சனியின் நிலவில் பெருங்கடல்.. அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்! 

Ocean on Saturn's moon.
Ocean on Saturn's moon.

கடந்த சில ஆண்டுகளாகவே கிரகங்கள் சார்ந்த ஆய்வு அதிகமாக நடத்தப்படுகிறது. குறிப்பாக மற்ற கோள்களின் நிலவுகளை ஆய்வு செய்வதில் நாசா தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. ஏனெனில் கிரகங்களை விட அதன் நிலவுகளில் மனிதர்கள் வாழும் சூழல் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என நாசா நம்புகிறது. 

அதன்படி சனி நிலவுகளில் ஒன்றான மீமாஸ் எனப்படும் நிலவை நாசா ஆய்வு செய்ததில், அதில் உள்ள பள்ளம் போன்ற மேற்பரப்பால் ஒரு அழிந்த நட்சத்திரமாக இருக்கலாம் என நாசா நினைத்தது. ஆனால் அந்த பள்ளத்துக்கு அடியில் மிகப்பெரிய பெருங்கடல் இருக்கலாம் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

நேச்சர் இதழில் வெளியிடப்பட்டுள்ள ஒரு ஆய்வுக் கட்டுரையில், சுமார் 15 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சனியின் நிலவில் ஒரு கடல் உருவாகி இருக்கலாம் என கண்டறியப்பட்டது. இதற்கும், பூமியில் உயிர்கள் உருவானதற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமோ என நாசா ஆய்வு செய்ததில் இது கண்டுபிடிக்கப்பட்டது. மீமாஸ் சனி கிரகத்தின் ஒரு சிறிய நிலவாகும். சுமார் 400 கிலோமீட்டர் விட்டம் மட்டுமே உள்ள இந்த நிலவின் மேற்பரப்பில், அதிக பள்ளம் இருப்பதால் அதற்குக் கீழே பெருங்கடல் இருக்கும் என யாரும் நினைக்கவில்லை. ஆனால் சமீபத்திய கண்டுபிடிப்பு மூலமாக சனியின் நிலவு பற்றிய ஆய்வு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்:
அற்புதம் செய்யும் Rosemary இலைகள்.. இது ஒன்னு போதும்!  
Ocean on Saturn's moon.

இந்த பெருங்கடல் ஐந்து முதல் 15 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என மதிப்பிட்ட ஆய்வாளர்களுக்கு, இப்படி மேற்பரப்பில் அழிந்த கிரகத்தைப் போல காட்சியளிக்கும் நிலவுகளில், கடல் மறைந்திருக்கலாம் என்ற யோசனையை வழங்கியுள்ளது. ஒரு சதாப்தத்திற்கும் மேலாக சனி மற்றும் அதன் நிலவுகளை நாசாவின் காசினி விண்கலம் ஆய்வு செய்ததில், மீமாஸ் நிலவு கண்டுபிடிக்கப்பட்டது. 

அதன் பின்னர் அந்த விண்கலத்தின் தரவுகளை ஆய்வு செய்ததில், மீமாஸ் நிலவில் கடல் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதை விஞ்ஞானிகள் யோகித்தனர். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com