நியோ பெலாஜிக்: கடலின் நடுவே பிளாஸ்டிக் குப்பைகளால் உருவான வினோத உலகம்!

neo pelagic
neo pelagic
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

நியோ பெலாஜிக் (Neopelagic) என்பது கடலில் மனிதர்கள் கொட்டிய பிளாஸ்டிக் குப்பைகளின் கழிவுகளின் மீது உருவாகும் புதிய வகை சுற்றுச்சூழல் அமைப்பைக் குறிக்கிறது. கடற்கரையோர உயிரினங்கள் நீண்ட கால நிலைத்திருக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் கடலின் நடுப்பகுதிக்கு வந்து அங்கு நடுக்கடல் உயிரினங்களுடன் இணைந்து வாழும் சூழலை குறிக்கிறது.

பசிபிக் பெருங்கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகளில் கடற்கரை உயிரினங்கள் குடியேறி புதியதொரு சுற்றுச்சூழலை உருவாக்கியுள்ளது. இது உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி முதல் அதிகரித்துள்ள பிளாஸ்டிக் மாசுபாட்டால், கடலோர உயிரினங்கள் (Anemones, Hydroids, Amphipods) திறந்த கடலில் உயிர்வாழ இந்த 'புதிய திறந்த கடல்' (Neopelagic) உதவுகிறது.

இது இயற்கையின் தகவமைப்புத் திறனைக் காட்டினாலும், பிளாஸ்டிக் குப்பைகள் மூலம் வேற்று உயிரினங்கள் புதிய இடங்களுக்குப் பரவி, கடல் சூழலை சீர்குலைக்கும் பெரிய ஆபத்தை ஏற்படுத்துகிறது. இது ஒரு சுற்றுச்சூழல் பொறியியல் மாற்றமாக பார்க்கப்பட்டாலும், கடலின் சமநிலையை பாதிக்கும் அச்சுறுத்தலாகவே உள்ளது.

கடலோர உயிரினங்கள் மற்றும் ஆழ்கடல் உயிரினங்கள் மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை வீடாகப் பயன்படுத்தி, திறந்த கடலில் உயிர் வாழும் வினோதமான சூழல் இது. கடலோரப் பகுதி உயிரினங்கள் பிளாஸ்டிக் மூலம் நீண்ட தூரம் பயணித்து, நடுக்கடல் சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்கின்றன. இது கடல் சுற்றுச்சூழல் அமைப்பில் ஆபத்தான மற்றும் புதிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

தூக்கி எறிந்த பிளாஸ்டிக் பாட்டிலோ அல்லது அறுந்த மீன்பிடி வலையோ கடலின் நடுவே ஒரு புதிய நகரத்தையே உருவாக்குகிறது. இயற்கையான மரக்கட்டைகளோ அல்லது கடல்பாசிகளோ, கடலில் விரைவில் அழுகிவிடும். ஆனால் பிளாஸ்டிக் அழியாமல் இருப்பதால் இது பல உயிரினங்களுக்கு சாதகமாகிவிட்டது. விஞ்ஞானிகள் இந்த வினோத சூழலுக்கு 'நியோ பெலாஜிக்' என்று பெயரிட்டுள்ளனர். அதாவது கடற்கரை உயிரினங்களும் நடுக்கடல் உயிரினங்களும் இணைந்து வாழும் ஒரு புதிய கலப்பு உலகம்.

இதையும் படியுங்கள்:
வந்தாச்சு 'கண்ணுக்குத் தெரியாத' டிஸ்ப்ளே.! மொபைல் உலகை அதிர விடும் சாம்சங்கின் புதிய வசதி.!
neo pelagic

கடலிருந்து எடுக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை ஆய்வு செய்வதில் 98% பொருட்களில் உயிரினங்கள் ஒட்டிக்கொண்டு வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவை அங்கே தங்கி வாழ்வதுடன் மட்டுமல்லாமல் முட்டையிட்டு இனப்பெருக்கமும் செய்கின்றன. பிளாஸ்டிக் கயிறுகளில் முட்டைகளுடன் பெண் உயிரினங்களையும், குஞ்சுகளையும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

2011 ஜப்பான் சுனாமியின் பொழுது கடலில் கலந்த அதே வகை உயிரினங்கள் இன்றும் அந்த பிளாஸ்டிக் கழிவுகளில் செழிப்பாக வளர்ந்து வருகிறது ஆச்சிரியத்தை உண்டாக்கியுள்ளது.

பிளாஸ்டிக் கழிவுகளால் நடுக்கடலில் உருவான புதிய உயிரினக் கூட்டமே நியோ பெலாஜிக் எனப்படும்.

logo
Kalki Online
kalkionline.com