
இன்றைய டிஜிட்டல் யுகத்தில், தொழில்நுட்பத்தில் யார் முதலிடம் பிடிப்பது என்பதில் நாடுகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. குறிப்பாக, அமெரிக்காவும் சீனாவும் இந்த போட்டியில் முன்னணியில் உள்ளன. அமெரிக்கா டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தி வந்தாலும், சீனா அதை சவால் செய்யும் விதமாக பல புதிய கண்டுபிடிப்புகளை வெளியிட்டு வருகிறது.
சமீபத்தில் சீனா குவாண்டம் கம்ப்யூட்டிங் துறையில் ஒரு பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. அவர்கள் "ஜுச்சோங்ஷி-3" என்ற ஒரு அதிநவீன குவாண்டம் கணினியை உருவாக்கியுள்ளனர். இந்த கணினி கூகிள் நிறுவனத்தின் சூப்பர் கம்ப்யூட்டரை விட 10 லட்சம் மடங்கு வேகமானது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது தொழில்நுட்ப உலகில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.
"ஜுச்சோங்ஷி-3" கணினியை சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த கணினியில் 105 க்யூபிட் மற்றும் 182 கப்ளர் ப்ராஸசர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், மிகவும் சிக்கலான கணக்குகளை மிகக் குறுகிய காலத்தில் தீர்க்க முடியும். உதாரணமாக, கூகிள் சூப்பர் கம்ப்யூட்டர் 10,000 ஆண்டுகளில் செய்யக்கூடிய ஒரு வேலையை 200 வினாடிகளில் செய்தது. ஆனால், சீனாவின் "ஜுச்சோங்ஷி-3" அதே வேலையை வெறும் 14 வினாடிகளில் செய்து முடிக்கும் திறன் கொண்டது. இது குவாண்டம் கம்ப்யூட்டிங் துறையில் ஒரு மைல்கல் என்று கருதப்படுகிறது.
சீனாவின் இந்த கண்டுபிடிப்பு, உலக அரங்கில் அவர்களுக்கு ஒரு முக்கியமான இடத்தை பெற்று தந்துள்ளது. ஏற்கனவே செயற்கை நுண்ணறிவு துறையில் சீனாவின் DeepSeek AI, கூகிளின் Chat GPT ஐ பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தது. தற்போது குவாண்டம் கம்ப்யூட்டிங் துறையில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. இது அமெரிக்காவுக்கு ஒரு பெரிய சவாலாக கருதப்படுகிறது.
குவாண்டம் கம்ப்யூட்டிங் எதிர்காலத்தில் மருத்துவம், பொருள் அறிவியல், செயற்கை நுண்ணறிவு போன்ற பல்வேறு துறைகளில் புரட்சியை ஏற்படுத்தும் திறன் கொண்டது. சீனா இந்த துறையில் முன்னிலை பெறுவது உலக தொழில்நுட்ப அரங்கில் ஒரு புதிய மாற்றத்தை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த கண்டுபிடிப்பானது தொழில்நுட்ப போட்டியில் சீனா தொடர்ந்து முன்னேறி வருவதைக் காட்டுகிறது.