Ray Ban SmartGlass: தெறி மாஸ்! 

Ray Ban SmartGlass.
Ray Ban SmartGlass.

பிரபல சன் கிளாஸ் நிறுவனமான Ray Ban மற்றும் மெட்டா இணைந்து கடந்த செப்டம்பர் மாதத்தில், தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் ஸ்மார்ட் கிளாஸ் ஒன்றை அறிமுகம் செய்தனர். இந்த பதிவில் இந்த ஸ்மார்ட்கிளாஸ் குறித்த சுவாரசிய தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம். 

Ray Ban நிறுவனம் உலகிலேயே மிகவும் பிரபலமான சன் கிளாஸ் நிறுவனமாகும். இவர்கள் சமீபத்தில் வெளியிட்ட ஸ்மார்ட்கிளாஸ், ஏஐ அம்சங்களுடன் முற்றிலும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. முற்றிலும் ஒரு ஹேண்ட் ஃபிரீ சாதனமான இந்த சன் கிளாஸில் ஒரு சிறிய ரக மைக்ரோபோன் மற்றும் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மெட்டா நிறுவனமும் இந்த சன்கிளாசில் பங்களித்துள்ளதால் அதில் உள்ள ‘ஹே மெட்டா’ என்ற குரல் அம்சம் மூலமாக பிரெஞ்சு, இட்டாலியன் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் AI-உடன் நாம் உரையாட முடியும். 

இதில் உள்ள தனித்துவம் வாய்ந்த ஆடியோ சிஸ்டம் மூலமாக, உங்களுக்கு பிடித்த பாடல்களை நீங்கள் அப்படியே கேட்கலாம். குறிப்பாக இந்த கண்ணாடியை யார் அணிந்திருக்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே அந்த சத்தம் கேட்கும். இந்த ஸ்மார்ட் கிளாஸை ஒருமுறை சார்ஜ் செய்தால் 4 மணி நேரம் வரை பயன்படுத்தலாம் என Ray Ban நிறுவனம் கூறியுள்ளது. அதேபோல இதில் இருக்கும் கேமராவைப் பயன்படுத்தி நேரடியாக இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் லைவ்ஸ்ட்ரீம் செய்யலாம். 

இதில் இருக்கும் கேமரா மற்றும் ஏஐ அம்சமானது ஒரு பொருளை அடையாளம் கண்டு அதற்கான தகவலையும் வழங்கும். அதேபோல இந்த கண்ணாடியிடம் நீங்கள் எந்த தகவலை கேட்டாலும் ஏஐ அசிஸ்டன்ட் உங்களுக்கான பதிலை துல்லியமாக வழங்கும். இந்த கண்ணாடியில் இருக்கும் குறிப்பிட்ட சில அம்சங்களை குறிப்பிட்ட சில நபர்கள் மட்டுமே பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. 

இதையும் படியுங்கள்:
கண்ணாடி இல்லாமல் கண் பார்வை நன்றாக தெரியவேண்டுமா?
Ray Ban SmartGlass.

ஒரு கண்ணாடி வாங்கி மாட்டிக் கொண்டால் போதும், உங்களுக்குத் தேவையான பல விஷயங்களை எளிதாக முடித்துவிடலாம். அமெரிக்கா கனடா பிரான்ஸ் ஆஸ்திரேலியா ஜெர்மனி ஆகிய நாடுகளில் விற்பனைக்கு உள்ள இந்த கண்ணாடியின் ஆரம்ப விலை 299 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூபாய் 24000. 

இந்தியாவில் இந்த ஸ்மார்ட் கண்ணாடி விற்பனைக்கு வந்தால், நீங்கள் வாங்குவீர்களா? இல்லையா? என உங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com