டைப்-சி போர்ட் ரகசியம்... இத்தனை வருஷமா நம்மள இப்பிடி முட்டாள் ஆக்கிட்டாங்களே!

ஸ்மார்ட்போன் முதல் லேப்டாப் வரை உலகையே ஆளும் டைப்-சி சார்ஜர் பின்னணியில் இருக்கும் 'C' எழுத்துக்கான உண்மையான அர்த்தம் மற்றும் அதன் சுவாரஸ்யமான வரலாறு இதோ.
USB C origin story டைப்-சி சார்ஜர்
USB C origin story டைப்-சி சார்ஜர்
Updated on

இன்றைய டிஜிட்டல் உலகில் காலையில் கண் விழிப்பது முதல் இரவு தூங்கச் செல்லும் வரை நம்முடைய கைகளை விட்டு அகலாத ஒரு முக்கிய கருவி தான் ஸ்மார்ட்போன். அந்தக் கருவிக்கு உயிர் கொடுக்கும் Type-C போர்ட் பற்றி நாம் எப்போதாவது ஆழமாக யோசித்தது உண்டா என்று கேட்டால், பலரும் இல்லை என்றுதான் சொல்வார்கள். 

இப்போது சந்தையில் கிடைக்கும் அத்தனை எலெக்ட்ரானிக் சாதனங்களிலும் இருக்கும் இந்த ஒற்றை போர்ட் பின்னணியில் ஒரு பெரிய கதையே மறைந்துள்ளது. பலரும் நினைப்பது போல இது அதிவேகம் அல்லது சிறிய வடிவம் என்பதற்கான ஆங்கிலக் குறியீடு கிடையாது. நாம் தினமும் பயன்படுத்தும் டைப்-சி சார்ஜர் உள்ளே இருக்கும் ஆங்கில எழுத்து எதைக் குறிக்கிறது என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

ஆங்கிலவரிசையயின் ரகசியம்!

தொழில்நுட்ப உலகில் எதையாவது புதிதாகக் கண்டுபிடித்தால் அதற்குப் பெரிய தத்துவப் பெயர்களை வைப்பார்கள் என்று நாம் கற்பனை செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் இங்கே அப்படி எதுவுமே நடக்கவில்லை. கம்ப்யூட்டர் மற்றும் பவர் பேங்க்களில் நாம் சொருகும் அந்தப் பழைய செவ்வக போர்ட் தான் முதல் மாடல். அதற்கு அவர்கள் Type-A என்று பெயர் வைத்தார்கள். அதன் பிறகு பிரிண்டர் போன்ற பெரிய இயந்திரங்களுக்குச் சதுர வடிவத்தில் ஒரு மாடல் வந்தது, Type-B என்று அழைக்கப்பட்டது. 

இந்த இரண்டு பழைய டிசைன்களிலும் இருந்த மிகப்பெரிய தலைவலி என்னவென்றால், அவற்றை ஒரே ஒரு பக்கமாகப் பார்த்துச் சரியாகச் சொருகினால் மட்டுமே உள்ளே செல்லும். அவசரத்தில் இருட்டில் தலைகீழாகச் சொருகி போர்ட்டை உடைத்தவர்கள் இங்கே ஏராளம். இந்தக் குழப்பத்தை நிரந்தரமாகத் தீர்க்க 2014-ம் ஆண்டு யூ.எஸ்.பி இம்ப்ளிமெண்டர்ஸ் ஃபோரம் (USB Implementers Forum) என்ற அமைப்பு ஒரு புதிய டிசைனை அறிமுகம் செய்தது. ஏ மற்றும் பி மாடல்களுக்குப் பிறகு வந்த மூன்றாவது மாடல் என்பதால், இதற்கு வரிசைப்படி சி மாடல் என்று மிகவும் சாதாரணமாகப் பெயர் சூட்டினார்கள்.

USB C origin story டைப்-சி சார்ஜர்
USB C origin story டைப்-சி சார்ஜர்
இதையும் படியுங்கள்:
மருத்துவ உலகையே வியக்க வைத்த அதிசயம்: 5 நாட்கள் இடைவெளியில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்மணி!
USB C origin story டைப்-சி சார்ஜர்

தொழில்நுட்ப உலகில் ஏற்படுத்திய மாபெரும் புரட்சி!

பெயர் வைப்பதில் எந்தவொரு பெரிய பில்டப்பும் இல்லை என்றாலும், இந்தக் கருவி செய்துள்ள சாதனைகள் மிகப்பெரியவை. இதை இருட்டில் எப்படித் திருப்பிச் சொருகினாலும் உள்ளே கச்சிதமாகப் பொருந்தும். வெறும் தகவல்களை மட்டும் கடத்தாமல், பல மடங்கு மின்சாரத்தையும் ஒரே நேரத்தில் கடத்தும் அசுர பலம் இதற்கு உண்டு. லேப்டாப் மற்றும் பெரிய திரைகளை கூட இயக்கும் ஆற்றல் இந்த ஒற்றை வயருக்கு இருக்கிறது. 

தனக்கென தனி Lightning Port வைத்துப் பல வருடங்களாகக் கெத்து காட்டி வந்த உலகப் புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனமே, ஐரோப்பிய ஒன்றியத்தின் கடுமையான சட்டத்திற்குப் பயந்து தங்களின் iPhone 15 மாடலில் இருந்து இந்த உலகளாவிய போர்ட்டிற்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது நுகர்வோரின் பணத்தை மிச்சப்படுத்திய மாபெரும் தொழில்நுட்ப நகர்வாகும்.

இதையும் படியுங்கள்:
உலகையே மாற்றிய 7 ரகசிய கண்டுபிடிப்புகள்.. இது தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!
USB C origin story டைப்-சி சார்ஜர்

உலகையே ஆட்டிப்படைக்கும் ஒரு மாபெரும் புரட்சிக்கு மிகவும் எளிமையான ஒரு பெயர் தான் வைக்கப்பட்டுள்ளது. இனி உங்களிடம் யாராவது உங்களிடம் வந்து சீரியஸான முகத்துடன் டைப்-சி சார்ஜர் பின்னணியில் இருக்கும் ரகசியம் பற்றித் தெரியுமா என்று கேட்டால், சற்றும் பதற்றப்படாமல் சிரித்துக்கொண்டே உண்மையைச் சொல்லித் தெறிக்க விடுங்கள். 

ஏ எழுத்துக்கு அப்புறம் பி வருகிறது, பி எழுத்துக்கு அப்புறம் சி வருகிறது என்ற எளிய ரகசியம் தான் இந்த பில்லியன் டாலர் தொழில்நுட்பத்தின் ஒரிஜினல் ரகசியம்.

logo
Kalki Online
kalkionline.com