய்ந்தவை என்பதால், ஷூக்கள் நீடித்து உழைப்பதாக இருக்கும். LightSpray முறையில் ஷூக்களை தயாரிப்பதால், கார்பன் வெளியேற்றம் கணிசமாக குறைக்கப்பட்டு, கழிவு உருவாக்கமும் பெரிதளவில் குறைகிறது. 

On Cloudbloom Strike LS என்ற ஷூ, லைட் ஸ்ப்ரே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட முதல் ஷூ ஆகும். கென்யாவின் மாரத்தான் ஓட்டப்பந்த வீரரும், இதுவரை ஒலிம்பிக்கில் இரண்டு வெள்ளி பதக்கங்களை வென்றவருமான ‘ஹெலன் ஓபிரி’ என்பவர், 2024 இல் நடக்க உள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்த ஷூக்களை அணிந்து பங்குபெற உள்ளார். 

இதையும் படியுங்கள்:
எதிர்கால நிதி சுதந்திரத்திற்கு 20களில் பணம் சம்பாதிப்பது எப்படி? பிடியுங்க 10 டிப்ஸ்!
LightSpray technology

LightSpray தொழில்நுட்பம் ஓட்டப்பந்தய ஷூக்களின் எதிர்காலத்தை மாற்றும் திறனை கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது மிகக் குறுகிய காலத்தில், ஓட்டப்பந்தய வீரர்களுக்கு இலகுவான, வசதியான மற்றும் நீடித்த ஷூக்களை வழங்குவதால், அவர்களின் செயல் திறன் மேம்படக்கூடும். மேலும், மற்ற ஷூக்களின் உற்பத்தியும் இந்த தொழில்நுட்பத்திற்கு மாற்றப்படும் நிலையில், சுற்றுச்சூழலில் கார்பன் வெளியேற்றத்தை பெருமளவில் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com