இனி உங்க மொபைல் எண்ணுக்கும் மாசா மாசம் பணம் கட்டணும்... அடக்கடவுளே!

Now your mobile number will be paid monthly
Now your mobile number will be paid monthly

நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் செல்போன் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், நீங்கள் எப்படி ஒவ்வொரு மாதமும் பிறருடன் தொடர்பு கொள்ள சிம்கார்டுக்கு ரீசார்ஜ் செய்கிறீர்களோ அதே போல நீங்கள் வைத்துள்ள மொபைல் எண்ணுக்கும் இனி பணம் செலுத்த வேண்டும் என TRAI, இந்திய அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. 

செல்போன்கள் சந்தைக்கு வரத் தொடங்கிய காலகட்டத்தில் நாம் காசு கொடுத்துதான் சிம்கார்டு வாங்கி பயன்படுத்தி வந்தோம். பின்னர் சிம் கார்டுகளை இலவசமாகக் கொடுத்து, அதற்கு ரீசார்ஜ் செய்யும் நடைமுறை கொண்டுவரப்பட்டது. இதற்கு மாத சந்தா, வருட சந்தா, என நமது தேவைக்கு ஏற்ப பிறருடன் தொடர்பு கொண்டு பேசுவதற்கும், இன்டர்நெட் பயன்படுத்துவதற்கும் பணம் செலுத்திக் கொண்டிருந்தோம். 

ரிலையன்ஸ் ஜியோ தொலைத்தொடர்பு சந்தையில் களமிறங்கிய பிறகு, கட்டணங்கள் அனைத்துமே வெகுவாகக் குறைந்து, இன்டர்நெட் இல்லாமல் நம்மால் இருக்கவே முடியாது என்ற சூழல் உருவாகிவிட்டது. இதனால் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை ரீசார்ஜ் செய்ய நாம் ஒதுக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகிவிட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட புதிய தொலைதொடர்பு சட்டத்தின் கீழ், பொதுமக்களால் பயன்படுத்தப்படும் மொபைல் எண்ணுக்கும் இனி மாதாமாதம் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என, மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI இந்திய அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. 

இதையும் படியுங்கள்:
இந்த உணவுகளை சாப்பிட்டால் உங்கள் கல்லீரல் காலி... ஜாக்கிரதை!
Now your mobile number will be paid monthly

ஒருவேளை இந்த சட்டம் அமலுக்கு வந்தால், நீங்கள் நீண்ட காலமாக பயன்படுத்தி வரும் எண்ணுக்கும் சேர்த்து மாதாமாதம் ரீசார்ஜ் செய்ய வேண்டி இருக்கும். இந்தியாவில்தான் முதல் முறை இப்படி செல்போன் எண்ணுக்கு கட்டணம் வசூலிக்க போகிறார்கள் என நினைக்க வேண்டாம். இந்த நடைமுறை ஏற்கனவே சிங்கப்பூர், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஹாங்காங், குவைத், நெதர்லாந்து, ஸ்விட்சர்லாந்து, தென் ஆப்பிரிக்கா, நைஜீரியா, போலந்து, டென்மார்க் ஆகிய நாடுகளில் அமலில் உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. 

ஒருவேளை இது இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதை கருத்து பகுதியில் தெரிவிக்கவும்.‌

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com