அற்புதம் செய்யும் Rosemary இலைகள்.. இது ஒன்னு போதும்!  

Rosemary leaves Benefits.
Rosemary leaves Benefits.

ரோஸ்மேரி இலைகள், பல காலமாகவே அதன் தனித்துவமான வாசனை மற்றும் சுவைக்காக சமையல், மருத்துவம் போன்றவற்றில் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பல்துறை மூலிகையாகும். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு இதைப் பற்றி தெரிவதில்லை. எனவே, இந்த பதிவில் ரோஸ்மேரி இலைகளுடன் தொடர்புடைய பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் என்னவென்று தெரிந்து கொள்வோம். 

  1. ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்தவை: ரோஸ்மேரி இலைகளில் அதிகப்படியான ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிரம்பியுள்ளன. இது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து செல்களைப் பாதுகாக்க உதவுகிறது. இதில் உள்ள ரோஸ்மரினிக் அமிலம் மற்றும் கார்னோசிக் அமிலம் போன்றவை, அழற்ச்சி மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 

  2. அறிவாற்றல் மேம்பாடு: ரோஸ்மேரி இலைகள் மூளையின் அறிவாற்றல் மற்றும் நினைவாற்றலுக்கு பெரிதும் உதவுகிறது. ரோஸ்மேரியின் நறுமணம், மூளையைத் தூண்டி, சிறந்த தெளிவு, கவனம் மற்றும் மனநிலையை ஏற்படுத்துகிறது. இதைத் தொடர்ச்சியாக நம் உணவில் சேர்த்துக் கொண்டால், நினைவாற்றல் இழப்பு பிரச்சனைகள் தவிர்க்கப்படுமாம். 

  3. செரிமானத்துக்கு உதவும்: ரோஸ்மேரி இலைகள் நம்முடைய செரிமானத்தை மேம்படுத்தி, செரிமான அசௌகர்யம், வீக்கம் மற்றும் அஜீரணத்தைப் போக்க உதவுகிறது. ரோஸ்மேரி டீ குடிப்பது அல்லது ரோஸ்மேரி இலைகளை உணவில் சேர்த்துக் கொள்வதால், செரிமான மண்டலம் வலுப்பெற்று, குடல் அமைப்பின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

  4. அழற்ச்சி எதிர்ப்பு பண்புகள்: ரோஸ்மேரியில் உள்ள சேர்மங்கள், குறிப்பாக கேம்பின், ரோஸ்மரினிக் அமிலம் போன்றவை, சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. இந்த பண்பு உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க குறைக்க உதவுகிறது. 

  5. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்: ரோஸ்மேரி இலைகளில் வைட்டமின் சி விட்டமின் ஏ மற்றும் இரும்பு உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை வலுவான நோய் எதிர்ப்பு அமைப்புக்கு அவசியமானதாகும். இந்த ஊட்டச்சத்துக்கள் நோயெதிர்ப்பு உயிரணுக்களின் உற்பத்தி மற்றும் செயல்பாட்டை ஆதரித்து, நோய்த் தொற்றுகளுக்கு எதிராக உடலை பாதுகாக்க செயல்படுகின்றன. எனவே உங்கள் உணவில் ரோஸ்மேரியை சேர்ப்பது மூலமாக, நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழலாம். 

  6. சருமம் மற்றும் முடி ஆரோக்கியம்: பாரம்பரிய வைத்திய முறையில் ரோஸ்மேரி இலைகள் சருமம் மற்றும் முடிக்கு ஆரோக்கியம் தர பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள ஆக்சிஜனேற்ற பண்பு சருமத்தை ஆக்சிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்கிறது. ரோஸ்மேரி இலைகளை தலைக்குப் பயன்படுத்தினால், உச்சந்தலைக்கு ஊட்டம் கிடைத்து மயிர்க் கால்கள் வலுப்பெற உதவும். 

இதையும் படியுங்கள்:
இந்தியப் பொருளாதாரத்தில் GST-யின் தாக்கம் என்ன தெரியுமா?
Rosemary leaves Benefits.

இப்படி, ரோஸ்மேரி இலைகள் நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. பொதுவாகவே இதை நாம் உணவுப் பொருளாக எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது என்றாலும், அதை மிதமாகப் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக ஏற்கனவே உங்களுக்கு உடலில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் தகுந்த மருத்துவரின் ஆலோசனை பேரிலேயே இதை உணவாக எடுத்துக் கொள்வது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com