பிப்ரவரி 29-க்குப் பிறகு Paytm-ல் நீங்கள் எதையெல்லாம் செய்ய முடியாது தெரியுமா? 

Paytm.
Paytm.
Published on

ஆர்பிஐ விதிகளை பேடிஎம் நிறுவனம் மீறியதால், அவர்கள் மீது கடுப்பான ரிசர்வ் வங்கி, Paytm செயலியை பயன்படுத்துவதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இந்த ஆண்டு பிப்ரவரி 29ஆம் தேதிக்குப் பிறகு, பேடிஎம் செயலியில் என்னென்ன செய்ய முடியாது என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். 

  1. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பிறகு பேடிஎம் வங்கிக் கணக்கிலிருந்து பில் செலுத்துதல், யுபிஐ பரிவர்த்தனை, AEPS & IMPS போன்ற சேவைகளை உங்களால் பயன்படுத்த முடியாது. 

  2. பேடிஎம் வாலெட்டில் பணத்தை டெபிட் அல்லது கிரெடிட் செய்யும் பரிவர்த்தனை கூட அனுமதி இல்லை. ஆனால் வாடிக்கையாளர்கள் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி அவர்களது பணத்தை வாலட்டிலிருந்து Withdraw செய்ய முடியும். ஆனால் உங்களுடைய அக்கவுண்டில் இருந்து எந்த பணத்தையும் அனுப்பவும், பெறவும் முடியாது. 

  3. 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பிறகு, Paytm செயலியில் புதிதாக யாரும் இணைய முடியாது. அதாவது நீங்கள் ஏற்கனவே பேடிஎம் பயனராக இல்லையெனில், புதிதாக உங்களால் அக்கவுண்ட்டை உருவாக்க முடியாது. 

  4. பேடிஎம் பேமென்ட் பேங்கில் நீங்கள் பணத்தை டெபாசிட் செய்ய முயற்சித்தால், அதையும் உங்களால் செய்ய முடியாது. ஆனால் வித்டிரா செய்வதற்கு ஆர்பிஐ அனுமதிக்கிறது. 

  5. RBI-ன் இந்த அதிரடி கட்டுப்பாடுகள், அனைத்து paytm பேங்கிங் செயல்பாடுகளுக்கும் பொருந்தும். இதன் மூலமாக வெளி வங்கிகள் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகள் பாதிக்கப்படுமா என்பது குறித்து எவ்விதமான விளக்கங்களும் அறிவிக்கப்படவில்லை. அதாவது நீங்கள் வேறு வங்கிகளை உங்களுடைய paytm செயலியில் இணைத்து வைத்திருந்தால் அதை எப்போதும் போல சாதாரணமாக பயன்படுத்த முடியும். ஆனால் paytm செயலி வழியாக இயங்கும் எந்த அம்சங்களையும் உங்களால் பயன்படுத்த முடியாது.

இதையும் படியுங்கள்:
அதிர்ச்சி வீடியோ! சரமாரி கேள்விகள்.. மன்னிப்பு கேட்ட மார்க் ஜூக்கர்பெர்க்.. செனட் விசாரணையில் நடந்தது என்ன? 
Paytm.

ஆர்பிஐ-ன் இந்த முடிவால் பேடிஎம் நிறுவனத்திற்கு பெரும் இழப்பு ஏற்படும் எனச் சொல்லப்படுகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com