ஆப்பிள் போனில் Spyware-ஐ கண்டுபிடிக்கும் புதிய தொழில்நுட்பம்!

iOS Spyware.
iOS Spyware.

ஆப்பிள் ஸ்மார்ட் போன்கள் மிகவும் பாதுகாப்பானவை என சொல்லப்பட்டாலும் அதிலும் மோசடிக்காரர்கள் Spyware-ஐ நிறுவி கொள்ளையடிக்கும் சம்பவம் ஏற்படுகிறது. இத்தகைய Spyware-களைக் கண்டுபிடிக்கும் புதிய Kaspersky தொழில்நுட்பம் ஆய்வாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. 

மிகவும் மேம்பட்ட ஐஓஎஸ் மால்வேர்களைக் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பத்தை ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். Kaspersky Global Research ஆப்பிள் நிறுவன ஐஓஎஸ் சாதனங்களின் Shutdown.log என்கிற கோப்பை பகுப்பாய்வு செய்வது மூலமாக அந்த சாதனத்தில் ஏற்பட்டுள்ள மால்வேர்களைக் கண்டறிய முடியும் என்பதை கண்டுபிடித்துள்ளனர். Shutdown.log என்பது iOS சாதனம் ஒவ்வொரு முறை ரீஸ்டார்ட் செய்யும் போதும் அதில் உள்ள தகவல்களை சேமித்து வைத்துக் கொள்கிறது. எனவே அப்படி செய்யும்போது சாதனத்தில் இருக்கும் Spyware-களால் ஏற்பட்ட புதிய மாற்றங்கள் கண்டுபிடிக்கப்படுகிறது. 

எனவே இத்தகைய ஸ்பைவேர்களிடமிருந்து பாதுகாப்பாக இருக்க iOS சாதனங்களில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னவென்றால்,

  1. மால்வேர்களிடமிருந்து பாதுகாப்பாக இருக்க தினசரி உங்களது iOS சாதனத்தை ரீஸ்டார்ட் செய்வது நல்லது. 

  2. குறிப்பாக iOS-களில் இருக்கும் லாக்டவுன் மோடை எனேபில் செய்ய வேண்டும். 

  3. சந்தேகப்படும் வகையில் வரும் மெசேஜ்கள் மற்றும் ஈமெயில்களை திறக்க வேண்டாம்.

  4. உங்களது சாதனத்தை சமீபத்திய சாப்ட்வேர் வெர்சனுக்கு அப்டேட் செய்து வையுங்கள். 

  5. வாரம் ஒரு முறையாவது போனை செக்யூரிட்டி டூல்ஸ் மூலமாக ஸ்கேன் செய்ய வேண்டும்.

  6. FaceTime மற்றும் iMessage பயன்படுத்தாத சமயங்களில் அதை டிசேபிள் செய்து வைப்பது நல்லது.

இதையும் படியுங்கள்:
சரும பொலிவுக்கு அழகு சாதன கேப்ஸூல்கள்!
iOS Spyware.

உங்கள் சாதனத்தில் இத்தகைய நடவடிக்கைகளை நீங்கள் எடுப்பது மூலமாக, முடிந்தவரை பாதுகாப்பாக எந்த பிரச்சினையும் இல்லாமல் இருக்க முடியும். குறிப்பாக இணையத்தில் தேடிப் பார்த்து எவ்விதமான ஐஓஎஸ் செயலிகளையும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம். அதில் உங்களுக்கே தெரியாமல் மால்வேர்களை உள்ளே செலுத்தி வைத்திருப்பார்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com