பூமியை விட குறைவான காந்தப்புலம் கொண்ட மெர்குரி கிரகம்… ஆச்சரியமா இருக்கே! 

Mercury planet
Mercury planet
Published on

சூரியக் குடும்பத்தில் மிகச் சிறிய கிரகமான புதன் (Mercury), பல விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதன் சிறிய அளவு மட்டுமின்றி, அதன் தனித்துவமான காந்தப்புலம், மேற்பரப்பு நிலைகள் போன்ற பல அம்சங்கள் இதற்குக் காரணம்.‌ குறிப்பாக புதன் கிரகத்தின் காந்தப்புலம் பூமியின் காந்தப்புலத்தை விட மிகவும் குறைவாக இருப்பது ஒரு முக்கியமான காரணம். 

புதனின் காந்தப்புலம்: புதன் ஒரு சிறிய கிரகம் என்றாலும், அதற்கு ஒரு காந்தப்புலம் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. பூமியின் காந்தப்புலம் அதன் மையப் பகுதியில் உள்ள உலோகம் மற்றும் பூமியின் சுழற்சியால் உருவாகிறது. புதன் கிரகமும் பூமியைப் போலவே நடுப்பகுதியில் உலோகக் கருவை கொண்டிருந்தாலும், அதன் காந்தப்புலம் பூமியை விட மிகவும் குறைவாக இருப்பது ஏன்? 

புதனின் குறைந்த காந்தப்புலத்திற்கான காரணங்கள்: 

புதனின் கரு மற்ற கிரகங்களைப் போல பெரியதாக இல்லை. சிறிய கரு காரணமாக அதிகப்படியான காந்தப்புலத்தை உருவாக்கும் செயல்முறை குறைவாகவே இருக்கும். புதன் மிகவும் மெதுவாக சூழலும் கிரகம். சுழற்சி வேகம் குறைவாக இருப்பதால் காந்தப்புலத்தை உருவாக்கும் செயல்முறை பாதிக்கிறது. மேலும் புதனின் கருவில் உள்ள உலோகங்களின் கலவை மற்ற கிரகங்களை விட வேறுபட்டு இருக்கலாம். இதுவும் காந்தப்புலத்தை பாதிக்கும் வாய்ப்புள்ளது. 

இதையும் படியுங்கள்:
பூமி உளுந்து வடை வடிவத்தில் இருந்தால் என்ன ஆகும்? அடக்கடவுளே! 
Mercury planet

காந்தப்புலத்தின் விளைவுகள்: 

பூமியின் காந்தப்புலத்துடன் ஒப்பிடுகையில் புதன் கிரகத்தின் காந்தப்புலம் வெறும் 1 சதவீதம் மட்டுமே. எனவே, காந்தப்புலம் மிகவும் பலவீனமாக இருக்கும். சூரியனிலிருந்து வரும் சார்ஜ் செய்யப்பட்ட துகள்கள் புதனின் காந்தப்புலத்துடன் தொடர்பு கொண்டு அங்கு ஒரு வகையான ஒளியை உருவாக்குகின்றன. இது புதனின் வளிமண்டலத்தை வெகுவாக பாதிக்கிறது. வளிமண்டலம் இல்லாததால் சூரியனிலிருந்து வெளிவரும் வெப்ப காற்று நேரடியாக அதன் மேற்பரப்பை தாக்கி, மெர்குரி கிரகத்தின் தன்மையை முற்றிலுமாக மாற்றியமைக்கிறது. புதனின் காந்தப்புலத்தைப் பற்றிய ஆய்வு சூரியக் குடும்பத்தில் உள்ள மற்ற கிரகங்களின் காந்தப் புலன்களை பற்றி மேலும் அறிய உதவும். 

இதுவரை புதன் கிரகத்தை ஆய்வு செய்ய பல்வேறு விண்கலன்கள் அனுப்பப்பட்டுள்ளன. அமெரிக்கா அனுப்பிய மெசஞ்சர் விண்கலம் புதனை பல ஆண்டுகாலம் சுற்றி வந்து பல முக்கிய தகவல்களை சேகரித்தது. இந்த ஆய்வுகள் புதனின் காந்தப்புலம் குறித்த புரிதலை மேலும் மேம்படுத்தியது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com