WhatsApp பயனர்களுக்கு புதுவித தண்டனை... ஐயோ பாவம்!

WhatsApp
WhatsApp

வாட்ஸ் அப்பில் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள Account Restriction அம்சத்தால் பயனர்கள் கதி கலங்கிப்போய் உள்ளனர். மிகவும் கண்டிப்பான இந்த அம்சம் பற்றிய முழு விவரங்களை இந்தப் பதிவில் காணலாம். 

உலகிலேயே அதிகமான நபர்களால் பயன்படுத்தப்படும் மெசேஜிங் செய்யலியான WhatsApp, அவ்வப்போது பல புதிய அம்சங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளது. குறிப்பாக தன் பயனர்களின் பாதுகாப்பிற்கு ஏற்ற பல புதிய அம்சங்கள் கொண்டுவரப்படுகின்றன. அப்படி தற்போது புதிதாக வந்துள்ள ஒரு அம்சம் தான் Account Restriction. அதாவது வாட்ஸ் அப்பில் நீங்கள் இனி ஏதாவது தவறு செய்கிறீர்கள் என்றால் உங்களது கணக்கு முடக்கப்படும். 

ஆனால் நீங்கள் பயப்படுவது போல எப்போதும் முடக்கப்படாது, குறிப்பிட்ட கால நேரத்திற்கு மட்டுமே முடக்கி வைக்கப்படும். இதனால் பயனர்கள் தங்களின் தவறை உணர்ந்து சரியாக நடந்து கொள்வார்கள் என வாட்ஸ் அப் தரப்பில் கூறப்பட்டுள்ளது. WhatsApp நிறுவனத்தின் புதிய அறிகையின் படி இனி நீங்கள் ஏதேனும் தவறு செய்தால் உங்களது அக்கவுண்ட் தற்காலிகமாக தடை செய்யப்படும். மேலும் நீங்கள் செய்த தவறுக்கு ஏற்ப, பாப் அப் மெசேஜில் உங்களது கணக்கு எத்தனை நாட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது என்ற விவரங்களையும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். 

வாட்ஸ் அப்பில் கடந்த சில காலமாகவே ஸ்பாம் மெசேஜ்கள் அதிகமாக வருவதால், இந்த அம்சத்தைக் கொண்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இனி எந்த பயனராவது ஸ்பேம் மெசேஜ் அனுப்பினால், தானாகவே வாட்ஸ் அப் அல்காரதம் அதை கண்டுபிடித்து, அந்த குறிப்பிட்ட பயனரின் கணக்கைத் தற்காலிகமாக முடக்கிவிடும். 

இதையும் படியுங்கள்:
Matrix திரைப்படம் கற்றுத் தந்த வாழ்க்கைப் பாடங்கள்!
WhatsApp

இந்த புதிய அம்சம் இப்போது டெவலப்மென்ட் ஸ்டேஜில் இருப்பதால், விரைவில் பீட்டா வெர்ஷினில் அப்டேட் செய்யப்படும் என சொல்லப்படுகிறது. மேலும் இது எந்த அளவுக்கு வெற்றிகரமானதாக இருக்கிறது என்பதைப் பொறுத்து முழுமையாக செயல்படுத்தப்படலாம். தொடக்கத்தில் ஒருவரது அக்கவுண்ட் Ban செய்யப்பட்டால், அவர்கள் ஒரு மணி நேரம் முதல் 24 மணி நேரம் வரை WhatsApp கணக்கை பயன்படுத்த முடியாது என சொல்லப்படுகிறது. ஆனால் அவர்களுக்கு வரும் மெசேஜ் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும், அவற்றைப் படிப்பதற்கு 24 மணி நேரம் காத்திருக்க வேண்டும். 

இந்த புதிய அம்சத்தால் WhatsApp தளத்தில் மோசடிக்காரர்களின் அட்டகாசம் குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com