Odysseus Lander: நிலவில் தரையிறங்கி சரித்திரம் படைத்த விண்கலம்! 

Odysseus Lander
Odysseus Lander

அமெரிக்க நிறுவனமான intuitive machines தயாரித்த Odysseus Lander என்ற விண்கலம், வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை, இறுதி நிமிட நேவிகேஷன் சென்சார் தோல்விக்கு மத்தியிலும் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது. 

இதுவரை  அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா போன்ற முன்னணி நாடுகளின் விண்கலங்கள் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியுள்ள நிலையில், இப்போது முதன்முறையாக ஒரு தனியார் நிறுவனத்தின் விண்கலம் நிலவில் தரையிறங்கி சாதனை படைத்துள்ளது. அதுவும் சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு விண்கலம் நிலவில் தரையிறங்குவது இதுவே முதல்முறை. 

இதுகுறித்து அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா வெளியிட்டுள்ள பதிவில், “உங்கள் ஆர்டர் நிலவுக்கு டெலிவரி செய்யப்பட்டது.  intuitive machines நிறுவனத்தின் ஆளில்லா விண்கலம் 6:23 மணிக்கு நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கியது. இது நாசாவின் விஞ்ஞானத்தை நிலவுக்கு கொண்டு சென்றுள்ளது. Artemis திட்டத்தின் கீழ் நிலவின் எதிர்கால ஆய்வுக்கு இந்த விண்கலம் நம்மைத் தயார் படுத்தும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹெக்ஸகன் வடிவில் உருவாக்கப்பட்ட Odysseus விண்கலம் மணிக்கு சுமார் 6500 கிலோமீட்டர் வேகத்தில் சென்று, நிலவின் தென் துருவத்தில் இருந்து சுமார் 186 மைல் தொலைவில், மலாபெர்ட் A என்ற பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது. தரையிறிங்கிய லேண்டரில் இருந்து இதுவரை தரவுகள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் அதில் பொருத்தப்பட்டுள்ள கேமராவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அது சேகரிக்கும் தரவுகள் சில மணி நேரங்களில் கிடைத்துவிடும் என சொல்லப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
துல்லியமாகக் கணிக்கப்பட்ட பூமியின் அழிவு நாள்! நாசா சொல்வது உண்மையா?
Odysseus Lander

1972ல் நாசா தனது ஆராய்ச்சியாளர்களை அப்போலோ 17 மூலமாக எப்படி வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கியதோ, அதை மீண்டும் செயல்படுத்த பல சோதனைகளை முயற்சித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த மாதம் நடத்தப்பட்ட ஒரு சோதனை ஓட்டம் தோல்வியில் முடிந்தது. இதைத் தொடர்ந்து இப்போது intuitive machines நிறுவனத்தின் லேண்டர் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ள நிகழ்வு அனைவருக்கும் குதூகலத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com