வாழ்வை அழகாக்கும் அர்த்தமுள்ள சின்ன (பெரிய) விஷயங்கள்!

படித்ததில் பிடித்தது
Respectful handshake
Respectful handshakehttps://www.firstfinancial.org

சின்னச் சின்ன விஷயங்கள்தான் மனிதர்களின் வாழ்வை அழகாக்கி சுவாரஸ்யம் தருபவை. அதுபோன்ற அர்த்தமுள்ள சில செயல்களைக் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

1. யாரேனும் உங்களுக்குக் கை கொடுக்க வரும்போது நீங்கள் இருக்கையில் அமர்ந்திருந்தால் எழுந்து நின்று கை கொடுங்கள். அவர் சிறியவரோ, ஏழையோ யாராகினும்!

2. யாரோடு பழகினாலும் கண்ணியமாகப் பழகுங்கள். நகைச்சுவை உணர்வோடு பழகினாலும் மரியாதை தர தவறாதீர்கள்! யாரோடு பேசினாலும் கண்களைப் பார்த்து பேசுங்கள். பெண்களிடம் குழந்தைகளிடம் கண்ணியமாக நடந்துகொள்ளுங்கள்.

3. விருந்தினராக சென்ற இடத்தில் உங்களுக்குத் தரப்படும் உணவில் குறை கண்டு பிடிக்காதீர்கள். உப்பு, புளி போன்ற விஷயத்தில் அலட்டி உங்களை நீங்களே தரம் தாழ்த்திக் கொள்ள வேண்டாம்!

4. வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தையின்போது, ‘அதை செய்கிறேன், இதனை உங்களுக்குத் தருகிறேன்’ என வாக்கு தராதீர்கள். பின்நாளில் நீங்கள் நஷ்டமடைய அதுவே காரணமாகும்.

5. நீங்கள் செய்யாத வேலையின் பெறுமதியை திருடாதீர்கள். யார் செய்தார்களோ அவர்களுக்கே அதன் பாராட்டு கிடைத்தாக வேண்டும்.

6. எவ்வேளையிலும் வீண்பழிக்கு உட்படாதீர்கள். உரிய தரப்பிடம் நேரடியாகச் சென்று உங்கள் நேர்மையைக் காட்டத் தவறாதீர்கள். வீண் பழி சுமத்துவோரிடம் அமைதியாக இருந்தாலும், மேலிடத்தில் இருப்பவரிடம் உங்கள் மீது நல்லெண்ணம் இருக்கும்படி பார்த்துகொள்ளுங்கள். நேர்மை அதற்கு உதவும்!

7. உரியவரால் அழைக்கப்படாத விருந்துக்கு யார் அழைத்தாலும் நீங்கள் செல்லாதீர்கள். நண்பர்களிடம் இந்த விஷயத்தில் கறார் காட்டினாலும் பரவாயில்லை!

8. உங்கள் மேல் இல்லாத தவறுக்காக மன்னிப்பு கோராதீர்கள். ஒரு முறை நீங்கள் பிழை செய்யாமல் கேட்கும் மன்னிப்பு காலம் முழுதும் உங்களை அவர்களிடம் கெஞ்ச வைத்து உங்கள் தன்மானத்தை இழக்கச் செய்யும்!

9.யாரேனும் உங்களுக்கு வாழ்க்கை தந்ததாக நினைத்துக் கொள்ளாதீர்கள். மிக முக்கியமான உறவொன்றின் மூலம் கிடைக்கும் எதற்கும் நன்றியுணர்வோடு இருங்கள். அதை தவிர்த்து அவர்களை இழந்துவிட்டால் உங்கள் வாழ்க்கை என்னவாகும் என்று நினைத்து உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்ளாதீர்கள்! ஆக சிறந்த படைப்பு நீங்கள்தான்.

10. நன்றாக உடை அணியுங்கள். நாகரிகம் என்பது நவீன ஆடைகளை சார்ந்தது அல்ல, அது உங்களை சீராகக் காட்டினாலே போதுமானது. சீரான உடையும் நேர்த்தியான உடைகளின் மீதான தெரிவும் உங்களை மற்றவர் மதிக்கும்படி செய்யும். கிழிந்த ஆடைகளும் தசைகளை பிதுக்கிக் காட்டும் அலங்காரமும் மற்றவர் முன் உங்களை அருவெறுப்பாகவே காட்டும்!

இதையும் படியுங்கள்:
குறமகள் வள்ளி குகை எங்கு இருக்கு தெரியுமா?
Respectful handshake

11. எங்கே சென்றாலும் பணத்தோடு செல்லுங்கள். பணம் இல்லாதபோது நண்பர்களே விருந்துக்கு அழைத்தாலும், சுற்றுலாவுக்கு அழைத்தாலும் நிராகரிப்பது நல்லது. அவர்கள் மத்தியில் உங்களை நீங்களே பலவீனராக்கும் முயற்சி அது.

12. தற்காலத்திற்கு ஏற்றாற்போல் உங்கள் நெருங்கிய உறவினரின் பெண் குழந்தையானால் கூட குழந்தைக்கோ பெற்றோருக்கோ அசௌகரியத்தை உண்டுபண்ணுவது போல தூக்காமலும் தொடாமலும் இருங்கள். அது உங்கள் குழந்தை பருவத்திற்கு நீங்களே செய்யும் மரியாதை!

13. எதுவாக இருந்தாலும் கோபத்தை வெளிப்படுத்துவதில் நிதானத்தைக் காட்டுங்கள். கோபமாக இருப்பது ஆற்றல் விரயம்.

14. நேர்மையாக இருக்கத் தயங்காதீர்கள். நேர்மையாக இருப்பது போல் நடிப்பினை காட்டாமல் தனி அறையானாலும் உங்களுக்கு நீங்களே முதலில் நேர்மையாக இருங்கள்.நேர்மையாக இருப்பது மிகச்சிறந்த குணம். மறவாதீர்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com