

மங்களூரு பச்சனாடி எனுமிடத்தில் குப்பைக் கிடங்கில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து சுமார் 10,000 லிட்டர் பைரோலைசிஸ் ஆயில் தயாரிக்கப்பட்டுள்ளது. பெங்களூரைச் சேர்ந்த ARV CONSERVATION CARE LIMITED என்ற அமைப்பு குட்லா க்ரீன் வேவ் என்ற அமைப்புடன் இணைந்து குப்பைக் கிடங்கில் இருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளைப் பிரித்தெடுத்து பைரோலைசிஸ் என்ற முறையைப் பயன்படுத்தி எண்ணையை உற்பத்தி செய்துள்ளது. இது மிகவும் வெற்றிகரமான திட்டம் என்று ஸ்வச்சா பாரத் இயக்கத்தைச் சேர்ந்த குல்கர்னி பாராட்டியுள்ளார்.
முதலில் குப்பைக் கிடங்கில் கொட்டி வைக்கப்படும் கழிவுகள் நன்கு பிரித்தெடுக்கப்படுகின்றன. Refuse derived fuel என்ற பொருள் மூலம் குப்பைகள் பிரிக்கப் படுகின்றன. பிறகு இது பைரோலைசிஸ் முறைக்கு உட்படுத்தப்படுகிறது. இந்த முறையில் எண்ணெய் உற்பத்திக்காகவே Depolymerization பிளாண்ட் உருவாக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து எண்ணெய் தயாரிப்பது மிக வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த பிளான்ட் மூலம் தினமும் சுமார் 15 மெட்ரிக் டன் அளவு குப்பைக் கழிவுகள் பைலோரைசிஸ் என்ற முறைப்படி ஆக்சிஜன் இல்லாத நிலையில் பிளாஸ்டிக் கழிவுகளை எண்ணெய்யாக மாற்றுகின்றன.
இந்த ஃப்ரான்ஸ் கட்டிலிருந்து பத்து மணிநேரம் தொடர்ந்து நடக்கிறது. இதில் பைரோலைசிஸ் ஆயில் உற்பத்தியோடு சின்காஸ் மற்றும் கருப்பு கார்பனும் வெளியிடப்படுகிறது. இந்த பைரோலைசிஷஸ் ஆயில் தொழிற்சாலை பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகின்றன.
இந்த ஃப்ரான்ஸ் மூலம் கிடைக்கும் உபபொருட்களும் பயன்பாட்டில் உள்ளன. சின்காஸ் எனப்படுவது பவர் ஆபரேஷன் கழிவு, கருப்பு கார்பன் சிமெண்ட் தொழிற்சாலை மற்றும் பாய்லர் தொழிற்சலைகளுக்கு கார்பன் பௌடர் பயனுள்ளதாக உள்ளது.
மங்களூர் Refinery and petrochemicals limited இந்த பைரோலைசிஸ் ஆயிலை பரிசோதனை செய்து. 15லிருந்து 20சதவீதம் நல்ல எண்ணையாக மாறிய்யுள்ளதாகக் கூறியுள்ளது. இப்போதுள்ள மேற்கு ஆசிய எண்ணெய் கலவர நிலையில் இந்த பைரோலைசிஸ் எண்ணை சிறந்த மாற்றாக கருதப்படுகிறது. மங்களூரில் சுமார் இரண்டு கி.மீ. நீளம் வரை குப்பைகள் ஆக்ரமித்து உள்ளது.
இந்நிலையில் இந்த முயற்சி வரவேற்கத்தக்கதாக உள்ளது. இந்த முயற்சி ஸ்வச்சா பாரத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது சிறப்பான விஷயமாகும். பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாகி மக்களுக்கு தீங்கு இழைக்கும் சமயதாதில் இப்படி ஒரு புதிய முயற்சியான பிளாஸ்டிக்கிலிருந்து எண்ணெய் தயாரிப்பது என்பது ஆறுதலான விஷயம்.
இனி குப்பைக் கிடங்குகளை பயனுள்ளதாக மாற்றலாம். இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டதால் குப்பைகள் எண்ணெய்யாக மாறும் நிலை ஏற்படும்.
இந்தத் தொழில்நுட்பப் புரட்சியைப் புரிந்துகொள்வதன் மூலம், உங்களைச் சுற்றியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை வெறும் குப்பையாகப் பார்க்காமல், எதிர்காலத்திற்கான மாற்று ஆற்றல் மூலமாகவும், லாபகரமான சுற்றுச்சூழல் தீர்வாகவும் மாற்றும் புதிய உலகளாவியப் பார்வையைப் பெறலாம்.