இளம் வயதினருக்கு மெட்டா நிறுவனம் போட்ட கட்டுப்பாடு!

Metta company.
Metta company.
Published on

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்பாட்டாளர்களுக்கு பதிவுகளை காட்டுவதில் கட்டுப்பாடை விதித்திருக்கிறது மெட்டா நிறுவனம்.

இன்றைய காலத்தில் மிக முக்கிய பயன்பாடுகளில் ஒன்றாக மாறிப்போன சமூக ஊடகப் பயன்பாடு பல்வேறு வகையான நன்மைகளை தந்தாலும், அதில் ஆபத்துகளுக்கும் பஞ்சமில்லாமல் இருக்கிறது. சமூக ஊடகங்கள் மூலம் அனைத்து வகை தகவல்களும் பாரபட்சமின்றி எல்லா வயது பார்வையாளர்களையும் சென்றடைகிறது. இதன் மூலம் இளம் வயதின வயதினர் தவறான முடிவை எடுக்கும் நிலைக்கு செல்கின்றனர். மேலும் சமூக ஊடகத்தின் தாக்கத்தால் பலரும் மன அழுத்தம், மனநல பாதிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு உள்ளாகின்றனர். மேலும் சிலர் தற்கொலை வரை செல்கின்றனர்.

இந்த நிலையில் சமூக ஊடக பயன்பாட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மெட்டா நிறுவனம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது.

இதன் மூலம் மெட்டா நிறுவனத்தினுடைய துணை நிறுவனங்களான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்பாட்டாளர்களுக்கு இனி அனைத்து வகையான பதிவுகளும் காட்டப்படாது என்று தெரிவித்திருக்கிறது. குறிப்பாக self harm, eating disorders, தற்கொலை, போதைப்பொருள் மற்றும் ஆபாச வார்த்தைகள் போன்ற உள்ளடக்கங்களும் மற்றும் keyword-களும் மறைத்து வைக்கப்பட உள்ளது. இது சம்பந்தமான புகைப்படம், வீடியோ ஆகியவையும் மறைத்து வைக்கப்படும்.

இதையும் படியுங்கள்:
வாசமிகு பெர்ஃப்யூம்கள், கிரீம்கள், லோஷன்களால் ஏற்படும் பக்கவிளைவுகள் தெரியுமா?
Metta company.

Restrictive content control என்ற செட்டிங்ஸ் இனி புதிதாக தொடங்கும் அனைத்து சமூக ஊடகப் பணியாளர்களுக்கும் பொருந்தும் என்றும் பழைய பணியாளர்கள் செட்டிங்ஸில் இந்த அம்சத்தை ஆக்டிவ் செய்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆபத்து மற்றும் ஆபாசமான புகைப்படங்கள் கட்டுப்படுத்த இது போன்ற கருத்துக்களை, புகைப்படங்களை அல்லது வீடியோக்களை பதிவு செய்யும் ஐடிகளை முடக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com