மொபைல் போன் முதல் போதை பழக்கம் வரை... அனைத்தையும் அடியோடு மாற்றும் புதிய தீர்வு!

எவ்வளவு முயன்றும் மாற்ற முடியாத பழைய பழக்கங்களை மிக எளிதாக மாற்றியமைக்க உதவும் மூளையின் ரகசிய கெமிக்கல் குறித்த ஆச்சரியமூட்டும் அறிவியல் கண்டுபிடிப்பு.
Human brain அடிமைப் பழக்கம்
Human brain அடிமைப் பழக்கம்Ai Image
Updated on

நாம் அனைவருக்குமே விடமுடியாத சில பல பழக்கவழக்கங்கள் நிச்சயம் இருக்கும். அது காலையில் எழுந்தவுடன் மொபைல் போனை நோண்டுவதாக இருக்கலாம் அல்லது விடமுடியாத தீவிரமான அடிமைப் பழக்கமாகக் கூட இருக்கலாம். எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் இதிலிருந்து மீண்டு வர முடியாமல் பலரும் தவிப்பதுண்டு. உங்களின் அசாத்தியமான மனக்கட்டுப்பாடு மட்டும் பழக்கங்களை மாற்றுவதற்குப் போதாது. 

நமது மூளையில் சுரக்கும் ஒரு குறிப்பிட்ட ரசாயனம் தான் பழைய பழக்கங்களை உடைத்து எறிய மிக முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை விஞ்ஞானிகள் தற்போது ஆணித்தரமாகக் கண்டறிந்துள்ளனர். இந்த அட்டகாசமான புதிய கண்டுபிடிப்பு எப்படி மனித குலத்தின் மருத்துவ உலகிற்கு மாபெரும் உதவியாக இருக்கப்போகிறது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

அடிமைப் பழக்கம்: மூளையின் ரகசிய கெமிக்கல்!

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற ஒக்கினாவா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் இது தொடர்பான ஒரு பிரம்மாண்டமான ஆராய்ச்சியை மேற்கொண்டது. இதில் டாக்டர் கிடியோன் ஏ. சர்போங் (Dr. Gideon A. Sarpong) மற்றும் பேராசிரியர் ஜெஃப்ரி ஆர். விக்கன்ஸ் (Prof. Jeffery R. Wickens) ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழு ஒரு ஆச்சரியமூட்டும் உண்மையைக் கண்டுபிடித்துள்ளது. 

மனிதர்களின் மூளையில் சுரக்கும் அசிடைல்கோலின் (Acetylcholine) என்ற சிறப்பு ரசாயனம் தான் நாம் எதிர்பாராத புதிய மாற்றங்களுக்கு ஏற்ப நம்மை மிக வேகமாக மாற்றுவதற்கு முழு முதல் காரணமாக அமைகிறது. இந்த ரசாயனம் சரியாக வேலை செய்தால் எப்பேர்ப்பட்ட மோசமான பழக்கத்தையும் எளிதாகக் கைவிட்டுப் புதிய பாதையைத் தேர்ந்தெடுக்க முடியும்.

Rats
Rats

எலிகளுக்கு நடத்தப்பட்ட சுவாரஸ்யமான சோதனை!

இந்த மாபெரும் உண்மையைப் பரிசோதிக்க விஞ்ஞானிகள் எலிகளை வைத்து ஒரு விர்ச்சுவல் பாதையில் சோதனை நடத்தினார்கள். அந்தப் பாதையில் எந்த வழியில் சென்றால் உணவு கிடைக்கும் என்பதை எலிகளுக்குக் கற்றுக் கொடுத்தனர். எலிகளும் அந்த வழியைத் தங்களின் நிரந்தரப் பழக்கமாக மாற்றிக்கொண்டன. பின்னர் திடீரென உணவிருக்கும் பாதையை ஆராய்ச்சியாளர்கள் மாற்றி அமைத்தனர். 

இதையும் படியுங்கள்:
பெட்ரோல், டீசல் எல்லாம் ஓரம்போ... உலகையே அதிர வைத்த புதிய லேசர் டெக்னாலஜி!
Human brain அடிமைப் பழக்கம்

அந்தத் தருணத்தில் மூளையில் அசிடைல்கோலின் அதிகமாகச் சுரந்த எலிகள், சற்றும் யோசிக்காமல் உடனே தங்களின் பழைய பாதையை விட்டுவிட்டுப் புதிய வழியை மிகச் சுலபமாகக் கண்டுபிடித்தன. அதேசமயம் இந்த ரசாயனத்தின் அளவைக் குறைத்த போது, அந்த எலிகளால் பழைய பாதையை விட்டு வெளியே வர மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது.

மருத்துவ உலகில் மாபெரும் புரட்சி!

இந்தச் சிறப்பான கண்டுபிடிப்பு வெறும் அன்றாடச் சாதாரண பழக்கங்களை மாற்றுவதற்கு மட்டும் பயன்படப் போவதில்லை. ஓசிடி (OCD) எனப்படும் அதீத கட்டாய மனச்சுழற்சி நோய், பார்கின்சன் நோய் மற்றும் தீவிரமான போதைப் பழக்கங்களுக்கு அடிமையானவர்களைக் குணப்படுத்த இது ஒரு மிகப்பெரிய மருத்துவப் புரட்சியைப் பிற்காலத்தில் ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. ஒருவருக்கு எதிர்பாராத ஏமாற்றம் கிடைக்கும் போது அந்தச் சூழ்நிலையைச் சமாளித்து மூளைக்குப் புதிய கட்டளையை இந்த ரசாயனம் தான் தைரியமாகக் கொடுக்கிறது.

பழைய பழக்கங்களை மாற்றுவது என்பது வெறும் மனம் சம்பந்தப்பட்ட விஷயம் கிடையாது. அதற்கு மூளையின் வேதியியல் மாற்றங்களும் மிகப்பெரிய அளவில் உதவுகின்றன. ஒரு மனிதனின் மூளை எப்போதுமே சூழ்நிலைக்கு ஏற்ப தன்னைத் தானே மிகத் தெளிவாக மாற்றிக்கொள்ளும் அசாத்தியமான திறன் கொண்டது என்பதை இந்த நவீன ஆராய்ச்சி மீண்டும் ஒருமுறை உறுதியாக நிரூபித்துள்ளது. 

இதையும் படியுங்கள்:
நிஜமான மரம் கிடையாது ஆனால் ஆக்சிஜன் கொடுக்கும்.. எதிர்காலத்தின் புதிய ஏர் பியூரிபையர்!
Human brain அடிமைப் பழக்கம்

வரும் காலத்தில் இதன் மூலம் பல்வேறு தீர்க்க முடியாத மனநலப் பிரச்சனைகளுக்குச் சிறந்த சிகிச்சைகள் மிக எளிதாகக் கிடைக்கும் என்பது மட்டும் நூறு சதவீதம் உறுதி.

logo
Kalki Online
kalkionline.com