இனி Play Store-ல் அரசாங்க செயலிகளை எளிதாகக் கண்டுபிடிக்கலாம்!

Government App on Play Store
Play Store

போலி செயல்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதைத் தவிர்க்கும் விதமாக மாநில மற்றும் மத்திய அரசின் செயலிகளுக்கு லேபிளிங் முறையை google அறிமுகம் செய்யவுள்ளது. 

இன்றைய காலத்தில் இணையப் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், இணையம் வழியாக மோசடி செய்பவர்களும் அதிகரித்து வருகின்றனர். குறிப்பாக அப்பாவி மக்களை குறிவைத்து, மோசடிக்காரர்கள் பணம் பறிப்பதால், அதை தடுப்பதற்காக பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

இந்தியாவில் பெரும்பாலான அரசு துறை சேவைகள் தற்போது இணையத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. எனவே மோசடிக்காரர்கள், அரசுதுறை சார்ந்த போலி செயலிகளை உருவாக்கி, பிளே ஸ்டோரில் சேர்த்து மக்களை ஏமாற்ற முற்படுகின்றனர். இத்தகைய போலி செயலிகளை உண்மை என நம்பி மக்கள் டவுன்லோட் செய்து ஏமாந்து போவதால், உண்மையான அரசாங்க செயலிகளுக்கு, லேபிள் பயன்படுத்தும் அம்சத்தை google கொண்டுவந்துள்ளது. 

X தளத்தில் எப்படி முக்கியமான கணக்குகளுக்கு ப்ளூ டிக் கொடுப்பார்களோ, அதேபோல அரசாங்கம் சார்ந்த கணக்குகளுக்கு கிரே டிக் கொடுக்கப்படும். இதைப் பயன்படுத்தி உண்மையான அரசாங்க கணக்கு எது என்பதை பொதுமக்கள் எளிதாக அடையாளம் காண முடியும். இதன் மூலமாக போலியாக இருக்கும் கணக்குகளை அடையாளம் கண்டு நீக்க முடியும். 

இப்போது இந்த வழிமுறையை கூகுள் பிளே ஸ்டோரும் பின்பற்ற உள்ளது. மத்திய மற்றும் மாநில அரசு சார்ந்த செயலிகளுக்கு, அது உண்மையானது தானா என்பதைக் கண்டறியும் லேபிள் ஒன்று வழங்கப்படவுள்ளது. அந்த லேபிலை கிளிக் செய்து, செயலியின் உண்மைத் தன்மையை தெரிந்துகொள்ள முடியும். எனவே இந்த அம்சத்தை அறிமுகப்படுத்த டெவலப்பர்கள் மற்றும் மத்திய அரசுடன் இணைந்து google செயல்பட்டு வருகிறது. 

இதையும் படியுங்கள்:
வாழ்வை அழகாக்கும் அர்த்தமுள்ள சின்ன (பெரிய) விஷயங்கள்!
Government App on Play Store

இது விரைவில் நடைமுறைக்கு வரும் என நாம் எதிர்பார்க்கலாம். இதன் மூலமாக, பெரும்பாலான மோசடி செயலிகளில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர போலி செயலைகளை அடையாளம் கண்டு விரைவாக நீக்குவதற்கான அணுகுமுறையாகவும் இது இருக்கும் என கூகுள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com