கடல் கன்னிகள் உண்மையா? மாயையா? உலகை உலுக்கும் விசித்திர ரகசியங்கள்!

கொலம்பஸ் பார்த்ததாகக் கூறியது முதல் மர்ம எலும்புக்கூடு வரை - கடல் கன்னிகளின் திடுக்கிடும் உண்மை பின்னணி!
கடல் கன்னி - Mermaid facts
கடல் கன்னி - Mermaid facts
அகிலா சிவராமன்

வணக்கம், நான் சென்னையில் பிறந்து வளரந்தேன். 1995 ஆம் ஆண்டு திருமணத்திறகுப் பிறகு நான் ஜம்ஷேட்பூரில் settle ஆகி விட்டேன். நான் கடவுள்களின் பெயரில் நிறைய பாடல்கள் எழுதி இருக்கிறேன். நான்கைந்து வருடங்களுக்கு முன்னால் தான் எனக்கு எழுதும் ஆர்வம் வந்தது. நான் முதன் முதலாக எழுதிய கதை, புயலின் மறுபக்கம் கல்கியின் மங்கையர் மலரில் 04.01.2025 அன்று வெளி வந்தது. கல்கி குழுமத்திற்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு முதன்முதலாக எழுத சந்தர்ப்பம் கொடுத்த கல்கி குழுவினருக்கும், எனக்கு ஆதரவு தரும் வாசகர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும உங்களின் மனதை கவரும் வகையில் எழுத முயற்சி செய்வேன்.

Updated on: 

நெடுங்காலமாக கடல் கன்னிகள் பற்றிய பல்வேறு விதமான விஷயங்கள் பரவி வருகிறது. இந்தக் கடல் கன்னிகள் உண்மையில் இருக்கிறார்களா என்றால் அதற்கு எந்தவிதமான ஆதாரமும் கிடைக்கவில்லை. மேலும் சில இடங்களில் கடல் கன்னியை தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள். அதற்காக கடல் கன்னிகளுக்கு பூஜையும் நடைபெற்று வருகிறது 

இந்தக் கடல் கன்னி உருவ அமைப்பு அதிசயத்தக்க வகையில் உள்ளது. உடலின் மேல் பகுதி பெண்களைப் போலவும் கீழ்ப்பகுதி மீனை போலவும் உள்ளது. இந்த கடல் கன்னிகள் ஆழமான கடல் பகுதியில் வசிப்பதாக கூறப்படுகிறது 

இதை முதன் முதலாக வெளியிட்டவர் அமெரிக்காவை சார்ந்த கிறிஸ்டோபர் கொலம்பஸ். 1493 ஆம் ஆண்டு கடல் வழி பயணம் செய்யும்போது கபீரியன் தீவுகளுக்கு இடையே கடல் கன்னிகளை பார்த்ததாக கூறுகிறார்.

ஆனால் அவர் பார்த்த கடல் கன்னிகள் அவலட்சணமாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். அந்தக் கடல் கன்னிகள் கப்பலை சாய்க்கும் அளவுக்கு வலிமை உள்ளதாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். 1608 ஆம் ஆண்டு ஐரோப்பாவைச் சார்ந்த சார்லஸ் ஹென்றி கடல் பயணத்தின்போது கடல் கன்னியை பார்த்ததாகவும் அவரை கடல் கன்னி அதிகம் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். 

 இந்தக் கடல் கன்னி பற்றிய செய்திகள் மற்றும் நம்பிக்கை இந்தியா அமெரிக்கா கிரீஸ் சைனா ஜப்பான் போன்ற நாடுகளில் அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது.  ஜப்பான் மக்கள் ஒரு படி மேலே போய் கடல் கன்னி களுக்கு மரணம் இல்லை என கூறுகிறார்கள். கடல் கன்னியில் பெண்கள் மட்டும் இல்லை ஆண்களும் இருப்பதாக ஜப்பானியர்கள் கூறுகிறார்கள். கடல் கன்னி வேட்டையாடிக் கொண்டு வரும் உணவை கடல் கன்னி வடிவில் உள்ள ஆண்களும் சாப்பிடுவதாக கூறுகிறார்கள். 

