ஒரு பக்கம் லேப்டாப், மறுபக்கம் டேப்லெட் போன்று இயங்கக்கூடிய புதிய லேப்டாப் மாடலை லெனோவா நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. இது விரைவில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெனோவா நிறுவனம் விண்டோஸ் லேப்டாப் மற்றும் ஆண்ட்ராய்டு டேப்லெட்டை இணைத்த லெனோவா திங்க் புக் பிளஸை அறிமுகம் செய்துள்ளது. இது இது ஜென் 5 ஹைபிரிட் 2 இன்ச் லேப்டாப் ஆகும். இதன் ஒருபுறம் விண்டோஸ் லேப்டாப்பும், மற்றொருபுறம் ஆண்ட்ராய்டு டேப்லெட்டும் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.
ஒரு பக்க தொடுதிரை விண்டோஸ் 11 மற்றொரு பக்கம் தொடுதிரை டேப்லெட்டையும் கொண்டிருக்கும். இது 14 இன்ச் மற்றும் 2.8 OLED திரை கொண்டது. டேப்லெட்டில் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. டேப்லெட் ஆண்ட்ராய்டு 13-ல் இயங்குகிறது மற்றும் விண்டோஸ் பயன்முறையில் 75Wh பேட்டரியை வழங்கும் 38Wh பேட்டரி உள்ளது.
மேலும் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 ஜிப்சட் மூலம் இயங்கும் தன்மை கொண்டது. லேப்டாப் ஆண்ட்ராய்டுடன் இணைந்து இன்டெக்ஸ் கோட் அல்ட்ரா 7 செயலியோடு பேக் செய்யப்பட்டிருக்கிறது.
டேப்லெட்டின் எடை 1.5 பவுண்டுகள் ஆகும். எனினும் லேப்டாப் மற்றும் ஆண்ட்ராய்டு டேப்லெட் என மாற்றிப் பயன்படுத்தும் போது செயல்முறையில் சில பிரச்சனைகள் காணப்படுவதாகவும், அவற்றை சரி செய்யும் முயற்ச்சி தற்போது நடைபெற்று வருவதாகவும் தெரிவித்திருக்கிறது.
அதே சமயம் திங்க்புக் பிளஸ் ஜெனரல் 5 ஹைர்பிட் 2024 ஆண்டு மே மாதத்தின் இறுதியில் விற்பனைக்கு வந்துவிடும் என்றும், இது அடுத்த கட்ட நவீன உலகத்திற்கான தொடக்கம் என்றும் சொல்லப்பட்டுள்ளது. மேலும் இதன் அறிமுக விலையாக இந்திய ரூபாய் மதிப்பு படி ஒரு லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் இருக்க வாய்ப்புள்ளது.