விண்வெளி வீரர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள்! அப்பப்பா, என்ன கஷ்டம்டா சாமி!

Astronauts
Astronauts
Published on

விண்வெளி ஆராய்ச்சி மனித குல வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம் என்பதால் அங்கு பல்வேறு கஷ்டங்களைக் கடந்து விண்வெளி வீரர்கள் தங்கி உள்ளனர். விண்வெளிக்கு செல்ல தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள் பல வகையான சோதனைகளை கடக்க வேண்டியுள்ளது.

  • விண்வெளி நிலையத்தில் இருப்பவர்கள் ஒரு நாளைக்கு 16 சூரிய உதயங்கள் மற்றும் சூரிய அஸ்தமனங்களை பார்க்கிறார்கள்.

  • தசை வலிமை மற்றும் எலும்பின் அடர்த்தி குறைவதை தடுப்பதற்காக சர்வதேச விண்வெளி நிலையத்தில் வீரர்கள் இரண்டு முதல் இரண்டரை மணி நேரம் வரை உடற்பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர்.

  • எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அவர்கள் அங்கு சில மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறார்கள். பூமிக்கு திரும்பிய பின்பு இவர்களின் எலும்பின் அடர்த்தி இயல்பு நிலைக்கு திரும்ப சுமார் நான்கு ஆண்டுகள் வரை ஆகலாம் என்று கூறப்படுகிறது.

  • அங்குள்ள பூஜ்ஜிய ஈர்ப்பு விசையால், தூங்கும் வீரர்கள் அங்கும் இங்கும் மிதந்து சென்று காயமடையாமல் இருக்க விண்வெளியில் தூங்குவதற்கு என பிரத்தியேகமாக உருவான சிறிய பெட்டிகள் அல்லது பைகளுடன் தங்களை இணைத்துக் கொண்டு தூங்குகிறார்கள்.

  • அங்கு நிறைய உபகரணங்கள் இருப்பதால் இயந்திரங்களின் ஒலி எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். இந்த இரைச்சல்களால் தூங்குவதில் சிரமம் இல்லாமல் இருக்க விண்வெளி வீரர்கள் கண் கவசங்களையும், காதுகளுக்கு ear plugsகளையும் பயன்படுத்துகிறார்கள்.

  • குளிப்பது இங்கே சாத்தியம் இல்லை. திரவ வடிவில் உள்ள சோப் கொண்ட ஈரமான துண்டை உடல் துடைக்க பயன்படுத்துவதுகிறார்கள். தலைமுடியை அலச தண்ணீர் இல்லாமல் வேலை செய்யும் ஷாம்புவை பயன்படுத்துகிறார்கள். திரவ சோப் கொண்ட டிஷ்யூக்கள் மற்றும் ஈரமான துண்டுகளையே பயன்படுத்துகிறார்கள்.

  • இங்கிருக்கும் கழிப்பறைக்கு கதவுகள் கிடையாது. திரைச்சீலைகள் மட்டுமே உண்டு. பூஜ்ஜிய ஈர்ப்பு விசை காரணமாக இதில் அமரும் முன் அந்த இருக்கையில் இருக்கும் பெல்ட்டுகளை மாட்டிக்கொள்ள வேண்டும். கழிவுகளை கையாள நீருக்கு பதில் காற்று பயன்படுகிறது. கழிவுகள் மிதக்க கூடாது என்பதற்காக அவை உடனடியாக உறிஞ்சப்பட்டு பின்னர் மொத்தமாக அப்புறப்படுத்தப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
நிலவில் என்ன வாசனை இருக்கும் தெரியுமா? உண்மையை வெளியிட்ட விண்வெளி வீரர்கள்! 
Astronauts
  • அதேபோல் சிறுநீரும் உறிஞ்சப்படும். ஆனால் அவை அப்புறப்படுத்தப்படுவது இல்லை. கழிவு நீர் தொட்டியில் சேகரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்து சுத்திகரிக்கப்பட்டு குடிநீராக பயன்படுத்தப்படுகிறது. இவை பூமியில் கிடைக்கும் குடிநீரை விட சுத்தமானது என்று நாசா கூறுகிறது.

  • சர்வதேச விண்வெளி நிலைய வீரர்களுக்கு 300 வகையான உணவுகள் வழங்கப்படுவதாகவும் அவை சிறிய பாக்கெட்டுகளில் சிறப்பு உணவு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன என்றும் கூறப்படுகிறது. எளிதாக சேமித்து வைக்கும் பொருட்டு இந்த உணவுகள் உறைய வைக்கப்பட்டு அதில் இருக்கும் நீர் முழுமையாக வெளியேற்றப்படும். இவற்றை மீண்டும் தண்ணீரில் சூடாக்கி அல்லது குளிர்வித்து சாப்பிடுவார்கள். நட்ஸ், பிஸ்கட்டுகள், பழங்கள் போன்ற அப்படியே உண்ணக்கூடிய உணவுகளும் இவர்களுக்கு அளிக்கப்படும்.

  • இஸ்ரோவின் முன்னாள் தலைவர் சிவன் அவர்கள், சத்தான உணவுகள், நல்ல உறக்கம், உடற்பயிற்சி ஆகியவை மட்டுமே இவர்களை விண்வெளியில் ஆரோக்கியமாக இருக்க வைக்க உதவும் என்று கூறுகிறார். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com