Portable Charger
Portable Charger

இனி சார்ஜ் பிரச்சினையே இருக்காது! வந்தாச்சு போர்ட்டபிள் சார்ஜர்!

Published on

தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியால் இன்று பல மின்னனு சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நாளடைவில் இந்த சாதனங்களின் உருவமும் சிறிதாக உருமாற்றம் அடைந்தன. கணினி முதல் செல்போன் வரை அனைத்தும் இன்று கையடக்க அளவில் வந்து விட்டது. செல்போனிற்கு சார்ஜ் போடுவதில் நாம் பல்வேறு சிரமங்களை சந்தித்திருப்போம். பெரும்பாலும் சார்ஜ் மெதுவாக ஏறுவதும், வேகமாக இறங்குவதும் தான் பலரும் சந்தித்த பிரச்சினைகள். இதுதவிர்த்து சார்ஜ் கேபிள் சேதமடைவது, மின்வெட்டு சமயங்களில் சார்ஜ் போட முடியாத சூழல் என சில சிரமங்களை நம்மில் பலரும் எதிர்கொண்டிருப்போம். இதற்கெல்லாம் ஒரே தீர்வாக வந்துவிட்டது போர்ட்டபிள் சார்ஜர்.

மின்வெட்டு காலங்களில் செல்போனுக்கு சார்ஜர் போடுவதற்காகவே பவர் பேங்க் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இதன் அதிகப்படியான எடை வாடிக்கையாளர்களுக்கு சற்று சிரமத்தைக் கொடுத்தது. அதோடு சார்ஜிங் நேரமும் சற்று அதிகமாகவே இருந்தது. ஆனால் தற்போது விற்பனையில் இருக்கும் போர்ட்டபிள் சார்ஜரில் இந்தப் பிரச்சினைகள் எதுவுமே இல்லை. அதிக எடை கிடையாது; மெதுவாக சார்ஜ் ஆகும் பிரச்சினை கிடையாது; சார்ஜ் போட கேபிள் கூட தேவையில்லை என பல அம்சங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது போர்ட்டபிள் சார்ஜர்.

அதிவிரைவாக சார்ஜ் ஏற்றும் போர்ட்டபிள் சார்ஜர் நம்முடன் இருக்கும் போது, எங்கேனும் வெளியில் சென்றால் சார்ஜரை கையோடு எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இனி இருக்காது. செல்போனில் சார்ஜ் குறைந்தால் கூட இனி கவலைப்பட வேண்டாம். எந்த வகை செல்போனாக இருந்தாலும், எந்த வகை சார்ஜ் பின் என்றாலும் போர்ட்டபிள் சார்ஜர் மூலம் சார்ஜ் ஏற்றிக் கொள்ளும் வசதி இதில் உள்ளது.

உங்கள் செல்போனை அப்படியே போர்ட்டபிள் சார்ஜரில் இணைத்து விட்டால், ஒருசில நிமிடங்களில் சார்ஜ் ஏறிவிடும். சார்ஜ் போட்டுக் கொண்டே புகைப்படங்களை எடுக்கவும், கூகுள் மேப் பார்க்கவும் முடியும். இதில் கேபிள் பிரச்சினை இல்லை என்பதால், செல்போனை இணைத்து விட்டு பாக்கெட்டில் கூட வைத்துக் கொள்ளலாம். போர்ட்டபிள் சார்ஜரை முழுமையாக சார்ஜ் செய்து வைத்துக் கொண்டால் ப்ளூடூத், ஸ்பீக்கர் மற்றும் செல்போன் என பலவற்றிற்கு சார்ஜ் ஏற்றிக் கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
தொலைந்த போனை கண்டுபிடிக்க இப்படி ஒரு வசதி இருக்கா!
Portable Charger

நேரத்தை மிச்சப்படுத்துவதோடு, கேபிள் உள்ளிட்ட பல சிரமங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கும் இந்த போர்ட்டபிள் சார்ஜர் நிச்சயமாக வாடிக்கையாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் தான்.

போர்ட்டபிள் சார்ஜர் குறைந்த எடையில், சிறிய வடிவில் இருப்பதால் வாடிக்கையாளர்களை மிகவும் கவர்ந்துள்ளது. பார்ப்பதற்கும், கேட்பதற்கும் நன்றாக இருக்கிறதே என்பதற்காக மட்டும் பலரும் இதனை வாங்கிப் பயன்படுத்தவில்லை. செயலிலும், தரத்திலும் இது நன்றாகவே இருக்கிறது என பயன்படுத்திய வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். அதோடு இதற்கான வாரண்டி 2 ஆண்டுகள் என்பதால், பலரும் நம்பிக்கையுடன் வாங்குகின்றனர்.

இதையும் படியுங்கள்:
சைபர் மோசடிகளைத் தடுக்க வந்தாச்சு புதிய தொழில்நுட்பம்!
Portable Charger

சார்ஜ் விஷயத்தில் எந்த நேரத்திலும் போர்ட்டபிள் சார்ஜர் உங்களை கைவிடாது. இதில் எவ்வளவு சார்ஜ் மீதமிருக்கிறது என்பதை எல்இடி திரையில் பார்த்துக் கொள்ளும் வசதியும் உள்ளது. 2025 இல் தொழில்நுட்பச் சந்தையில் வருகை புரிந்த மிகச் சிறந்த பொருளாக போர்ட்டபிள் சார்ஜர் பார்க்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com