

விபத்து மூலமாகவோ, மாடியில் இருந்து கீழே விழுந்தாலோ அல்லது வேறு ஏதேனும் வகையில் விபத்து ஏற்பட்டு கை, கால், எலும்பு முறிவு ஏற்பட்டாலோ முற்காலத்தில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கொண்டு அந்த எலும்பு முறிவை அறுவை சிகிச்சை மூலம் இணைத்து சரி செய்வார்கள் மருத்துவ சிகிச்சை நிபுணர்கள். ஆனால், அந்த ஸ்டைன்லெஸ் ஸ்டீல் பிளேட்டை ஆறு மாதம் அல்லது ஒரு ஆண்டுக்குள் மறுபடியும் ஆபரேஷன் செய்து எடுக்க வேண்டும். இதுதான் நடைமுறையாக இருந்து வந்தது.
அதன் பின்னர் எலும்பு முறிவுகளுக்கு டைட்டானியம் பிளேட் வைத்து அறுவை சிகிச்சை செய்து எலும்புகளை ஒட்ட வைத்தார்கள். நாளடைவில் உடலானது அந்த டைட்டானியத்தை ஒரு அங்கமாகவே ஏற்றுக்கொள்ளும். அதனால் இதை அகற்ற வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. சிலருக்கு அபூர்வமாக இதனை அகற்ற வேண்டி வரும்; மறுபடியும் அறுவை சிகிச்சை தேவைப்படும்.
ஆனால், தற்போது புதிதாக ரீசார்ஜபிள் பிளேட் (rechargeable plate) வந்துள்ளது. இதனைக் கொண்டு எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் ஆபரேஷன் செய்து கொள்ளலாம்.
இந்த அறுவை சிகிச்சை மூலம் ரீசார்ஜபிள் பிளேட் பொருத்துவதால் மூன்று மாதங்களில் தகடு கரைந்து எலும்போடு ஒட்டிக்கொள்ளும்.
இதனால், எலும்புகள் இயல்பாகவே இணைந்து விடும். தற்போது இந்த அறுவை சிகிச்சை அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் செய்யப்பட்டு வருகிறது.
இதேபோன்று முகத்தாடைகளில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டால் அதற்கு அறுவை சிகிச்சை மிகுந்த சிரமமாக இருக்கும். அதற்கு சப்மெண்டல் இன்குபேஷன் (Submental incubation) முறையில் அறுவை சிகிச்சை செய்து இதனை சரி செய்யலாம். தாடைக்கு கீழே குழாய் இணைத்து மயக்க மருந்து தரும் முறையாக செயல்படுகிறது.
இந்த முறையில் முகம் முழுவதும் சிதைந்து இருந்தாலும் இந்த அறுவை சிகிச்சை மூலம் இதனை சரி செய்யலாம். விபத்து, சண்டை ஏற்பட்டால், மாடியில் இருந்து கீழே விழுந்தால், அதனால் முகத்தில் சிதைவு ஏற்படுகிறது. இந்த வகையில் முகம் சீரமைப்பு நிபுணர் சப்மெண்டல் இன்குபேஷன் முறையில் இதனை சரி செய்வார். அதனால், அவர்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப முடியும்.
தற்போது உள்ள சப்மெண்டல் இன்குபேஷன் மற்றும் ரீசார்ஜபிள் பிளேட் ஆபரேஷன் மூலம் முகத்தையும் மற்ற இடங்களில் ஏற்பட்டுள்ள எலும்பு முறிவுகளையும் சுலபமாக அறுவை சிகிச்சை செய்ய முடியும். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் சீக்கிரம் மீண்டு வரலாம்.
இதனால் எந்த பிரச்னையும் ஏற்படப் போவதில்லை. ரீசார்ஜபிள் பிளேட் வைப்பதன் மூலம் இந்த அறுவை சிகிச்சைகள் எளிதாக நடைபெறுகிறது. மூன்று மாதங்களில் இந்த ரீசார்ஜபிள் தகடு கரைந்து எலும்புகளுடன் இயல்பாகவே இணைந்து விடும். தற்போது இந்த இரண்டு வரவுகளும் எலும்பு முறிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக உள்ளன.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)