உங்க போன் மழையில் நனைஞ்சுடுச்சா? உடனே 'இந்த' 3 விஷயங்களைச் செய்யுங்க!

மழைக்காலத்தில் விலை உயர்ந்த செல்போனை தண்ணீரில் இருந்து பாதுகாத்து ஆயிரக்கணக்கில் மிச்சப்படுத்துவது எப்படி?
செல்போன் பாதுகாப்பு - phone water damage
செல்போன் பாதுகாப்பு - phone water damage
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி மழை பெய்ய ஆரம்பித்து வருகிறது. மழை பெய்யும்போது செல்போன்களை பாதுகாப்பது என்பது ஒரு பெரும் வேலையாகி விடுகிறது. ரூபாய் 10,000 முதல் 1 லட்சம் வரை பணத்தைக் கொடுத்து செல்போன்களை ஆசையாக வாங்கி விட்டு அவை மழை நீர் அல்லது தண்ணீர் பட்டதும் பழுதாகிவிட்டால் ஆயிரக்கணக்கில் செலவுகளை உண்டாக்கிவிடும். இவற்றைத் தவிர்க்க மழை நீரிலோ, தண்ணீரிலோ, செல்போன் நனைந்துவிட்டால் உடனடியாக பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகள் உள்ளன.

செல்போன் பாதுகாப்பு:

மழையில் செல்போன் நனைந்தால் உடனடியாக போனை சுவிட்ச் ஆஃப் செய்ய வேண்டும். போன் ஆன்லைனில் இருந்தால் தண்ணீருக்கும் மின்சாரத்திற்கும் இடையே தொடர்பு ஏற்பட்டு மின்சுற்று (Short Circuit) ஏற்பட்டு போன் முற்றிலும் பழுதாகிவிடும்.

மழையில் செல்போன் நனைந்தால் உடனடியாக செய்ய வேண்டியவை (Do's):

சுவிட்ச் ஆஃப் செய்யவேண்டும்:

போன் இயங்கிக் கொண்டிருந்தாலும் அல்லது நன்றாக வேலை செய்வது போல் தோன்றினாலும், ஷார்ட் சர்க்யூட் ஆகாமல் இருப்பதற்கு உடனே சுவிட்ச் ஆஃப் செய்ய வேண்டும்.

கவர் மற்றும் சிம் கார்டை கழற்றுவது:

ஃபோனில் இருக்கும் பேக் கவர், ஸ்கிரீன் கார்டு ஆகியவற்றை நீக்கிவிட்டு, சிம் கார்டு மற்றும் மெமரி கார்டு ட்ரேயை வெளியே எடுக்கவேண்டும். இது காற்று உள்ளே செல்ல வழிவகுக்கும்.

செல்போன் பாதுகாப்பு - phone water damage
செல்போன் பாதுகாப்பு - phone water damage

மென்மையாக துடைப்பது:

ஒரு உலர்ந்த, மென்மையான, சுத்தமான, பஞ்சில்லாத மெல்லிய துணியால் போனின் வெளிப்புறத்தில் உள்ள ஈரத்தை மென்மையாகத் துடைக்க வேண்டும். தேய்க்கக் கூடாது. அதேபோல் சார்ஜிங் போர்ட், ஹெட்ஃபோன் ஜாக் போன்ற பகுதிகளை மெதுவாக ஒற்றித் துடைக்கவும்.

காற்று வரும் இடத்தில் வைக்கவும்:

போனை நன்றாகக் காயவைக்க, காற்றோட்டம் உள்ள இடத்தில் அல்லது மின்விசிறியின் குளிர்ந்த காற்று படும் நிழலான பகுதியில் நிமிர்த்தி வைக்கவேண்டும்.

சிலிக்கா ஜெல் பயன்படுத்தலாம்:

புதிய பொருட்கள் வாங்கும் பொழுது வரும் சிலிகா ஜெல் பாக்கெட்டுகள் இருந்தால், அவற்றுடன் போனை ஒரு மூடிய டப்பாவில் வைக்கலாம். இது ஈரப்பதத்தை விரைவாக உறிஞ்சும்.

