
ஸ்மார்ட் போனை உபயோகிப்பவர்கள் அதை எப்படி கையாள வேண்டும் என்பதை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
டிஜிட்டல் உலகத்தில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாதவர்களே இல்லை. ஸ்மார்ட் போன் வந்த பிறகு அனைவரும் கடிகாரம், கண்ணாடி உள்ளிட்ட பல பொருட்களை மறந்துவிட்டார்கள் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு ஸ்மார்ட் போன் அனைவருக்குள்ளும் ஊடுறுவியது. முகம் பார்க்க வேண்டுமா உடனே கேமராவை ஆன் செய்யலாம், டைம் பார்க்க வேண்டுமா போனை எடுத்து பார்க்கலாம், எங்கேயாவது போக வேண்டுமா யாரிடமும் வழி கேட்க வேண்டாம்... அனைத்து வசதிகளும் போனில் வந்துவிட்டது. இப்படி உலகம் நம் கையில் என்ற வார்த்தைக்கு சரியான ஒன்றாக போன் அமைந்துவிட்டது. அப்படிப்பட்ட போனை பெரியவர்கள் முதல் சுட்டி குழந்தைகள் வரை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். நாளுக்கு நாள் டிஜிட்டல் கலாச்சாரம் அதிகரிக்க போனின் தேவை அதிகரித்துதான் வருகிறது. மாத குழந்தைகளே தற்போது போனை கையாளுகின்ற அளவிற்கு காலம் மாறிவிட்டது.
இந்த போன் ஆயிரம் முதல் லட்சங்கள் வரை விற்பனை செய்யப்படுகிறது. இப்படி செலவு செய்து வாங்கும் போனை நீண்ட வருடங்கள் பிரச்சனையில்லாமல் உபயோகிக்க வேண்டும் என்பதே பலரின் ஆசையாகும். பேட்டரி செயலிழப்பது உள்ளிட்ட பிரச்சனைகள் காரணமாக பலரும் அடிக்கடி போனை ரிப்பேருக்கு கொடுப்பார்கள். இதற்கே சிலருக்கு 10 ஆயிரம் வரை செலவு ஏற்படலாம். இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்க போனை பாதுகாப்பாக கையாள வேண்டும். வெளிப்புற பிரச்சனையை நம் கவனமாக செயல்படுத்தி பாதுகாக்கலாம். உதாரணத்திற்கு டெம்பர் க்ளாஸ் போட்டு டிஸ்ப்ளேவை பாதுகாக்கலாம். ஆனால் உள்ளே உள்ள பேட்டரியை பாதுகாக்க நாம் என்ன செய்யவேண்டும் தெரியுமா?
செல்போனிற்கு சார்ஜ் மிகவும் அவசியமானதாகும். போனை அதிகம் சார்ஜ் செய்தாலோ, அதிகம் பேட்டரி டவுன் செய்தாலோ, சீக்கிரம் பேட்டரி கெட்டுவிடும். பெரும்பாலான மக்கள் போனை அதிகம் நோண்டுவதால் 100% சார்ஜ் செய்துவிடுவார்கள். ஆனால் அது செய்வது நல்லதா?
நிபுணர்களின் கூற்றுப்படி, செல்பேசியின் பேட்டரி, சார்ஜ் செய்வதற்கு முன்பு முற்றிலும் தீர்ந்துவிட வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் நவீன லித்தியம் அயன் பேட்டரிகள் சேதமடையலாம். ஃபோனின் பேட்டரியை நன்றாக வைத்திருக்க, போனை 80-90 சதவீதம் வரை சார்ஜ் செய்வதே சிறந்தது. அடிக்கடி சார்ஜ் செய்வதையும் தவிர்த்துவிட வேண்டும். 20 சதவீத சார்ஜ் ஆனவுடன் போனை சார்ஜ் செய்து 80 - 90 வந்தவுடன் கழட்டிவிட வேண்டும். 0%-ல் இருந்து சார்ஜ் செய்வது அதிக வெப்பத்தை உருவாக்கும். அதோடு வேகமாக சார்ஜ் ஆகும் திறன் 80% குறையும். இதை கவனத்தில் கொள்வது அவசியமாகும்.