meta property="og:ttl" content="2419200" />

AI குறித்து பீதியைக் கிளப்பிய LinkedIn CEO… இந்த வேலைகள் எல்லாம் காலி! 

AI
LinkedIn CEO Ryan Rosansky
Published on

செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்நுட்பம் வெளிவரத் தொடங்கியதிலிருந்தே உலகின் வேலைவாய்ப்பு நிலவரம் குறித்த கவலைகள் எழுந்துள்ளன. இந்நிலையில், உலகின் மிகப்பெரிய தொழில் வலைதளமான LinkedIn-ன் தலைமை நிர்வாக அதிகாரி ரியான் ரோஸ்லான்ஸ்கி, AI-யின் வருகையால் வேலைகளில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது,

"AI-யின் வருகையால் வேலைகளில் ஏற்படும் மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை. இந்தியாவைப் பொறுத்தவரை, 2015-ல் இருந்த வேலைகளைச் செய்வதற்குத் தேவைப்பட்ட திறன்கள் தற்போது 40% மாறிவிட்டன. மேலும், 2030-ஆம் ஆண்டுக்குள் இது 70% வரை மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பொருள், நாம் செய்யும் வேலைகளின் தன்மை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும் என்பதுதான்.

AI-யால் பாதிக்கப்படும் வேலைகள்: ரோஸ்லான்ஸ்கியின் கூற்றுப்படி, "AI-யால் ஆட்டோமேட்டட் செய்யக்கூடிய பணிகளைச் செய்யும் நபர்கள் புதிய வேலை வாய்ப்புகளைத் தேடத் தொடங்க வேண்டும்." இதில், தரவு உள்ளீடு, தகவல் தொகுப்பு, அறிக்கை தயாரிப்பு போன்ற மீண்டும் மீண்டும் செய்யப்படும் பணிகள் அடங்கும்.

புதிய திறன்களின் அவசியம்: AI-யின் வருகையால், தொழிலாளர்கள் புதிய திறன்களை கற்றுக்கொள்வது அவசியமாகிறது. இதில், கிரியேட்டிவிட்டி, கிரிட்டிக்கல் திங்கிங், இன்டர்பர்சனல் திறன்கள் போன்ற மனிதர்களுக்கு மட்டுமே உரிய திறன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. AI, மனிதர்களின் திறன்களை மேம்படுத்தவும், புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் பயன்படுத்தப்படலாம்.

AI தொழில்நுட்பத்தால் இளைஞர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைத்துள்ளன. இவர்கள், AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உருவாக்கலாம். மேலும், பருவநிலை மாற்றம், சுகாதாரம் போன்ற உலகளாவிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் AI-யைப் பயன்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
அடேங்கப்பா! 19 நாட்களில் 55 மில்லியன் ஸ்பேம் கால்களை கண்டறிந்த Airtel-ன் AI!
AI

AI-யை எப்படி எதிர்கொள்வது?

AI-யின் வருகையால் ஏற்படும் மாற்றங்களை எப்படி எதிர்கொள்வது? என் ரோஸ்லான்ஸ்கி கூறுகையில், "AI-யை ஒரு போட்டியாளராக பார்க்காமல், ஒரு வாய்ப்பாக பார்க்க வேண்டும். தொடர்ந்து புதிய திறன்களை கற்றுக்கொண்டு, தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்."

AI-யின் வருகையால் உலகின் வேலைவாய்ப்பு நிலவரம் மாறிக்கொண்டிருக்கிறது. ஆனால், இது ஒரு அச்சுறுத்தலாக மட்டுமல்லாமல், புதிய வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது. தொழிலாளர்கள், AI-யின் மாற்றங்களுக்கு ஏற்ப தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். இளைஞர்கள், AI-யைப் பயன்படுத்தி புதிய கண்டுபிடிப்புகளை செய்து, உலகிற்கு பங்களிக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com