இதையும் படியுங்கள்:
3500 வருட பழமையான ஊஞ்சல்: சாமியா அல்லது வெறும் பொம்மையா? அதிர்ச்சி தகவல்.
கடல் கன்னி - Mermaid facts

அறிவியல்படி அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. வரும் காலங்களில் கடல் கன்னிகள் இருப்பதை நாம் கண்கூடாக காணலாம். அதுவரை நாம் காத்திருக்க வேண்டும். அக்காலத்தில் கடலில் மீன் பிடிக்க யாரும் வரமாட்டார்கள்.

எனவே கடல் கன்னிகள் இருப்பதாக கூறி அவர்களை வேலைக்கு அழைத்துச் செல்வார்கள். ஐரோப்பா மற்றும் அரேபியர்கள் இந்த வழிமுறையை கையாண்டார்கள். 

1991இல் பாம்பன் பாலம் கட்டுமான வேலைகள் நடைபெற்ற போது ஒரு டேங்கர் லாரி தவறி கடலில். விழுந்து விட்டது. பின்னர் அதை விசைப்படகுகள் மூலம் மீட்டி கொண்டு கொண்டு வந்தனர். அதற்கு கடல் கன்னி என பெயரிட்டனர். பறக்கும் தட்டு ஏலியன்போல் கடல் கன்னியையும் கற்பனை கதை என்று சொல்வார்கள். நம்புவது கடினம் கடல் கன்னி இன்று வரை மர்மமாக உள்ளது. 

கடல் கன்னி - Mermaid facts
கடல் கன்னி - Mermaid factsImage credit: Gemini

ஆஸ்திரியாவில் ஒரு பெண் தன் காதலனை கொன்று விட்டு பின்னர் கடலில் குதித்து கடல் கன்னியாக மாறியதாக இன்றும் அந்த நாட்டில் ஒரு கதை உள்ளது. 2012 இல் ஜிம்பாப்வே நாட்டில் கடலில் பாலம் வேலை நடைபெறும்போது கடல் கன்னி வேலை செய்ய முடியவல்லை. பால வேலை செய்யும் மனிதர்களை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
எத்தியோப்பியாவின் வியப்பூட்டும் பாரம்பரியம்: மரக்குச்சிகளில் நடக்கும் பன்னா மக்கள்!
கடல் கன்னி - Mermaid facts

பெர்முடா கடல் பகுதியில் அதிக அளவில் கடல் கன்னிகள் இருப்பதாக குறிப்பிடுகிறார்கள். கடல் கன்னிகளை பார்ப்பது மிகவும் அரிது.  இது குறித்து ஆராய்ச்சிகள் இன்றும் நடைபெற்று வருகிறது. நம் கண்களுக்கு தான் இன்னும் சிக்கவில்லை. கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே சிரியாவில் கடல் கன்னி இருந்ததாக கூறப்படுகிறது. வெள்ளம் புயல் கடல் சீற்றம் போன்றவற்றுக்கு கடல் கன்னி தான் காரணம் என சொல்லப்படுகிறது 

 கிரேக்க மன்னன் அலெக்சாண்டர் தங்கை கடல் கன்னியாக கடலில் வசிப்பதாக அக்காலத்தில் கூறப்படுவது உண்டு. கடலில் பயணம் செய்பவர்களை தடுத்து நிறுத்தி தன் அண்ணன் அலெக்சாண்டர் பற்றி விசாரித்ததாகவும் அக்காலத்தில் கூறுவார்கள். ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் கடல் கன்னியின் எலும்புக்கூடு கைப்பற்றப்பட்டது 

அந்த எலும்பு கூட்டில் மேல் பகுதி பெண் வடிவத்திலும் கீழ்ப்பகுதி மீன் வடிவத்திலும் எழும்புக்கூடு காணப்பட்டதாக ஆராய்ச்சி கூறுகிறது.

ராமாயண காலத்தில் ராவணனின் தங்கை கடல் கன்னியாக இருந்ததாக புராண வரலாறு உண்டு. மைசூர் அருகே ஸ்ரீரங்கப்பட்டணம் காவிரி ஆற்றில் கடல்கன்னி இருந்ததாக செய்திகள் வந்தது. இவையெல்லாம் நம்பும் படியாகவும் உள்ளது நம்பாத மாதிரியும் உள்ளது 

எது எப்படியோ இது சம்பந்தமாக இன்றும் ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது எனக்குத் தெரிந்த வகையில் கடல் கன்னிகள் இல்லை கடல் பன்னிகள்தான் உண்டு.

logo
Kalki Online
kalkionline.com