
கி.பி.2180..!
ஆம். அடுத்த நூற்றாண்டின் இறுதி வருடங்கள்.
உலகம் பல மாறுதல்களை சந்தித்துவிட்டது. பல பழைய அரசுகள் இல்லாமல் போய்விட்டது. பல நாடுகளில் சோசிலிசம்தான் இருந்தது.
விஞ்ஞானம் கேட்கவே வேண்டாம். ராக்கெட் வேகத்தில் முன்னேறியது.
'நவ பாரத்'தில் இஸ்ரோ பல சாதனைகளை செய்தது. ஏற்கனவே நிலவுக்கு மனிதனை அனுப்பி இருந்தது. அது மட்டும் அல்ல. செவ்வாய் கிரகத்திற்கு முதன் முதலில் மனிதனை அனுப்பியது.
21ம் நூற்றாண்டில் பலமாக இருந்த அமெரிக்க நாசா அமைதி அடைந்தது. 'நவ பாரத்'தின் இஸ்ரோ சாதனைகளை செய்தது.
21ம் நூற்றாண்டில் வேதியியல் பேராசிரியர் தாமஸ் ஒரு புதிய பொருளை கண்டுபிடித்தார். அதன் விசேஷம் அது 3,00,000 (3 லட்சம்) டிகிரி செல்சியஸ் தாங்கக் கூடியது. இஸ்ரோ புது முயற்சியில் இறங்கியது. எல்லா வேலைகளும் சுறுசுறுப்பாக நடந்தது.
ஆம்.
அந்த புதிய பொருள் சூ3யை வைத்து விண்கலம் கட்டத் துவங்கிவிட்டது.
5 விண்வெளி வீரர்கள் தேர்ந்து எடுத்து… விண்வெளி நடக்க, தவழ, சாப்பிட மற்றும் கழிவுகளை அகற்ற பயிற்சி கொடுக்கப்பட்டது. கடுமையான பயிற்சி. ஆனால் விண்வெளி வீரர்கள் உற்சாகத்துடன் பங்கு பெற்றனர்.
ஆமாம். இவை அனைத்தும் எதற்காக..?
ஆம்.
ஆதித்திய விஜயம்.
சூரிய விஜயம்.
விண்வெளி வீரர்கள் உடையும் சூ3 புதிய பொருளால் செய்யப்பட்டது. ஆம் சூரியனின் வெப்பம் தாங்கும் சக்தி இதற்கு உள்ளது. ஆம். மிகப் பெரிய கண்டுபிடிப்பு.
5 விண்வெளி வீரர்களுக்கும் தனித்தனியே பணி கொடுக்கப்பட்டது. உண்மையில் 3 விண்வெளி வீரர்கள் மட்டுமே சூரியனில் கால் பதிப்பார்கள்.
மிச்சம் உள்ள 2 பேரும் விண்கலத்தில் இருந்து இஸ்ரோ கட்டளைகள் பெற்று விண்வெளி வீரர்களுக்குச் சொல்வார்கள்.
இன்னும் இரண்டு மாதமே உள்ளது. உலகம் முழுவதும் இஸ்ரோ பணிகளை அறிந்துவைத்து அந்த நாளுக்காக காத்து இருந்தார்கள்.
உலக ஊடகங்கள் அனைத்தும் இஸ்ரோவை பின்தொடர்ந்தார்கள்.
ஆம். சூரிய விஜயம் என்பது விளையாட்டு அல்ல. மிக ஜாக்கிரதையாக... கவனமாக செய்ய வேண்டிய வேலை.
ஆதித்ய விஜயம் அல்லது சூரிய விஜயம் என்பது மிகவும் புதிது. உலகமே வியப்பில் இருந்தது. உலகம் முழுவதும் இதுதான் தலைப்புச் செய்திகள்.
நாளை சூரிய விண்கலம் புறப்படுகிறது. அதி வேக விண்கலன். எல்லா எச்சரிக்கைகளையும், முன் தேவைகளையும் இஸ்ரோ எடுத்தது.
ஆம்.
நாளை புறப்பட்டு அடுத்த 7வது நாள் (நமக்கு ஞாயிற்றுக்கிழமை) சூரியனில் தரை இறங்க விண்கலம் தயாராக இருந்தது. விண்கலம் செல்லும் பாதையை நேரடி ஒளிபரப்பு செய்ய இஸ்ரோ செய்து இருந்தது.
ஞாயிற்றுக்கிழமை. விண்கலம் சூரியனை சுற்றி வர நேரம் வந்ததும் 3 விண்வெளி வீரர்கள் சூரியனில் கால் தடம் பதித்தார்கள்.
உலகம் முழுவதும் பட்டாசு வெடித்தது.
சிறுவர்கள் சன்டே.. சன்டே… சன்டே.. என கூறினார்கள்.
உலகம் முழுவதும் சந்தோஷம்.
ஆம்.
கி. பி. 2180 முக்கிய மைல் கல்.
இந்த சாதனைக்கு காரணம் ஒரே ஒரு அமைப்புதான்.
ஆம்.
இஸ்ரோ..!