மின்சார வாகனங்கள் இன்று பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு ஒரு சிறந்த மாற்றாக உருவெடுத்துள்ளன. வாகன உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமல்லாமல் அரசுகளும் மின்சார வாகன உற்பத்தியை ஊக்குவித்து வருகின்றன. சூழல் மாசுபாடு குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ள நிலையில், மின்சார வாகனங்களின் பயன்பாடு தவிர்க்க முடியாததாகிவிட்டது. ஆனால் இந்த மின்சார வாகனப் புரட்சி ஒரு முக்கியமான கேள்வியையும் நமக்கு முன் வைக்கிறது. லித்தியம் அயன் பேட்டரிகளின் ஆயுட்காலம் முடிந்த பிறகு என்ன ஆகும்?
கைபேசிகள் முதல் கார்கள் வரை, இன்று லித்தியம் அயன் பேட்டரிகள் தான் மின்சாரம் சேமிக்கும் முக்கிய தொழில்நுட்பமாக உள்ளன. இந்த பேட்டரிகளின் பயன்பாடு பெருகி வரும் நிலையில், அவற்றின் கழிவுகளும் மலை போல் குவியத் தொடங்கியுள்ளன. இந்த லித்தியம் கழிவுகளை முறையாக கையாள தவறினால், அது மிகப்பெரிய சுற்றுச்சூழல் பேரழிவுக்கு வழிவகுக்கும். ஏனெனில் லித்தியம் பேட்டரிகள் நச்சு இரசாயனக் கலவைகள் நிறைந்தவை. இவை மண்ணையும் நீரையும் மாசுபடுத்தும் தன்மை கொண்டவை.
கைபேசிகள் முதல் கார்கள் வரை, இன்று லித்தியம் அயன் பேட்டரிகள் தான் மின்சாரம் சேமிக்கும் முக்கிய தொழில்நுட்பமாக உள்ளன. இந்த பேட்டரிகளின் பயன்பாடு பெருகி வரும் நிலையில், அவற்றின் கழிவுகளும் மலை போல் குவியத் தொடங்கியுள்ளன. இந்த லித்தியம் கழிவுகளை முறையாக கையாள தவறினால், அது மிகப்பெரிய சுற்றுச்சூழல் பேரழிவுக்கு வழிவகுக்கும். ஏனெனில் லித்தியம் பேட்டரிகள் நச்சு இரசாயனக் கலவைகள் நிறைந்தவை. இவை மண்ணையும் நீரையும் மாசுபடுத்தும் தன்மை கொண்டவை.
பாரம்பரிய பேட்டரிகளை மறுசுழற்சி செய்வது ஓரளவுக்கு சாத்தியம் என்றாலும், லித்தியம் அயன் பேட்டரிகளை மறுசுழற்சி செய்வது மிகவும் சிக்கலானது. அதற்கான தொழில்நுட்பமும், முதலீடும் அதிகம் தேவைப்படுகிறது. இந்தியாவில் நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக, மின்சார வாகன பேட்டரிகள் 8 முதல் 12 ஆண்டுகள் வரை மட்டுமே உழைக்கக்கூடியவை. இந்திய அரசு 2030 ஆம் ஆண்டுக்குள் 30% மின்சார வாகன பயன்பாட்டை இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை அடையும்போது, கோடிக்கணக்கான லித்தியம் பேட்டரிகள் கழிவுகளாக மாறும். அவற்றை முறையாக மறுசுழற்சி செய்யாவிட்டால், மின்சார வாகனங்களால் ஏற்படும் நன்மைகள் அனைத்தும் கேள்விக்குறியாகிவிடும்.
லித்தியம் பேட்டரிகளில் லித்தியம், கோபால்ட், நிக்கல் போன்ற விலைமதிப்பற்ற உலோகங்கள் உள்ளன. இவற்றை மீட்டெடுப்பதற்கு நவீன தொழில்நுட்பங்கள் தேவை. தற்போது சில நிறுவனங்கள் பேட்டரி மறுசுழற்சியில் ஈடுபட்டு வந்தாலும், இது ஆரம்பக் கட்டத்தில்தான் உள்ளது. முறையான மறுசுழற்சி கட்டமைப்புகள் இல்லாததால், பெரும்பாலான பேட்டரி கழிவுகள் பாதுகாப்பற்ற முறைகளில் அகற்றப்படுகின்றன. இதனால், சுற்றுச்சூழல் மற்றும் மனித சுகாதாரத்திற்கு பெரும் ஆபத்து ஏற்படுகிறது.
இந்த சவாலை சமாளிக்க, அரசு விரிவான உற்பத்தியாளர் பொறுப்பு (Extended Producer Responsibility - EPR) கட்டமைப்பை உருவாக்க வேண்டும். இதன் மூலம், பேட்டரி உற்பத்தியாளர்கள் பேட்டரியின் முழு ஆயுள் சுழற்சிக்கும் பொறுப்பேற்க வேண்டும். பேட்டரிகளை திரும்பப் பெறுதல், மறுசுழற்சி செய்தல், பாதுகாப்பான முறையில் அகற்றுதல் போன்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும் அவர்களே பொறுப்பேற்க வேண்டும். மேலும், அரசு கிரிட்டிகல் மெட்டல்ஸ் மிஷன் போன்ற திட்டங்களின் மூலம், பேட்டரி மறுசுழற்சிக்கு தேவையான உலோகங்களை உள்நாட்டிலேயே பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும், அதிநவீன மறுசுழற்சி தொழில்நுட்பங்களில் அதிக முதலீடு செய்வதும் அவசியம். ஹைட்ரோமெட்டாலர்ஜிகல் மற்றும் நேரடி மறுசுழற்சி போன்ற நவீன முறைகள் மூலம் 95% வரை பேட்டரி பொருட்களை மீட்டெடுக்க முடியும். இந்த தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க அரசு ஊக்கத்தொகைகளை வழங்க வேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலம், மறுசுழற்சி திறனை அதிகரிக்கவும், சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைக்கவும் முடியும்.