செய்யக்கூடாதவை (Don'ts):

போனை ஆன் செய்து பார்க்கக் கூடாது:

போன் வேலை செய்கிறதா என்று சோதிக்க அடிக்கடி ஆன் செய்து பார்ப்பதோ அல்லது பவர் பட்டனை அழுத்துவதோ கூடாது.

சார்ஜ் செய்யக் கூடாது:

ஈரப்பதம் இருக்கும் பொழுது ஒருபோதும் சார்ஜர் அல்லது இயர் போன்களை இணைக்கக் கூடாது. இது மிக ஆபத்தானது.

இதையும் படியுங்கள்:
நனைந்த மொபைல் உயிர்பெற முதல் 1 மணிநேரத்தில் இதை செய்யுங்க!
செல்போன் பாதுகாப்பு - phone water damage

ஹேர் டிரையர் பயன்படுத்தக் கூடாது:

சூடான காற்று அல்லது ஹேர் ட்ரையர் கொண்டு போனை உலர்த்தக் கூடாது. இது போனின் உள்ளே இருக்கும் பிளாஸ்டிக் பாகங்கள் மற்றும் பேட்டரியை சேதம் அடையச் செய்யும்.

அரிசி பைக்குள் வைக்கக் கூடாது:

செல்போனை அரிசிக்குள் வைப்பது பழைய கட்டுக்கதை மற்றும் ஒரு தவறான முறையாகும். அரிசித் துகள்கள் அல்லது தவிடு போனின் சார்ஜிங் போர்டுக்குள் சென்று மேலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

அதிக வெயிலில் வைக்கக் கூடாது:

வெயிலில் ஃபோனை வைத்தால் வெப்பம் காரணமாக பேட்டரி வெடிக்கவோ அல்லது போன் பழுதாகவோ வாய்ப்புள்ளது. வெப்பம் மிகுந்த இடத்தில் வைப்பதால் தண்ணீர் காய்ந்தது போல் இருக்கும். ஆனால் மதர் போர்டு மற்றும் ஸ்பேர் ஸ்பார்ட்ஸ்களில் சிறிது சிறிதாக தேங்கி ஸ்கிரீன் டச், ஸ்பீக்கர் பேட்டரி போன்றவற்றிற்கு பாதிப்பினை ஏற்படுத்தும்.

போனை குலுக்க வேண்டாம்:

போனுக்குள் இருக்கும் தண்ணீர் வெளியே வரட்டும் என்று வேகமாக குலுக்கக் கூடாது. அப்படி செய்வதால் தண்ணீர் இன்னும் ஆழமாக உள் பாகங்களுக்குள் சென்று விடும். இப்படி போனை நன்கு உலர வைத்த பிறகும் இயங்கவில்லை என்றால் தாமதிக்காமல் அருகில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டருக்கு எடுத்துச் சென்று சரிபார்ப்பது நல்லது.

செல்போன் சர்வீஸ் கடையில் கொடுத்தால் தனித்தனியாக பிரித்து அனைத்து தண்ணீரையும் துடைத்து சரி செய்து தருவார்கள். தாமதமாகச் சென்றோம் என்றால் உள்ளே உள்ள அனைத்து ஸ்பேர் பார்ட்ஸ்களிலும் தண்ணீர் சென்று பாதிப்பு ஏற்படுத்தும்.

இதையும் படியுங்கள்:
அச்சச்சோ! மழைக்காலத்தில் ஷாக் அடிப்பதற்கு பின்னால் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
செல்போன் பாதுகாப்பு - phone water damage

முக்கியமாக மழைக்காலங்களில் வாட்டர் ஃப்ரூப் கவர்கள் விற்கப்படுகிறது. அதனை வாங்கி மழை நேரத்தில் நாம் வெளியில் செல்லும்போது செல்போனை அதனுள் வைத்து எடுத்துச் சென்றால் மழைநீர் உள்ளே செல்வதைத் தடுக்கலாம்.

logo
Kalki Online
kalkionline.com