வந்தாச்சு 'நத்திங் ஃபோன் 2a'  இதில் அப்படி என்ன ஸ்பெஷல்?

Nothing Phone 2a
Nothing Phone 2a

நத்திங் ஃபோன்:

லண்டனைத் தளமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நத்திங் நிறுவனம்,  2022ஆம் ஆண்டு Phone 1 என்ற ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தி இந்தியாவிற்குள் முதன்முதலில் அடியெடுத்து வைத்தது. இந்த நிறுவனத்திற்காக இந்தியாவின் பிராண்ட் அம்பாசிடராக பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் உள்ளார். அதன்பின் நத்திங் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு சாதனங்களையும்  அறிமுகப்படுத்தி தன்னை ஸ்ட்ராங்காக நிலைநிறுத்திக் கொண்டது. ‘Phone 1’ அறிமுகமாகி இரண்டு வருடங்களைக் கடந்த நிலையில் நந்திங் நிறுவனம் ‘Phone 2’ என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘நத்திங் Phone 2a’ என அதிகாரப்பூர்வமாகப் பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் நமது   இந்தியாவில் தான் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது பெருமிதத்துக்குரிய விஷயம்.

Nothing Phone 2a
Nothing Phone 2a

நத்திங் 2a ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:

  • இந்த நிறுவனம் உலகளாவிய வெளியீட்டு நிகழ்வை இந்தியாவில் முதன்முதலில்  நடத்தியுள்ளது.

  • நத்திங் ஃபோன் 2a ஸ்மார்ட்போன் இரண்டு வகைகளாக வெளியிடப்படுகிறது. அதோடு இது டிரான்ஸ்பரன்ட்டான  வடிவமைப்புடன் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்திலும் உருவாகியுள்ளது.

  • இந்த ஸ்மார்ட்போன் ‘ஆண்ட்ராய்டு 14’ என்ற மாடலின் அடிப்படையில்  ‘நத்திங் ஓஎஸ் 2.5ஐ’ இயக்குகிறது.

  • ஐகானிக் கிளைஃப் இடைமுகத்துடன்(Interface) வடிவமைக்கப்பட்டுள்ளது.

  • 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடல் இந்தியாவில் ரூ.23,999க்கு கிடைக்கும். அதேசமயத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்மார்ட்போன் மாடலானது  ரூ.25,999க்கு கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
5G தொழில்நுட்பம் என்றால் என்ன?.. இன்டர்நெட்டில் ஏற்படப்போகும் புரட்சி! 
Nothing Phone 2a
  • கூடுதலாக தொலைபேசியில் 8 ஜிபி ரேம் பூஸ்டர் உள்ளது, இது மொத்த ரேமை 20 ஜிபியாக உயர்த்தும். இது மூன்று ரேம் மற்றும் சேமிப்பு வகைகளில் வருகிறது. அதாவது இரண்டு மாடல்கள் 8 ஜிபி ரேம் உடன் வருகின்றன. 128 ஜிபி மற்றும் 256 ஜிபி சேமிப்பகத்திற்கான விருப்பங்களுடன். பின்னர் மேல் மாறுபாடு 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பகத்துடன் அடுத்த வெர்ஷன் வருகிறது.

  • நத்திங் 2a வில் புகைப்படம் எடுப்பதற்கு போனின் பின்புறத்தில் இரட்டை கேமரா வசதி அமைக்கப்பட்டுள்ளது. இதில் f/1.88 துளை லென்ஸ் மற்றும் 1/1.56-இன்ச் சென்சார் அளவு மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷனுக்கான ஆதரவுடன் 50 மெகாபிக்சல் பிரதான கேமரா உள்ளது. மற்றொன்று 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 114 டிகிரி ஃபீல்ட்-ஆஃப்-வியூ.

  • செல்ஃபிக்களுக்கு, ‘நத்திங் ஃபோன் 2a’ 32 மெகாபிக்சல் கேமரா வசதியோடு வருகிறது.

  • ஃபோன் 2a ஆனது 6.7-இன்ச் நெகிழ்வான அமோல்டு  டிஸ்ப்ளே 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் 1300 நிட்ஸ்கள் வரை பிரைட்னஸ் ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

  • ‘நத்திங் 2a ஸ்மார்ட் ஃபோனில் ‘சம்திங்’ மட்டுமில்லாமல் ‘எவரிதிங்’ இருக்கும் என்று நம்புவோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com