இன்றைய இளம் வயதினர் அதிகம் பயன்படுத்தும் சமூக ஊடகங்களில் ஒன்றாக யூடியூப் திகழ்கிறது.
இன்றைய சமூகத்தில் சமூக ஊடகங்கள் மிகப்பெரிய தாக்கத்தை செலுத்துகின்றன. வயது வரம்பு இன்றி அனைத்து தரப்பினர் மத்தியிலும் சமூக ஊடகங்கள் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. இதன் காரணமாக இந்திய சமூகத்தில் சமூக உரையாடல்கள் பெருமளவில் குறைந்து வருகிறது. அதே சமயம் டிஜிட்டல் உரையாடல்கள் அதிகரித்து வருகிறது.
இவ்வாறு சமூகத்தின் முக்கிய அங்கமாக மாறிப்போன சமூக ஊடகங்களில் அதிக பயனாளர்களின் எண்ணிக்கையைக் கொண்டு முதல் இடத்தில் உள்ள சமூக ஊடகம் யூடியூப் ஆகும் என்று பியூ ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக இளம் வயதினரை மையப்படுத்தி நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவு, இன்றைய இளம் வயதினர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் பயன்படுத்தும் சமூக ஊடகமாக யூடியூப் விளங்குகிறது. யூடியூபினுடைய பயன்பாடு 2023 ஆம் ஆண்டில் 71 சதவீதம் இருக்கிறது. மேலும் யூடியூபை தொடர்ச்சியாக பயன்படுத்தும் பயனாளர்களுடைய எண்ணிக்கை 16 சதவீதம் உயர்ந்திருக்கிறது.
19 சதவீத மக்களால் பேஸ்புக் பயன்படுத்தப்படுகிறது. தினசரி தொடர்ச்சியாக 3 சதவீதம் பேர் மட்டும் பேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர். இளம் வயதினர் பயன்படுத்தும் முக்கிய சமுக ஊடகங்களில் ஒன்றாக டிக் டாக் உள்ளது. இது 17 சதவீத பயன்பாட்டாளர்களை கொண்டிருக்கிறது. இன்ஸ்டாகிராம் 14 சதவீத பயன்பாட்டாளர்களை கொண்டிருக்கிறது. மேலும் தொடர்ச்சியாக பயன்படுத்தும் நபர்களுடைய எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. ஸ்னாப் சார்ட்டை 8 சதவீதம் பேர் பயன்படுத்துகின்றனர்.
எக்ஸ் தளத்தினுடைய பயன்பாடு 2023 ஆம் ஆண்டில் பெருமளவில் பின்னடைவு சந்தித்திருக்கிறது. அதற்கு அந்த நிர்வாகம் எடுத்த நடவடிக்கைகளே காரணம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவின் 60 சதவீத மக்கள் பல்வேறு சமூக வலைதளங்களில் கணக்கை தொடங்கி பயன்படுத்தும் நிலை உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.