இந்தியாவில் மட்டும் காணப்படும் 6 அரிய வகைப் பறவைகள் எவை தெரியுமா?

Rare birds
Beautiful birds
Published on

ம் இந்திய நாட்டில் வாழ்ந்து வரும் பலவகை உயிரினங்களில், சில வகை விலங்குகள் மற்றும் பறவையினங்கள் எண்ணிக்கையில் குறைந்துகொண்டே வருகின்றன. மக்கள் தொகை அதிகரிப்பே இதற்கு முக்கிய காரணம் எனலாம். தற்போது, உலகில் எங்குமே இல்லாமல் இந்தியாவில் மட்டுமே காணப்படும் 6 வகை அழகு மிக்க பறவைகள் எவை என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

இந்தியன் பீ காக்: 

இது இந்தியாவின் தேசியப் பறவையாகும். உலகிலேயே மனதில் நிற்கக்கூடிய அழகிய பறவைகளுள் மயிலும் ஒன்று. இதன் அழகின் ரகசியம், அதன் நீண்ட, வித விதமான வண்ணங்களால் வடிவமைத்த இறகுகளாலான தோகையாகும். ஆண் மயிலுக்கு மட்டுமே தோகை உண்டு. பெண் மயிலைக் கவர, அது தோகை விரித்து நடனமாடுவது தனித்துவம். 'பீ ஹென்' எனப்படும் பெண் மயில் மிக அடக்கமான குணம் கொண்டது.

தி கிரேட் இந்தியன் பஸ்டர்ட்: 

எண்ணிக்கையில் 150 க்குள்ளாகவே இருக்கும் இந்தப் பறவை, அழிவின் விளிம்பில் இருப்பதாகவே எண்ணலாம். ஒரு காலத்தில் இந்திய துணைக் கண்டம் முழுவதும் வாழ்ந்து வந்தன.

இப்போது ராஜஸ்தான், குஜராத் மற்றும் மஹாராஷ்ட்ராவின் ஒரு பகுதியில் மட்டுமே காணப்படுகின்றன. கனமான உடம்பு மற்றும் நீண்ட கால்கள் கொண்ட இப்பறவை, தரையில், பூச்சி, புல், விதை போன்றவற்றை உட்கொண்டு தரையிலேயே வாழ்பவை.

இதையும் படியுங்கள்:
உறவின் ஆழம் அதிகரிக்க..!
Rare birds

தி ஹிமாலயன் மோனல்: 

மயக்கும் அழகு கொண்ட ஒரு வகை கோழி இனம். நேபாளம், பூட்டான் ஒட்டிய உயரமான இமய மலைப் பகுதியில் வாழ்கின்றன. 

எமரால்டு க்ரீன், டீப் ப்ளூ, ரிச் பர்ப்பிள் மற்றும் சிவப்பு  நிறத்திலான, அதிர்வலைகளை உண்டுபண்ணக் கூடிய  இறக்கை கொண்ட இப்பறவை மலைப்பிரதேசத்தின்  கண் கவரும் ஆபரணமாகத் திகழ்கிறது.

 தி ஒயிட்-பெல்லீட் ஹெரான்: 

இந்தியாவில் மட்டுமே காணப்படும் அபூர்வமான பறவை. எண்ணிக்கையில் சுமார் நூறு மட்டுமே இருப்பதாக தெரிகிறது. அடர் நிறத்தில், நீண்ட இறக்கையும், வெள்ளைநிற வயிறுமாக பிரமபுத்திரா நதிக்கரையில் நீண்ட அலகைக் கொண்டு நீர் வாழ் உயிரினங்களை பிடித்து உண்ணும் அழகே தனி.

தி நிக்கோபர் பீஜியன்: 

புறாக்களில் தனித்துவம் கொண்ட இனம். நிக்கோபர் தீவில் மட்டுமே காணப்படுகிறது. மெட்டாலிக் க்ரீன் மற்றும் ப்ளூ நிறம் கலந்த இறகு கொண்டது. இதன் நீண்ட, நேர்த்தியான 

வால் பகுதி மற்றும் கலர்ஃபுல் இறகுகளுடன் கூடிய  உடல், ஆகியவை அந்த வெப்ப நிலைக் காடுகள் நிறைந்த தீவில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் பறவையாக உலா வருகிறது.

இந்தியன் வல்ச்சர்: 

ஒரு காலத்தில் எண்ணிக்கையில் அதிகமிருந்த இப் பறவைகள் நாளடைவில் குறையத் தொடங்கியுள்ளன. கால் நடைகளுக்காகத் தரப்படும் டிக்ளோஃபெனக் என்றதொரு மருந்து வல்ச்சர்களுக்கு விஷத்தன்மை கொடுப்பதாக உள்ளதே இதன் காரணமாகக் கூறப்படுகிறது. ஈக்கோ சிஸ்டத்தைப் பராமரிப்பதில் வல்ச்சர்களின் பங்களிப்பு அளப்பரியது. இறந்துபோன விலங்குகளின் உடலை கூட்டமாக வந்து உட்கொண்டு, நோய் பரவலைத்த தடுக்கும் செயல் பாராட்டுக்குரியது.

இதையும் படியுங்கள்:
அலங்கார மரங்கள் தரும் அற்புத பயன்கள்!
Rare birds

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com