சாதாரண மனிதராகிய நாம் Summer சீசன் வந்துவிட்டாலே எதோ அடுப்பில் வேகுவதை போல் உணர்வோம். ஆனால் அதே மனிதனா உருவாக்கப்பட்ட ஒரு விண்வெளி ஆய்வு கருவி 15 கோடி கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ள சூரியனை கிட்டயே போய் சுற்றிக்கொண்டிருக்கிறது என்று சொன்னால் நம்புவீங்களா. ஆனால் அதை நிரூபித்து காட்டியுள்ளது நம் Parker Solar Probe வாருங்கள் அந்த மகத்தான இயந்திரத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.
அனுப்பப்பட்டதின் நோக்கம் என்ன?
இந்த ஆய்விற்கான நோக்கம் நம் சூரியனை சுற்றியுள்ள கொரோனா(Corona) பற்றிய புரிதலுக்காகவே. காரணம் சூரியனின் உள்வெப்பத்தை விட அதன் வெளிவட்டத்தில் இருக்கும் corona வில் அதிகமான வெப்பம் கண்டறியப்படுகிறது. இது எதனால் சாத்தியமாகிறது என்று விஞ்ஞானிகளுக்கே புரிதல் கிடைக்கவில்லை. அதுக்கான விடை கிடைப்பதற்கும் மற்றும் சில பல ஆய்வுகளுக்குமாக தான் இந்த கருவி அனுப்பப்பட்டுள்ளது.
எப்படி இந்த கடும் வெப்பத்தை தாங்கிக் கொள்கிறது?
இந்த விண்வெளி ஆய்வு கருவியை செய்ய மொத்தம் 12,510 கோடி ரூபாய் செலவானது. அதனால் இதனை வடிவமைப்பதில் பல நுணுக்கங்களோடு செயல்பட்டனர். குறிப்பாக சூரியனின் மொத்த வெப்பத்தை தடுக்க இதில் பயன்படுத்தி இருக்கும் Thermal Protection System (TPS) மொத்தம் 2.5 மீட்டர் அகலம், 11.5 செ. மீ தடிமன் கொண்ட கார்பன் கவசம் தான்.
சூரியனின் corona வில் இருக்கும் 5500 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை தடுத்கும். அதனால் இக்கருவிவை பிரச்சனை இல்லாமல் செயல்பட வைக்கிறது. இந்த கார்பன் கவசம் எப்போதும் சூரியனை பார்த்தது போலவே நிலைநிறுத்தப்படும். இது முற்றிலும் சென்சார் மூலமே கட்டுப்படுத்தப்படுகிறது. மற்றும் அந்த கருவியின் உள்ளே இருக்கும் மொத்த உபகரணங்களையும் குளிர்விக்க அதன் உள்ளே குளிர்நீரானது சுழற்சி முறையில் சுற்றி வரும். காரணம் அதில் இருக்கும் உபகரணங்கள் வெப்பத்தில் உருகாமல் இருக்கவே.
நாம் கேள்வி பட்டிருபோம் சூரிய புயல்கள் நம் பூமியை நோக்கி வருகின்றன என்றும், இதனால் நாம் பாதிக்கப்படுவோம் என்று. இப்படி இருக்கையில் “அந்த கருவி மட்டும் எப்படி அந்த புயல்களை தாங்கி கொள்கிறது” என்று உங்களுக்கு கேட்க தோன்றும் சாதாரணமாக நம் வீட்டில் ஒரு எரியும் மெழுகுவர்த்தியில் நம் விரலை வேகமாக சுற்றி சுற்றி வரும்போது அது சுடுவே சுடாது. அதுபோலத்தான் நம் solar probe ம் மணிக்கு 6,90,000km/h என்ற வேகத்தில் சூரியனைச் சுற்றி வருவதால் வெப்பத்தில் இருந்து தன்னை காத்துக்கொள்கிறது.
இதுவரை செய்த சாதனைகள்:
டிசம்பர் 14, 2021 அன்று, Parker Solar Probe சூரியனின் மேல் வளிமண்டலத்தில்-கொரோனா வழியாக பறந்து, துகள்கள் மற்றும் காந்தப்புலங்களில் பறந்து சரித்திரம் படைத்தது.
ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, விஞ்ஞானிகள் சூரியனுக்கு அருகில் தூசி மறைந்துவிடும் என்று கணித்துள்ளனர். பார்க்கர் அதைக் ஒரு காஸ்மிக்-டஸ்ட் மண்டலம் என்று கண்டுபிடித்துள்ளது. இது சூரியனின் தனிப்பட்ட Vacuum கிளீனர் போன்றது.
சூரிய கரோனாவின் வெப்பம் எங்கிருந்து வருகிறது என்பதை கண்டுபிடித்து. இதை விஞ்ஞானிகள் 60 ஆண்டுகளுக்கு இதைப் பற்றி யோசித்து வந்தனர்.
வரும் டிசம்பர் 2024 இது சூரியனுக்கு மிக அருகில் போகும். அதாவது 38 லட்சம் கிலோ மீட்டர் இடைவெளியில் சுற்றி வரும். அப்போ அதன் சுற்றும் வேகும் இன்னும் அதிகரிக்கும்.
இதன் கண்டுபிடிப்புகள் அடுத்தடுத்து வரும் தலைமுறைகளுக்கு சூரியனை பற்றி படிக்கவோ அல்லது வேறு ஆராய்ச்சிகள் செய்யவோ ஒரு தொடக்க புள்ளியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை!