
பழம் பெருமை மட்டுமல்ல ராணுவ பலம் கொண்ட நாடாக இந்தியா உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்கிறது. ராணுவத்திற்காக நிதி செலவிடும் நாடுகளில் குறிப்பிடத்தக்க இடம் வகிக்கும் இந்தியா பல அதிநவீன போர் கருவிகளை தன்னகத்தை கொண்டுள்ளது. அந்த வகையில் விமானப்படையில் வான் பாதுகாப்பு நாயகனாக இருக்கும் சுதர்சன் சக்ரா S400 குறித்து இப்பதிவில் காண்போம்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனந்தநாக் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பஹல் காமில் தீவிரவாத தாக்குதல் நடத்தியதற்கு, இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. அந்தத் துல்லிய தாக்குதலில் 9 பயங்கரவாத உட்காட்டு அமைப்புகள் அழிக்கப்பட்டன.
இதற்கு பாகிஸ்தான் இந்தியாவின் முக்கிய நகரங்கள் மீது ட்ரோன்கள் மூலம் தாக்க முயற்சித்தது. அதனை இந்திய ராணுவத்தினர் S400 சுதர்சன் சக்ரா என்ற ஏவுகணை மூலம் தடுத்து நிறுத்தினர். இந்த S400 கவச அமைப்பு பாகிஸ்தானின் ராணுவ தளவாடங்களை சேதப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட முக்கிய ஆயுதமான S400 சுதர்சன சக்கரா என்று அழைக்கப்படும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு ஆசியா கண்டத்திலேயே இந்தியாவிடம் மட்டும் தான் உள்ளது.
அதனை இந்தியா ரஷ்யாவிடம் இருந்து பெற்றது. அந்த S400 கவச அமைப்பு 600 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் நமது எல்லையை நோக்கி வரும் எந்த ஒரு ஏவுகணைகள், ட்ரோன்களையும் துல்லியமாக அடையாளம் காட்டும் திறன் கொண்டது.
இந்த S400 அமைப்பின் 5 படைப்பிரிவுகளை வாங்குவதற்காக இந்தியா கடந்த 2018 ஆம் ஆண்டில் ரஷ்யாவுடன் ரூபாய் 35000 கோடி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
தற்போது 3 படைப்பிரிவுகள் செயல்பாட்டில் உள்ளன. மீதமுள்ள இரண்டும் வரும் 2026 ஆம் ஆண்டுக்குள் தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு S400 படைப்பிரிவும் 2 பேட்டரிகளைக் கொண்டது. ஒவ்வொன்றும் 6 லாஞ்சர்கள், 1 கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு, கண்காணிப்பு ரேடார் ஆகியவற்றைக் கொண்டது.
இதன் ஒவ்வொரு பேட்டரியும் 128 ஏவுகணைகளை தாங்கும் திறன் கொண்டவை என கூறப்படுகிறது. சமீப ஆண்டுகளாக இந்தியா தனது வான்வழி தாக்குதலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. அதில் மிகவும் முக்கியமான ஒன்று S400 சுதர்சன் சக்ரா வான் பாதுகாப்பு அமைப்பாகும்.
ராணுவ பலம் மிகுந்த நாடாக இருக்கும் இந்தியாவை எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் தொட்டுப் பார்க்க முயன்றால் அவர்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு பதிலடி இருக்கும் என்பது இந்த பஹல்காம் தாக்குதலில் இருந்து தீவிரவாதிகள் உணர்ந்து இருப்பார்கள்.