
டிஜிட்டல் உலகத்தில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாதவர்களே இல்லை. தற்போதைய உலகத்தில் போன் இன்றியமையாததாக மாறிவிட்டது என்றே சொல்லலாம்.
ஸ்மார்ட் போன் வந்த பிறகு அனைவரும் கடிகாரம், கண்ணாடி உள்ளிட்ட பல பொருட்களை மறந்துவிட்டார்கள் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு ஸ்மார்ட் போன் அனைவருக்குள்ளும் ஊடுறுவியது. முகம் பார்க்க வேண்டுமா உடனே கேமராவை ஆன் செய்யலாம், டைம் பார்க்க வேண்டுமா போனை எடுத்து பார்க்கலாம், எங்கேயாவது போக வேண்டுமா யாரிடமும் வழி கேட்க வேண்டாம் போனில் அனைத்து வசதிகளும் வந்துவிட்டது. இப்படி உலகம் நம் கையில் என்ற வார்த்தைக்கு சரியான ஒன்றாக போன் அமைந்துவிட்டது. அப்படிப்பட்ட போனை பெரியவர்கள் முதல் சுட்டி குழந்தைகள் வரை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். நாளுக்கு நாள் டிஜிட்டல் கலாச்சாரம் அதிகரிக்க போனின் தேவை அதிகரித்துதான் வருகிறது என்றே சொல்லலாம். மாத குழந்தைகளே தற்போது போனை கையாளுகின்ற அளவிற்கு காலம் மாறிவிட்டது.
இந்த போன் ஆயிரம் முதல் லட்சங்கள் வரை விற்பனை செய்யப்படுகிறது. இப்படி பல டெக்னாலஜியை கொண்ட போனை விதவிதமாக கையாளும் நாம் போனில் உள்ள பட்டன் ஓட்டைகள் குறித்து அறிந்திருக்கிறோமா. ஸ்மார்ட்போனில் சார்ஜ் போடும் இடத்தில் ஒடு ஓட்டை இருக்கும் அது ப்ளக் பண்ணுவதற்கு அருகிலேயே சில போன்களில் ஹெட்செட் போடுவதற்கு ஒரு துளை இருக்கும். இது சில போன்களில் இருக்காது. இதே போன்று ஸ்பீக்கருக்காக 3-5 ஓட்டை வரை இருக்கும். இதையும் நாம் பார்த்திருப்போம். ஆனால் எதற்குமே சம்மந்தம் இல்லாத ஒரு ஓட்டையை நம்மால் காணமுடிகிறது. அது எதற்கு என்று யாருக்காவது தெரியுமா? தற்போது தெரிந்து கொள்ளலாம் வாங்க..
நாம் போனை வைத்து பேசும் போது, மேலே கொடுக்கப்பட்டுள்ள ஸ்பீக்கர் வாயிலில் அவர்கள் பேசுவது நமக்கு கேட்கும். நாம் பேசும் குரலை அவர்கள் கீழே இருக்கும் இந்த ஓட்டை மூலமாக தான் கேட்பார்களாம். போனின் செல்பி கேமராவிற்கு அருகில் சின்னதாக இருக்கும் ஸ்பீக்கரில் தான் நமக்கு அவர்கள் பேசுவது கேட்கும். கீழே இருக்கும் இந்த ஓட்டை இரைச்சலை கட்டுப்படுத்தி நமது குரலை சரியாக பிக்கப் செய்து நமக்கு கால் செய்தவருக்கு நல்ல ஆடியோவை கொடுக்குமாம்.
இந்த ஓட்டை ஒரே ஒரு சத்தத்தை மட்டுமே பிக்கப் செய்யும். அதனால் தான் நமக்கு இரைச்சல் நிறைந்த கூட்டத்தில் கூட பேசுபவரின் சத்தம் தனியாக கேட்கிறது. எந்த சத்தம் அருகில் இருக்கிறதோ, எது அதிகமாக இருக்கிறதோ அதை பிக்கப் செய்து தெளிவாக வழங்கும் தன்மையை கொண்டிருக்கிறது இந்த துளை. இதுவரை தெரிந்திராதவர்கள் இனிமேல் இதை தெரிந்து கொள்ளுங்கள்.