இந்தியாவின் பிரமிக்க வைக்கும் அதிநவீன கட்டுமானமாக உருவாகி வருகிறது புதிய பாம்பன் பாலம்.
தமிழ்நாட்டினுடைய முக்கிய அடையாளங்களில் ஒன்றாக விளங்கி வருவது இராமநாதபுரத்தின் மண்டபம் பகுதியையும் ராமேஸ்வர தீவையும் இணைக்கும் பாம்பன் பாலம். 1914 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்திய மக்களின் உடல் உழைப்போடு உருவாக்கப்பட்ட பாம்பன் பாலம் இன்று வரை பிரதான சின்னமாக மட்டுமல்லாமல், மிக முக்கிய போக்குவரத்து வழித்தடமாவும் செயல்பட்டு வருகிறது. மேலும் பாம்பன் பாலம் அமைந்திருக்கும் இடம் பார் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா இணையும் பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது. பல கோடி மக்கள் பயன்படுத்திய முக்கிய போக்குவரத்து வழித்தடமாக பாம்பன் பாலம் திகழ்ந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது புதிய பாம்பன் பாலம் அமைக்க ரயில்வே நிர்வாக முடிவு செய்தது.
இதற்காக ரயில்வே விக்கார் நிர்மான் மற்றும் ஐஐடி நிர்வாகத்திடம் ஆய்வு செய்ய பரிந்துரை செய்யப்பட்டது. ஒரு வருடம் நடத்திய ஆய்வு திட்ட அறிக்கையின் அடிப்படையில் அகமதாபாபத்தைச் சேர்ந்த நிறுவனம் 545 கோடி ரூபாய் செலவில் புதிய பாம்பன் பாலத்தை அமைக்கும் என்று முடிவு செய்யப்பட்டது.
நவீன இந்தியாவின் அதிநவீன கட்டமைப்புகளை கொண்டு புதிய பாம்பன் பாலத்தை அமைக்கும் பணி தொடங்கி 95 சதவீத பணிகள் தற்போது முடிவுற்றிருக்கின்றன. புதிய பாம்பன் பாலத்தினுடைய நிலம்2.08 கிலோமீட்டர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பாம்பன் பாலத்தில் 333 தூண்கள், கடலுக்கடியில் 36 மீட்டர் ஆழத்தில் இருந்து அமைக்கப்பட்டிருக்கிறது.
இதில் 99 ரயில் இணைப்புகள் மற்றும் கப்பல் செல்லும் பகுதியோடு சேர்த்து 100 ரயில் இணைப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பழைய பாம்பன் பாலம் கப்பல் செல்லும் பொழுது விரிந்து விலகி இருப்பது போல் அமைத்து இருந்தது. ஆனால் புதிய பாம்பன் பாலத்தில் லிப்டைப் போன்று மேலே ஏறி க்கொள்ளும் இதன் கீழே கப்பல்கள் பயணிக்க முடியும். இந்த லிப்ட் வடிவிலான ரயில் தடம் மட்டும் 640 டன் எடை கொண்டதாகவும். இது 17 மீட்டர் வரை உயர்ந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாது பழைய பாம்பன் பாலத்தில் 10 கிலோமீட்டர் வேகத்தில் ரயில்கள் பயணம் செய்ய முடியும். இதனால் 15 நிமிடம் வரை பயணம் நேரம் அமைக்கப்பட்டிருந்தது. தற்போது 80 கிலோ மீட்டர் வேகம் வரை புதிய பாம்பன் பாலத்தில் பயணம் செய்ய முடியும். இதனால் 2,3 நிமிடங்களில் ரயில்கள் பயணத்தை மேற்கொள்ள முடியும். வரும் ஜனவரி மாதம் முழு கட்டுமானப் பணிகள் முடிந்து சோதனை ஓட்டம் நடைபெறும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.