
இப்போதெல்லாம் கணிக்க முடியாத காலநிலை மாற்றங்களால் திடீர் மழையும், எதிர்பாராத வெப்ப அலைகளும் அன்றாட வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கின்றன. இத்தகைய சூழலில், காலநிலை குறித்த தகவல்களை முன்கூட்டியே அறிந்துகொள்வது அத்தியாவசியமாகிறது. இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள Mausam App மக்களுக்கு பெரும் உதவியாக உள்ளது.
மௌசம் செயலி என்பது இந்திய வானிலை ஆய்வு மையமும், மத்திய புவி அறிவியல் அமைச்சகமும் இணைந்து உருவாக்கிய ஓர் அற்புதமான கருவியாகும். இதன் மூலம் நாம் இருக்கும் பகுதியின் நிகழ்கால வானிலை நிலவரங்கள், அடுத்த சில நாட்களுக்கான கணிப்புகள், ரேடார் படங்கள் மற்றும் புயல், கனமழை, வெப்ப அலை, இடியுடன் கூடிய மழை போன்ற தீவிர வானிலை குறித்த எச்சரிக்கைகளை உடனடியாகப் பெற முடியும். இது நமக்கு இயற்கைப் பேரிடர்களுக்கு முன்னரே தயாராக
மௌசம் செயலியை உங்கள் மொபைலில் பெறுவது எப்படி?
இந்தச் செயலியைப் பெறுவது மிகவும் எளிது. ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்துபவர்கள் கூகிள் பிளே ஸ்டோரில் "Mausam - IMD" எனத் தேடி, செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஐபோன் பயன்படுத்துபவர்கள் ஆப் ஸ்டோரில் "Mausam IMD" என டைப் செய்து, செயலியை நிறுவலாம். நிறுவிய பிறகு, உங்கள் இருப்பிட விவரங்களைச் சேர்த்து, Notifications எனேபிள் செய்து வைப்பது மிகவும் முக்கியம். இதன் மூலம் வானிலை மாற்றங்கள் குறித்த தகவல்கள் உடனுக்குடன் உங்கள் மொபைலுக்கு வந்து சேரும்.
செயலியைப் பயன்படுத்துவது எப்படி?
மௌசம் செயலியைத் திறந்து, இருப்பிடத்திற்கான அனுமதியையும், அறிவிப்புகளுக்கான அனுமதியையும் வழங்க வேண்டும். இந்திய வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்படும் முக்கியமான வானிலை எச்சரிக்கைகள் அனைத்தும் உங்களுக்குத் தானாகவே அறிவிப்புகளாக வந்து சேரும்.
மேலும், செயலியின் அமைப்புகளுக்குச் சென்று Rain Alert விருப்பத்தைத் தேர்வு செய்வது அவசர காலங்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் தேர்வு செய்த இருப்பிடத்திற்கு ஏற்ப, அனைத்து முக்கிய வானிலை மாற்றங்கள் பற்றிய நேரடி அறிவிப்புகளையும் இச்செயலி வழங்கும். இந்தத் தகவல்கள் அனைத்தும் இந்திய வானிலை ஆய்வு மையத்தால் அங்கீகரிக்கப்பட்டவை என்பதால், அவற்றை நம்பி உங்கள் அன்றாட வேலைகளைத் திட்டமிடலாம்.
இயற்கைப் பேரழிவுகளுக்கு முன்கூட்டியே தயாராக இதுபோன்ற அரசு செயலிகள் பெரும் பங்கு வகிக்கின்றன. மௌசம் செயலி முற்றிலும் இலவசமாகவும், பயனுள்ளதாகவும் இருப்பதால், அத்தகைய பேரிடர்களின் போது சரியான நேரத்தில் தகவல்களைப் பெற்று நம்மைப் பாதுகாத்துக் கொள்ள இது ஒரு அத்தியாவசிய கருவியாகும். அனைவரும் இந்தச் செயலியை தங்கள் மொபைலில் வைத்திருப்பது மிகவும் அவசியம்.